மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்து நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தோற்றவர்கள்தான் சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவற்றை அலட்சியப் படுத்தி விட முடியாது.
தேர்தல் அதிகாரிகளின் நாணயத்தில் நம்பிக்கை வைத்து இந்த எந்திரங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. அவர்களின் ஆசியோடு தவறு செய்ய முடியும் என்பதே இப்போதைய நிலை. ஒரே ஆளே திரும்பத் திரும்ப எனேபிள் செய்து அழுத்திக் கொண்டே இருக்கலாம் என்பது சரியான வடிவமைப்பு ஆகாது. அடையாள அட்டை என்பது சாவடியில் பிரவேசிக்க மட்டுமே பயன் படும்.
போடப்பட்ட ஒவ்வொரு ஓட்டும் எந்த வாக்காளர் அட்டை எண்ணுக்கு எதிராகப் போடப் பட்டுள்ளன என்கிற விவரம் பதிவாகுமா?
ஒரு எண்ணுக்கு எதிராக ஒரு ஓட்டுதான் போட முடியும் என்கிற உத்திரவாதம் இருக்கிறதா?
ஒரு சாவடியில் இருக்கும் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவு செய்ய முடியாது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா?
எல்லா வாக்குகளும் வாக்குப் பதிவுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் போடப் பட்டன என்கிற உத்தரவாதம் இருக்கிறதா?
ஒரு ஓட்டுக்கும் அடுத்த ஓட்டுக்கும் இடையில் லாஜிக்கான நேர இடைவெளி இல்லாவிட்டால் ஒட்டு பதிவாகாது என்கிற உத்தரவாதம் இருக்கிறதா?
எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டதாக வாக்குப் பதிவு இருக்க வேண்டுமானால் அதற்க்கு இரண்டே தீர்வுகள்தான் உண்டு:
ஒன்று: எ டி எம் களில் இருப்பது போல ஸ்வைப் செய்கிற அடையாள அட்டைகள் வர வேண்டும். அதை ஸ்வைப் செய்தால்தான் எனேபிள் ஆக வேண்டும். அதுவும் ஒட்டு பதிவானதும் டிசேபிள் ஆகி விட வேண்டும்.
அல்லது கை ரேகையைப் பதிவு செய்ததும் எனேபிள் ஆக வேண்டும்.
இந்த முறை அமலுக்கு வர வேண்டுமானால் இந்த யோசனை பெருமளவில் பரவ வேண்டும். அது, இதைப் படிக்கிற உங்கள் கையில்தான் இருக்கிறது.
மெயிலிலும் எஸ் எம் எஸ் இலும் இந்த ஸ்வைப் கார்ட் யோசனையை பரப்புங்கள்.
தேசத்துக்கு நம்மால் நல்லது நடக்கட்டும்.
//கை ரேகையைப் பதிவு செய்ததும் எனேபிள் ஆக வேண்டும்.//
I support this view.
நல்ல யோசனைதான்…..
யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்கட்டும்..
நன்றி மதிபாலா.
என் வேண்டுகோளை ஏற்று வலைக்கு விஜயம் செய்ததற்கும், கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாருங்கள் அறிவுரை தாருங்கள்.
தொகுதியில் இருக்கும் வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்பதைவிட அந்த சாவடிக்கு வந்து ஓட்டளித்தவர் எண்ணிக்கையைத் தாண்டியிருத்தல் கூடாது என்பதே சரி
Smart Card may achieve all this and more provided the road to finish is not blocked like the traceable vehicle registration plates.
சாவடிக்கு வந்து ஓட்டளித்தவர்கள் எண்ணிகையை கணக்கிடப் போவதே அந்த எந்திரம்தான். ஆகவே வாக்காளர் எண்ணிக்கையை டேடம் ஆக எடுப்பதே சரி.