அ தி மு க ஏன் தேர்தலைப் புறக்கணிக்கிறது?

அ தி மு க வின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பில் ஒரு ஹிடன் அஜெண்டா இருக்கிறது.

தாங்கள் தேர்தலைப் புறக்கணித்தால்

எத்தனை சதவீதம் பதிவாகிற வாக்குகள் குறைகின்றன?
தங்களுக்கு வர வேண்டிய வாக்குகள் யார் யாருக்கு எவ்வளவு சதவீதமாக ஏறுகிறது?

என்றெல்லாம் பார்க்கிற ஆர்வம் அ தி மு க வுக்கு இருந்திருக்கலாம்.

அவற்றைத் தெரிந்து கொள்ள இதை விட நல்ல சந்தர்ப்பம் இருக்க முடியாது.

ஒருக்கால் தங்கள் வாக்குகள் சரத் குமார் கட்சிக்குப் போனால் அவரோடு கூட்டு வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை விஜயகாந்துக்குப் போய் அவர் கட்சி ஜெயித்தால் இரட்டிப்பு சந்தோஷம்.

அதிக நஷ்டமில்லாமல் ஒரு தியாகத்தையும் அரங்கேற்றின மாதிரி இருக்கும்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Advertisements

9 comments

 1. யோசனை செய்துவிட்டு ஏதாவது காரணம் சொல்லி திரும்பி வருவார்கள். இல்லாவிட்டால் கூட்டு கட்சிகள் கோரிக்கை வைக்கும். அறிக்கை மேல் அறிக்கைகள் வரத்துவங்கும்.

 2. வணக்கம். எனக்கு சொந்த ஊர் தஞ்சை. புரோபைல் படம் உங்களுடையதா. சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி நடத்திய ஏ.வி.ரமணன் மாதிரி இருக்கிறதே.

  நீங்க யோசிச்ச ஏங்கிளிலும் யோசிச்சேன். ஆனா, எதிர்பார்ப்புக்கு மாறா திமுகவுக்கும் சில சதவீதம் ஓட்டுக்கள் போய்விட்டால்?

  1. நன்றி விஜய். படம் என்னுடையதுதான். நானும் பழைய தஞ்சை மாவட்டம்தான். நாகை. தி மு க வுக்குப் போகிற அ தி மு க வாக்குகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்பது என் துணிவு.

   ஏ வி ரமணன் மேல் உங்களுக்கு கோபம் எதுவுமில்லையே?

 3. தேர்தலைப் புறக்கணிப்பதால் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு
  உடனடிப் பலன் எதுவும் இல்லை.
  ஆனால், கட்சித் தொண்டர்கள் — ஏமாந்து போவார்கள் — பல
  காரணங்களால்.
  எனவே, புறக்கணிக்கும் கட்சிகள் – தங்கள் வாக்காளர்களை,
  49(O) பிரிவில் வோட் செய்யும்படித் தூண்டலாம்.
  இதனால் நிறைய advantages உண்டு.
  பணம் வழங்குவோர் – வழங்குவார்கள்.
  வாங்குபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்;
  மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுபவர்,
  வெடி வெடிக்காமல் வேலையைப் பார்ப்பார்.
  on the other hand, திருவாளர் 49(O) அதிக வாக்குகள் பெற்று
  ஜெயித்து விட்டால் — எதிர்க் கட்சிகள் வெடி வெடித்து
  இனிப்பு வழங்கி “துணை முதல்வர் அண்ணாச்சி,
  துவரம் பருப்பு விலை என்னாச்சி? ” என்றெல்லாம் கோஷம்
  போட்டு சந்தோஷப் படலாம்.!

 4. முகப்புப் பக்கம் படத்தில் இருப்பவர்
  நீங்கள்தானா?
  நான் அகண்ட டையையும்,
  ராமராஜன் சட்டையும் பார்த்து
  யாரோ மெடிக்கல் ரெப் – என்று நினைத்தேன்!

  1. மெடிக்கல் ரெப் தான். ஒரு குறிப்பிட்ட ரக மன நோயாளிகளுக்கு மருந்து விற்கிறேன். இன்னும் ஒரு பாட்டில்தான் மீதமிருக்கிறது. சீக்கிரம்..

 5. மன்னிக்கனும், உங்க போட்டோ பார்த்தால் இளம் வயது ‘சுஜாதா’ மாதிரி இருக்கு. ஏ.வி.ரமணன்0னு ஒருத்தர் போட்டு கொடுத்துட்டார்-நம்பாதீங்க…!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s