ஓரினச் சேர்க்கையும் அடல்டரியும்

ஓரினச் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட்டே ஆசி வழங்கி விட்டது.

மக்கள் தொகைக் குறைப்புக்கு இதை விட சிறந்த வழி கிடையாது என்று அந்த நீதிபதி நினைத்திருக்கலாம்.

மும்பை மூர்த்தியின் கார்டூன் பார்த்து நான் நினைத்தது:

இது மாதிரி ஜோடிகளை அடல்டரி பாதிக்குமா-பாதிக்காதா?

cartoon

Advertisements

12 comments

 1. இதிலும் முக்கோணக் காதல்கள் இருக்குமா?

  இனி சினிமாக்களில் இந்த மாதிரி ஜோடிகள் சேரத் தடை செய்யும் கிராமம், வில்லன்கள் துரத்த, இரண்டு பெரும் ஊரை விட்டு ஓடும் காட்சிகளையும்,

  இரண்டு பெரும் மரத்தை சுற்றி சுற்றி ஓடி, பாட்டுப் பாடும் (இரண்டுமே ஆண் குரல் அல்லது இரண்டுமே பெண் குரல்!..அதை எப்படி Duet என்று சொல்வது?) காட்சிகளையும் (ஆண்கள் மட்டும் குழுவினராக வெள்ளை உடையில் பின்னணியில் ல லா லா பாடும் காட்சி…)

 2. ஓரின சேர்க்கை வந்து விட்டால் ஆண்::பெண் சதவிகிதம் குறையும். மாப்பிள்ளைக்கு பெண்ணும், பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பதும் அரிதாகிவிடும். ஜனத்தொகை குறையும், ஓரின சேர்க்கை முறையை வருங்காலம் கற்கும் (Out of desperation). டார்வின் கூறிய natural selection தத்துவப்படி பார்த்தால், கொஞ்சம் கொஞ்சமாக முறையான சேர்க்கை முறை அழிந்து Asexual Reproduction மீண்டும் துவங்கும். சேர்க்கைக்கு இருவர் வேண்டும் என்பதே அழிந்து மறந்து High Intellectual microbial behavior ஐ கடைப்பிடித்து, அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தானியங்கி ஜீவராசிகளாக மனிதர்கள் அலைவார்கள். அவர்களுக்கு வெளிப்புற Reproductive organs இருக்காது. அந்த பாகங்களுக்கு தேவையான harmones தேவைப்படாது. கல்லீரல் போதிய harmone களை சுரக்காமல் சுருங்கும். மனிதனுக்கு உணவு உட்கொள்ளுதலுக்குப் பின் புரதங்களை சரியாக பிரித்து செரிக்காது. நான்கில் ஒரு பாதி ரத்தம் கல்லீரல் வழியே செல்கிறது.

  அது சுருங்குமாயின் இதயம் தன் பங்கிற்கு குருதியை குறைத்து அனுப்பும். செல்களுக்கு தேவையான அளவு ரத்தமும் பிராணவாயுவும் செல்லாது. கல்லீரல் கொழுப்பை கட்டுப்படுத்தும். அதுவும் குறையும். மனிதன் சாப்பிடும் ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான். உடலுறுப்புக்கள் சுருங்கும். சுவாசம் அதே அளவில் இருக்கும். ஆனால் செல்களுக்கு glucose கிடைக்காது. சுவாசம் மெதுவாக இருக்கும். கை கால்களில் motor capabilities குறையும். இதனால் எலும்புகள் தடித்து செயலிழந்து கொஞ்சம் கொஞ்சமாக tendon மட்டும் மிஞ்சும். ஒரு முழு மனிதனாக இருந்தவன் சிறுக சிறுக ஒரு உருண்டை வடிவம் அடைவான். தசை அசைவுகள் காரணமாக நகருவான். பேசும் சக்தி இழப்பான். மூச்சு மட்டும் புஸ்ஸ் புஸ்ஸ் என்று விடுவான். ஒரு vegetative state தான் இதன் முடிவு.

  இந்த மாற்றம் நமக்கு தேவையா? 🙂 இயற்கை விதிகளுடன் போராடுவதை விட, “Yield to the temptation..Taste the forbidden fruit”..அதுவே சிறப்பான வாழ்கை 🙂

 3. அருணின் கருத்துக்களைப் படித்தபின் தான்… ஆஹா…. இதுல இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுது….

 4. இந்த சப்ஜெக்டைக் கேள்விப் படும்போதெல்லாம்
  ஏதோ அசிங்கத்தை மிதித்துவிட்டது போல ஓர்
  உணர்ச்சி தோன்றியது உண்மை.
  பன்றிக் காய்ச்சல் பரவுகிறது என்று கேட்கும்பொழுது
  கடவுள் மீண்டும் வராக அவதாரம் எடுக்க ஆரம்பிதுவிட்டாரோ
  என்று ஒரு சந்தேகம்.
  தீர்ப்பு கேட்டவுடன் உலகம் அழியத் தொடங்கியாகிவிட்டது என்று
  தோன்றியது.
  ஆனால் date of expiry 23/12/2012 என்பதுதான் நம்ப முடியவில்லை.
  என்னுடைய எல்லா LIC Policy யும் அதற்குள் Mature ஆகிவிடும் என்று ஒரு சந்தோஷமும்.

 5. இரண்டு பேரும் இணங்கினால் எதுவும் குற்றமில்லை என்பது தான் சாராம்சம்.
  அவர்கள் ஏன் இதை இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் என்பதோடு விடுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.

  மனிதனும் நாயும் என்றோ, மனிதனும் பன்றியும் என்றோ அடுத்தடுதத கட்டங்ளை ஏன் விட்டார்கள் ?

  1. ஆஹா! அற்புதம்… இது நல்ல சாட்டையடி. மிருகங்களை அவமானப் படுத்தினால் ப்ளூ கிராஸ் சும்மா இருக்காது!

 6. >>மக்கள் தொகைக் குறைப்புக்கு இதை விட சிறந்த வழி கிடையாது என்று அந்த நீதிபதி நினைத்திருக்கலாம்

  Ithellam overa theriyaliya? Without knowing completely, how come you can use this statement. Please search and know more about this. This is natural sexual behaviour and not by choice. They cant marry(or be with) opposite sex, hence this judgement. If you cant help, atleast dont try to divert this into some other reasons as you imagine. No body can judge nature.

 7. human ஒன்றியத்தையும் bestial ஒன்றியத்தையும் ஒப்பிடுவதா? வருத்தமாக இருக்கிறது.

  ஆணும் பெண்ணும் சேர்வது இயற்கையென்றால் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்வதில் முரணாகிவிடுமா என்ன? sexual orientation என்பது அவரவர் disposition.

  ஓரினச் சேர்க்கையில் வேடிக்கைக்கோ வேதனைக்கோ என்ன இருக்கிறது? கண்ணன் அர்ஜுனன் நெருக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 8. ‘மக்கள்தொகை குறைக்க’ என்பது கேலியான கருத்து – கொஞ்சம் சிரித்தாலும் அதற்குப் பின் அறியாமை இருந்தால் வருத்தம் தான். ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தான் குழந்தை பிறக்குமா? கண்களைத் திறந்து பார்க்க வேண்டுகிறேன்.

  (கருத்தரிப்பு கடவுள் பிச்சை என்ற குருட்டுப் பார்வையிலிருந்து இப்போது ஆண்-பெண் சேர்க்கையினால் மக்கள் தொகை பெருக்கம் என்ற அளவுக்கு அறிவு வளர்ந்திருப்பது ஓரளவுக்கு நிறைவைக் கொடுத்தாலும்….)

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s