தொலைக்காட்சியா, அழுகாச்சியா?

முதலில் மெகா சீரியல்களில் ஆரம்பித்தது அழுகை.

அழுகாச்சிக்கு இருக்கும் மார்க்கெட் வால்யூவைப் பார்த்துவிட்டு அழுகாச்சி ஸ்பெஷலாக நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ ஆரம்பித்தார்.

தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.

அப்புறம் விசுவின் டாக் ஷோவில் அழுதார்கள்.

அதற்கப்புறம் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பாட்டுப் போட்டிகளில் அழுகை, நீயா நானாவில் அழுகை என்று அழுகாச்சியின் ஆட்சி பரவ ஆரம்பித்தது. இன்றைக்குப் பார்க்கிறேன் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் அழுகிறார்கள்!

இப்படியே போனால் செய்திகள், ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது.

ராசிப்பலன்களில் விஷால் கண் சிவக்க தோன்றுகிறார்.

“கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி பேச்சு நின்று விடுகிறது.

அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக

“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்.

செய்திகளில் தலைவிரி கோலமாக மீரா.

“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

*********************************************************************************************************

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஹைதராபாத்தில் ஒரு குருக்கள் தன் வீட்டுக் கூரையைப் பிய்த்து பஸ் ஸ்டாப்பில் வெய்யிலில் கஷ்டப்படுகிறவர்களுக்காகக் கொடுத்திருக்கிறார்.

திருடுகிற குருக்கள், பொம்பளைப் பொறுக்கி குருக்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் விளம்பரம் பெருகிறார்கள். பேச்சு வராத குழந்தை கூட அவர்கள் பேரைச் சொல்கின்றன.

ஸ்ரீனிவாசாச்சார்லு மாதிரி நல்லது செய்கிற ஆசாமிகளைப் பற்றி எழுத நம்ம ஜனங்களுக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் வந்து தடுத்து விடுகிறது.

இதைப் பார்த்தால் இன்னும் நாலு பேர் நல்லது செய்ய மாட்டார்களா என்கிற நப்பாசையில் அதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஜேபெக் இணைப்பைப் பாருங்கள்.

40 Responses to தொலைக்காட்சியா, அழுகாச்சியா?

  1. //“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்// முக்கியமா அந்த கை ஜாடை! எப்புடி சார் இப்படி எல்லாம் உங்களுக்கு தோணும்? ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன். குட்மார்னிங் இண்டியா, வணக்கம் தமிழகம் மாதிரி காலங்கார்த்தால வரும் நிகழ்ச்சிகளிலும், இந்த ட்ரெண்டு ஆரம்பித்துவிடும் போல இருக்கு சார். இனிமே, காலேல டீ.வீ போட்டாக்கூட ஒரே ஒப்பாரியாத்தான் இருக்குமோ? அந்த நாள் உருப்பட்டா மாதிரி தான். டீவீயே பார்க்குறதில்லை!

  2. ஜவகர்,

    சைக்கிள் கேப்பிலே கொஞ்சம் ஆட்டோ ஓட்டிக்கிறேன்.

    நிஜமல்ல கதை

    http://simulationpadaippugal.blogspot.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

    - சிமுலேஷன்

  3. //தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.

    ha….ha….

    //“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

    ha….ha…
    ஆபிசில் இருக்கும் போது உங்க பதிவை படிக்க கூடாதுன்னு முடிவெடுத்துவிட்டேன்.

  4. ஸ்ரீனிவாசாச்சார்லு குருக்களுக்கு எனது வாழ்த்துக்கள், கடவுள் அவரை நன்றாய் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  5. ம் :)

  6. //தொலைக்காட்சியா, அழுகாச்சியா?//
    ellam TRP rating pannura velai …”blogger kku theriyuma channel loda vali” …….”sivananda salai” sithargala thavara mathavanga yellam target achieve pannalanna trouser kazhatapadum abayathil ullavargal than ……….velu

  7. Appada….was waiting for ur post for long..thnks for making us laugh once again.all ur post’s are lik having a coffee in a stressed schedule. plz post frequently…

  8. ஆங், சொல்ல மறந்துட்டேன், அந்த சாஸ்திரிலுவுக்கு ஜே!!!

  9. //ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது// இதற்க்கு பின் வந்த கன்னி ராசி பலன் அடக்கமுடியாத சிரிப்பை வரவைத்தது …அதுவும் சூப்பர் சிங்கர் போட்டிகளை பார்த்தால் , முடிவுகள் சமயத்தில் பாகு பாடு இல்லாமல் எல்லாரும் அழுகிறார்கள்… ஸ்டியோ போய் பார்த்தால் தெரியும் கேமிரா மேனும் அழுது கொண்டிருப்பார்கள்.

  10. சரி சின்னத்திரை வாணாமுன்னு பெரிய திரை பக்கம் போனம்னா அங்க படத்தப்பாத்துட்டு வெளியில வந்த உடனே வர பீலிங்ஸ்ல அங்காடி தெருவில நின்னு அழணம்போல தோணுது…

  11. ஸ்ரீனிவாசாச்சார்லு மாதிரி நல்லது செய்பவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்…….நல்லது பாரட்ட,பாரட்ட..அல்ல…து தொலையும்…செய்திவோடு போட்டது பாராட்டுக்குரியது….

  12. (கண்களில் கண்ணீர் மல்க சொல்கிறேன்) நல்ல பதிவு. அடிக்கடி (விக் விக் ) இந்த மாதிரிப் பதிந்து எங்களை சிரிக்க வையுங்கள். (சிரித்தாலும் கண்ணீர் வரும்!)

  13. :)

  14. பை தி பை, நான் போன வருஷம் பார்த்தப்போவே டீலா நோ டீலா நிகழ்ச்சியில ஒப்பாரி தான் வைச்சாங்க. அட நிஜம்மா சார். வேணா இந்த லின்க்கை பாருங்களேன்
    http://ananyathinks.blogspot.com/2009/12/11.html

  15. தொலைக்காட்சியா, அழுகாச்சியா? சூப்பர் தான் போங்க… அழுகாச்சிய சொல்லி சிரிக்க வெச்ச உங்களுக்கு ஒரு ஓ போடறேன்

  16. பசுமாடுகளிடம் இருந்து பாலை ஒட்ட ஒட்ட கறந்து பசு கிழடு ஆனதும் அதையும் அடிமாட்டுக்காரனிடம் விற்றுவிட, வாங்கியவன் அந்த பசுமாட்டைக் கொன்றால் கொல்லுபவன் பாபம் செய்கிறானாம். குலதெய்வத்திற்கு ஆடுகோழி பலி இட தடைவிதிக்க தூண்டுதலாக இருந்தவர்கள் தான் இன்று பன்றி இறைச்சியை பதமாக சமைப்பது பற்றி எழுதுகிறார்கள்.இந்த ஆந்திர பார்ப்பனனுக்கு ஏன் இந்த விளம்பரம்?இது உங்களுக்கே அதிகமாகப்படவில்லையா?

    • நிச்சயமாக இது எனக்கு தப்பாகப் படவில்லை கண்ணன்ஜி. ஒருத்தரைப் பாராட்டுவது, விமரிசிப்பது இரண்டில் எதையுமே ஜாதி அடிப்படையில் செய்வது அறியாமை என்று உறுதியாக நம்புகிறவன் நான். நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுவதுதான் பண்பு.

      உங்க புது புரஃபைல் போட்டோ பிரமாதமாக இருக்கிறது. சினிமா எதிலும் நடிக்கிற ஐடியா இருக்கா?

  17. //உங்க புது புரஃபைல் போட்டோ பிரமாதமாக இருக்கிறது. சினிமா எதிலும் நடிக்கிற ஐடியா இருக்கா?

    //

    இப்படி கிண்டல் பண்ணினா அவர் எப்ப்டி உங்க ப்லொக் பக்கம் வருவார்

    • ஜெய், சும்மா சிண்டு முடியாதிங்க. அவரு எங்க ஊர்க்காரரு. நாங்க ரெண்டு பேரும் பாய்-பாய், தோஸ்த்-தோஸ்த். காடம்பாடி ஆளுங்க பர்ஸனாலிட்டியே தனி!

  18. ஆமாம்க என் வீட்டுக்கு பக்கத்தில் எப்போதுமே சினிமா பட்பிடிப்பு நடக்கும்,அப்போதே இயக்குனர் பேரரசுவிடம் வாய்ப்பு கேட்டது.அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.பார்ப்பனரலாதோர் நடிகன் ஆனால் என்ன எதேனும் தப்பா?

    • //பார்ப்பனரலாதோர் நடிகன் ஆனால் என்ன எதேனும் தப்பா?//

      அப்படித் தப்பா இருந்தா கமலஹாசனைத் தவிர பாக்கி எல்லாரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்!

      முன்னே இருந்த போட்டோவை விட இதிலே பர்ஸனாலிட்டி இன்னும் நல்லா இருக்குன்னு ஒரு காம்ப்ளிமெண்ட் குடுத்தேன். அதுக்கு ஏன் இந்த ரியாக்‌ஷன்…. நிஜமாவே ரசிச்சு சொன்ன காமெண்ட்தான் அது.

      பை தெ வே…. பேரரசு கிட்ட சான்ஸ் கிடச்சா விட்டுடாதீங்க. உங்க கெட் அப்புக்கு ஒரு நல்ல ஆக்‌ஷன் ஹீரோவா வரலாம்!

  19. திரு .ஜவஹர் நான் எப்போதும் உங்கள் எழுத்தை படிப்பவள்,ஆனால் பின்னூட்டமிட்டதில்லை.மேலே கோவி.கண்ணன் என்னும் ஒரு ஜாதிவெறியரின் பின்னூட்டங்களை மட்டுறுத்தியிருக்கலாமே?விட்டால் பார்ப்பனர்களை ஏகே 47 எடுத்து சுட்டுவிடுவார் போலும்.இது போன்ற அரை லூசுத்தனமான கருத்துக்கள் தேவையா?அந்த சாஸ்திரிகள் தன் ஏழ்மையிலும் செய்யும் நல்ல காரியங்களை இவரால் இவ்வளவு வசதி இருந்தும் செய்ய முடியுமா சார்?சொல்லுங்கள்.இனி இந்த பிளாக்கிற்கு நான் வரவே போவதில்லை.நீங்கள் ஜாதிவெறியர் பட்டியலில் இணைய வேண்டாம்.

    • கோபப்படாதீங்க காயத்ரிஜி. கோபம் நண்பர்களை இழக்கச் செய்யும். அவர் கருத்து அவருக்கு. என் கருத்து எனக்கு. யாருமே தங்கள் கருத்தை இன்னொருத்தர் ஒப்புக்கணும்ன்னு நினைக்கக் கூடாது. கண்ணனும் நினைக்க மாட்டார். வாதப் பிரதிவாதங்கள் ஒரு விஷயத்தைப் பற்றின அறிவை வளர்க்க ரொம்ப அவசியம். யார் தங்கள் கருத்தை எப்படிச் சொன்னாலும் அதில் இருக்கிற கருத்துக்கு மட்டுமே பதில் சொல்லிப் பழகிட்டேன். உணர்வுகளுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா தடம் மாறிப் போய்டுவோம்.

      கோபப்படாம உங்க ஆதரவைத் தொடருங்க. ஒரு வாசகரைக் கூட இழக்க எனக்கு மனசு வராது. என் கருத்தை நான் எம்ஃபசைஸ் பண்ணிட்டேன். அது போதும்ன்னு நினைக்கிறேன்.

  20. அந்த அழுகாச்சி செய்திகள் பற்றி படித்து சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் (அலுவலகத்தில்).

    நன்றி!

    அன்புடன்
    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

  21. இது ஒரு இதமான வலைப்பூ …நித்தம் வாசிக்கும் வாசகன் என்கிற முறையில் சில வார்த்தைகள் .. இந்த வலைப்பூவில் , மேலாண்மை கலந்து , தரமான நகைச்சுவை மேலிட பதிவுகள் இட்டு வருகிறார் … வார்த்தை விளையாட்டு , நடைமுறையில் வரும் வேடிக்கைகள் , தினம் தினம் வாழ்வில் ஏற்படும் சுக அனுபவங்கள் , சிக்கல்கள் ….கொஞ்சம் கூட படிப்பவர்களுக்கு திகட்டாமல் அளித்து வருகிறர் ஜவஹர் அவர்கள் …… கோவியாரே இங்கு போய் சாதியத்தை நுழைக்க வேண்டுமா ? உங்கள் அவஸ்த்தையும் , ஓரிரவில் மனித குலத்தை உய்விக்க போகும் துடி துடிப்பும் புரிகிறது ..உங்களுக்கே தெரியும் சாதியம் நுழைந்தால் , பின் தனி மனித நாராசார தாக்குதலுக்கு போகும் இதை பல வலைப்பூக்களில் பார்த்து வருகிறோம் … வேறு விவாதங்கள் இல்லை ..இம்மாதிரி வலைப்பூக்களை தயவு செய்து விட்டுவிடவும் ….. இம்மாதிரி சர்ச்சை கருத்துகளை தான் இங்கே விட சொன்னேன் ..மற்றபடி நகைச்சுவை, மேலாண்மை கருத்துகளை மகிழ்வாக பகிர்ந்து கொள்வோம் ….
    ( இதை தட்டும் நேரம் , ஒரு சிரிப்பு காட்சி தொலைக்காட்சியில்…. மலேயாவோ ,சிங்கையோ தெரியவில்லை …விவேக் தங்க முருகன் சிலை அருகில் நின்று கொண்டிருப்பார் , முருகனின் வேண்டுதல் தங்க வேல், இருகன்னமும் ஊடுருவ மலேய / சிங்கை பெண்ணால் குத்தப்பட ,விவேக் ” தமிழனுக்கு எமோஷன் தாண்டா பிரச்சினையே ”’ என்று சொல்வார் )

  22. உங்கள் தன்மையான கருத்துக்கு நன்றி திரு.ஜவஹர்.

  23. கண்ணன்ஜி நாம எடுத்துகிட்ட தலைப்பு இது இல்லை. ஒருத்தர் நல்ல காரியம் பண்ணும் போது பாராட்டலாமா வேண்டாமாங்கிறதுதான் சப்ஜெக்ட். அதுலயிருந்து டீவியேட் ஆகிற பின்னூட்டங்களை தவிர்க்கிறது நல்லது. விவாதம் இந்த ரீதியில போறதை நான் விரும்பல்லை. தயவு பண்ணி சப்ஜெக்ட்டுக்கு ரிலவண்ட்டான கருத்துக்களை மட்டும் பதிவு பண்ணுங்க. ப்ளீஸ் கோ ஆப்பரேட்!

  24. எனது இடுக்கையை பார்வை இட அழைக்கிறேன்., உங்களுக்கு நன்றி சொல்லும் இடுகை . ஆதலினால்

  25. எழுத்திலும் பேச்சிலும் நிதானம் தவற வேண்டாமே கோவி.கண்ணன் சார்.. நல்ல பதிவை படித்துவிட்டு, இதுபோன்ற பின்னூட்டங்களைப் பார்க்கும் போது வருத்தம் தான் ஏற்படுகிறது..

  26. நல்லது செய்யரது பாராட்ட ஒரு மனசு வேனும்முன்னு உங்க பதிவு சொல்லுது!.

    பாராட்டிடுவோம்….

  27. சார் அருமையான கட்டுரை,இங்கு ஜாதி வெறி பின்னூட்டமிடும் கோவி.கண்ணன் என் பதிவிலும் சம்பந்தமே இல்லாமல் ஜாதி பேசுகிறார்.இத்தனைக்கும் நான் பாப்பானும் இல்லை சார்.பாப்பான் மேல் இந்தாளுக்கு உண்மையில் என்ன கோபம் ?எப்படி இந்த ஆள் மனநோயுடன் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார்?கொடுமை சார்.நாங்க உங்க எழுத்தை தொடர்ந்து படிப்பவர்கள்,இங்கு காமெடிக்காக தான் வருகிறோம்,ஜாதி,மதம் பேச்சுக்களுக்காக அல்ல.நேரில் பார்த்தால் கேப்பேன்.இந்த 21ஆம் நூற்றாண்டுல ஜாதி பேசும் ஆச்சரியமான நபர்.

    • என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஷண்முகம் சார். உங்க பின்னூட்டத்தில சின்ன மாறுதல்கள் செய்திருக்கிறேன். புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.

  28. திரு.கோவி கண்ணன் அவர்களுக்கு,
    என நண்பர் உங்கள் பொறுப்பற்ற பின்னூட்டங்களுக்கு சுட்டி அனுப்பியிருந்தார்.இது உங்களுக்கே நியாயமா?பார்ப்பனர் அரசை எதற்கும் எதிர்பார்க்காமல் நாங்களே எங்களை முன்னேறிக்கொண்டு நேர்மையானதொரு பாதையில் போய்க்கொண்டு இருக்கிறோம்.
    அதை விளக்க வேண்டியதில்லை.
    எவ்வளவோ தர்மம் செய்தாலும் அதை போட்டோ எடுத்து போட்டு விளம்பரம் செய்வதில்லை சார்.எங்கள் மேல் என்ன கோபம்?வீட்டேத்தியாக பேச வேண்டாம்.
    மீண்டும் பாப்பான் குடுமியை அறுப்போம் என்றெல்லாம் பின்னூட்டம் பார்ஹ்த்டேன்,மிகவும் வருந்தினேன்.நாங்கள் உங்கள் கண் முன்னால் வாழகூடாதா?

    ஜாதிவெறியை விட்டுவிடுங்கள் சார்.
    நீங்கள் காரில் செல்லும் போது பெரிய விபத்து ஆகி,உங்கள் குடும்பமே ரத்த் வெள்ளத்தில் இருக்கும்போது பாப்பான் ரத்தம் கொடுத்தால் வேண்டாம் என்பீரா?
    சொல்லுங்கள்.

  29. பதிவிற்கு சம்பந்தமில்லா, அநாகரிக பின்னூட்டங்களை மட்டுறுத்தியமைக்கு தொடர் வாசகன் எனும் முறையில் நன்றி…

    • பத்மனாபன், உண்மையில் கொஞ்சம் மனக் கஷ்டத்தோடதான் அதைச் செய்தேன். திரும்பத் திரும்ப வேண்டிக் கேட்டும், அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி ரிக்வெஸ்ட் செய்தும் தொடர்ந்ததாலதான் நீக்கினேன். கண்ணன் நிச்சயமா நம்மைப் புரிஞ்சிக்குவார்ங்கிற நம்பிக்கை இன்னம் எனக்கு இருக்கு.

  30. //அதில் இருக்கிற கருத்துக்கு மட்டுமே பதில் சொல்லிப் பழகிட்டேன். உணர்வுகளுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா தடம் மாறிப் போய்டுவோம்.//

    படிச்சுக்க வேண்டிய விஷயம்!! நன்றி சார்.

    சாஸ்திரிகளுக்கும் பாராட்டுகள்!!

  31. என் அம்மாவிடம் இதை காண்பித்தேன்,மிகவும் வருத்தம் கொண்டார் சார்.வெளியே போகவே இனி பயமாய் உள்ளது என்கிறார்.என் அம்மாவிடம் நல்ல கெட்ட விஷயங்களை பகிர்வேன் சார்.ஆனால் இது அவர்களால் தாங்கிக்கொள்ளவில்லை.

  32. enna nagaichauvai unarvu ungallukku!sirappana pathivu. sabaash. carry on.

  33. ஸ்ரீனிவாசாச்சார்லு வுக்கு ஒர் பூங்கொத்து!

  34. திருஷ்டி என்பது உள்ளது . விட்டு தள்ளுங்கள்
    நீங்கள் மேலும் பல நல்ல பதிவுகள் தர கடவுள் ஆசிர்வாதம்
    செய்ய வேண்டும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s