ஹைக்கூ என்கிற கவர்ச்சிக் கன்னி

ஹைக்கூ ஒரு சுவாரஸ்யமான கவிதை வடிவம்.

ஐந்து நாள் ஆட்டமாக ஆரம்பித்து ஐம்பது ஓவர் ஒரு நாள் ஆட்டமாக உருவெடுத்து இன்றைக்கு இருபத்து ஓவர் ஆக மாறியிருக்கும் கிரிக்கெட் மட்டுமில்லை. மடித்து வைத்துக் கொள்கிற தொலைபேசிகள் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிற எப் எம் ரேடியோக்கள் ப்ளூ டூத் ஸ்டீரியோ என்று எல்லாமே கைக்கு அடக்கமான கவர்ச்சி வடிவை அடைந்திருக்கும் போது கவிதையை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?

ஹைக்கூவின் பொதுவான இலக்கணம்:

நல் செட் போல ஒரு வாக்கியத்தை உவமையாக சொல்லி அது என்ன என்பதை அப்புறமாக சொல்வது.

ரொம்பப் பிரபலமான ஹைக்கூ

அட ஒரு மலர் தரையிலிருந்து
கிளைக்குப் போகிறதே
வண்ணத்துப் பூச்சி

என்பது.

இந்த இலக்கணத்தை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா பாருங்கள். இதோ என் கன்னி ஹைக்கூ:

அவள் உயர்த்த உயர்த்த
நான் தாழ்ந்தேன்
ஆற்றைக் கடக்கும் பெண்

உதைக்க வருபவர்களுக்காக கொஞ்சம் கௌரவமாக ஒன்று

அவனுக்கு ஆயுள் பூரா டே ஷிப்ட்
அவளுக்கு அன்றாடம் நைட் ஷிப்ட்
எப்படி ஆயிரம் நட்சத்திரக் குழந்தைகள்?

நீங்கள் ரசித்தவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

Advertisements

7 comments

 1. பாடப் புத்தகத்துக்கு நடுவே வைத்து அந்த 16 வயது
  ரசிக்கும் அந்தப் படத்தில் இருப்பவளுக்கு
  இப்போது வயது 61!

 2. முள்முடியும் சிலுவையும்
  என்னதான் யேசுவாய் இருந்தாலும்
  வலிக்காமலா இருந்திருக்கும்?
  – எழுதியவர் மறந்துவிட்டது.

  இதன் வேறு!

  என்னதான் பொன்மன செம்மலாய் இருந்தாலும்,
  சென்னை வெயிலில் ஃபர்குல்லாய்
  வியர்க்காதா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s