நீங்கள் ஜெண்டில்மேனா, அந்நியனா?

ஒரு புது இடத்துக்குக் குடி போகிற போது இரண்டு விஷயங்கள் அவ்வளவு சுலபத்தில் திருப்திகரமாக அமைந்து விடுவதில்லை.

ஒன்று முடி திருத்தகம் இன்னொன்று தையற்கடை.

இவை இரண்டும் சரியாக அமைந்து விட்டால் நீங்கள் ஜென்டில்மேன். இல்லாவிட்டால் அந்நியன்தான்.

நினைவு தெரிந்து நான் முதன் முதலாக முடி வெட்டக் கொடுத்த கட்டணம் நாற்பது பைசா. நாகப்பட்டினம் எஸ்.பி.சாமி முடி திருத்தகத்தில் முடி வெட்டிக் கொள்வது ஒரு ஸுஹாநுபவம்!

பெற்றோர்கள் குழந்தைகளை ஓட்டி வந்து தள்ளிவிட்டு “ஒட்ட வெட்டி அனுப்பு பக்கிரி” என்று இன்ஸ்ட்ரக்ஷன் தந்து விட்டுப் போய் விடுவார்கள். அகதிகள் முகாமுக்குள் வந்தது போல முகமே தெரியாத அளவு முடியும் மூக்குச்சளியுமாக குஞ்சுக் குளுவான் கூட்டம் காத்திருக்கும்.

பெற்றோர் தலை மறைந்ததும் “பக்கிரி.. எனக்கு சிசர் கட்டிங்” என்று ஸ்பெஷல் சலுகைகள் வேண்டுவார்கள் பையன்கள்.

“சிசர் கட்டிங் எளுவத்தஞ்சு காசுடா. உங்கொப்பாரு முப்பத்தஞ்சு காசுதான் குடுத்தாரு” என்று நிராகரிப்பார்.

மொன்னை கிளிப்பரால் முடியோடு சதையையும் சேர்த்துக் கிள்ளி எடுத்து லபோ திபோ என்று அலற வைத்து விட்டு “கூசுதா?” என்று பக்கிரி கேட்கும் போது தலை உடம்பு ரெண்டுமே எரியும்.

ஒரு இருபதுக்குப் பத்து அறையை நடுவில் சுவரெடுத்து இரண்டாகத் தடுத்து ஒரு பக்கம் கடை அது. இடைச்சுவற்றில் இருக்கும் ஓட்டைதான் டெலி(விஷன்)கம்யூனிகேஷன்!

“ந்தே வந்து இட்லிய தின்னுட்டு போ” என்று பக்கிரியின் மனைவி காதல் சொட்ட அழைக்க இந்த கம்யூனிகேஷன் சானல் பயன்படும்.

“பெஞ்சி டிக்கெட் வாங்கனும்ப்பா. அம்பத்தஞ்சி காசு குடு” என்று கேட்கும் மகனை

“உங்கொப்பன் பாண்டிய நாடார் இல்லேடா. பக்கிரிசாமி. தரை டியேட்டுக்கு போ போதும்” என்று அதட்டுவார்.

பக்கிரி இட்டிலி சாப்பிட்டு வர லேட்டாகி காத்திருக்கும் குழந்தைகள் சில சமயம் கம்யூனிகேஷன் ஓட்டையில் எட்டிப் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் அவர்கள்
அண்ணாமலை ரஜினி மாதிரி “கடவுளே,கடவுளே” என்று வெளிறிப் போவார்கள்!

Advertisements

6 comments

    1. ஜவஹரைப் பற்றி லால்பகதூர்…
      இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லே? எப்டி களாய்க்கலாம்ன்னு உக்காந்து யோசிப்பீங்களோ?

  1. I am reminded of what a noted critic told Sujatha Rangarajan.

    For your talent A rated jokes and write ups are not necessary. Leave this for cheaper minds. If hitters like this sort of thing, there are umpteen channels to satisfy their voyeuristic mood.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s