ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதுகள் அடைந்ததை இந்தியாவே கொண்டாடுகிறது.

தமிழன் என்கிற வகையில் நமக்கெல்லாம் இரட்டிப்புப் பெருமை.

ரஹ்மான் ஒரு நல்ல மனிதர். கடமையைச் செய் பலனை எனக்கு விட்டுவிடு என்று பகவத் கீதை சொன்னதை செவ்வனே கடை பிடிக்கிறவர். புகழ் அவர் மண்டைக்கு இன்னும் ஏறவில்லை.

உலகமே அவரைப் பாராட்டுகிற வேளையில் அவர் குறித்தான சின்ன குறைகளை சொல்வது பொருத்தமில்லாமல் இருக்கலாம். அனால் என்னுடைய இந்த விமர்சனங்களுக்கு ரஹ்மான் ரசிகர்கள் எவ்விதம் ரியாக்ட் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் அவர்களுடன் நட்பான விவாதத்தில் இறங்கவும் ஆவல்.

முதலாவது: வந்தே மாதரம் பாடலை அவர் ரிகம்போஸ் செய்தது அதை டிகம்போஸ் செய்து விட்டது. ஒரிஜினல் மெட்டில் இருந்த தேச பக்தி உணர்வு சிதையுண்டு காதல் தோல்வி போன்ற ஒரு உணர்வு மேலோங்கி இருக்கிறது.

தொட்டால் பூ மலரும் பாட்டின் ரிமிக்ஸ் ஒரு உயர்ந்த கம்போசெருக்கு இழைக்கப்பட்ட அவமானம். ஒரிஜினல் மெட்டில் இருந்த காதல் உணர்வு சிதையுண்டு ரயில் பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்பது மாதிரி ஒரு பாவம் தொடக்கத்திலும் அதற்கப்புறம் காமமாகவும் அப்புறம் வெறும் இரைச்சலாகவும் இருக்கிறது.

ஆரம்ப காலப் பாடல்களில் மெல்லிய மேலோடிக்களில் ட்ரம்மை குமுக்கி ராட்சசன் கையில் சிக்கிய இளவரசி போல அந்தப் பாடல்கள் தடுமாறும். இப்போது தேவலை.

அவரது பாடல்களில் நான் பார்க்கிற இன்னொரு ஹாண்டிகாப் பல்லவியில் இருக்கும் சுகம் சரணத்தில் தொடராது. அதற்க்கு சிறந்த உதாரணங்கள்: ஒரு தெய்வம் தந்த பூவே, சஹாரா பூக்கள் போன்ற பாடல்கள்

இவ்வளவையும் மீறி என்னுயிர் தோழியே, நிலா காய்கிறது போன்ற ரத்தினங்கள் அவ்வப்போது வருகின்றன.

Advertisements

4 comments

  1. `வந்தே மாதரம் பாடல் பற்றி….. எனக்கும் அதே கருத்துதான் என்றாலும்…..

    1) First impression is the best impression என்பார்கள். அது போல உங்களுடைய, என்னுடைய ‘teen’ பருவத்தில் அல்லது எப்பவுமே முதலில் கேட்ட வடிவம் ஒத்துப் போகிற அளவு அதன் அடுத்த உருவம் கவராது! அந்த வகையில் அஆனமக்கு முதல் வடிவம் உயர்ந்தது….ஆனால்…..

    2) அந்தந்த கால கட்டத்துக்கு என்று ஒரு style இருக்கிறது. 70 களிலேயே MKT பாகவதரை ரசித்தவர் பழமைவாதியாக கருதப் பட்டார். இந்த காலகட்டத்திற்கு, அதாவது இந்த ‘வந்தேமாதரம்’ new(!) போடப் பட்ட காலத்து இளைஞர்கள் விரும்பிய style இல அது போடப் பட்டதால் அவர்கள் விரும்பி அந்த சாக்கில் கொஞ்சூ…….ண்டு தேசிய உணர்வு வந்தால் தப்பு இல்லையே…..

    ‘தொட்டால் பூ மலாரும்’ மட்டுமல்ல… இந்த remix என்ற பகற் கொள்ளையையே தடை செய்ய வேண்டும்.

  2. ரத்தினங்களை சொல்ல வேண்டுமானால், காதல் வைரஸ் படத்தில் “சொன்னாலும் கேட்கவில்லை கன்னி மனது” என்று ஒரு மெலடி உன்னி கிருஷ்ணன் குரலிலும், ”எந்தன் வானின் காதல் நிலவே” என்று ஒரு சுகமான பாடல் எஸ்.பி.பி. குரலிலும் இருக்கிறது. பரிந்துரைக்கிறேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s