A – கிளாஸ் ஜோக்ஸ்

ஐம்பத்து நாலு வயதான அந்த அக்கவுண்டன்ட் மனைவியின் டார்ச்சர் தாங்காது ஒரு நாள் காணாமல் போய் விட்டார். மனைவியை வெறுப்பேற்ற ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

“நாளை காலை நானும் என் பதினெட்டு வயது செகரட்டரியும் கொடைக்கானலில் ஹோட்டலில் ஜாலியாக இருப்போம்”

அடுத்த நாள் காலை ஹோட்டல் மேனேஜர் ஒரு பேக்ஸ் ஐ நீட்டினார். அது அவர் மனைவியிடமிருந்து வந்திருந்தது.

“என்னையும் உங்கள் பதினெட்டு வயது குமாஸ்தாவையும் தனியாக விட்டுச் சென்றதற்கு நன்றி. உங்கள் அக்கவுண்டன்ட் புத்திக்கு உறைக்காத விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது”
_________________________________________________________________________________

கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”

“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”
_________________________________________________________________________________

அந்தத் தம்பதிக்கு பல வருஷங்களாக குழந்தைகள் இல்லை. மனைவி ஒரு லேடி டாக்டரையும் கணவன் ஒரு டாக்டரையும் பார்க்கப் போனார்கள்.

வீடு திரும்பிய மனைவி உற்சாகமாக இருந்தாள்.

“என்னங்க ஒரு குட் நியூஸ்.”

“என்ன அது?”

“நான் மாசமா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?”

“பேட் நியூஸ்”

“அதான் என்கிட்டே குழந்தை பிறக்கப் போகுதுன்னே சொல்லிட்டாங்களே..இன்னும் என்ன பேட் நியூஸ்?”

“ஒரு பெண்ணை தாயாக்கற தகுதி எனக்கில்லைன்னு கன்பார்மா சொன்னாரு”
________________________________________________________________________________

69 comments

  1. ஜோக்குகளிலுள்ள நபர்களின் ‘ஏ’ ட்டிக்குப் போட்டியான டயலாக்குகளால் ஜோக்குகள் ‘ஏ’ டா கூடமாக இருந்தாலும் ’ ஏ ‘ ஒன்…!

  2. ஏ கிளாஸ் ஜோக்கில் வரும் மாமி அரித்மெடிக்கில் மட்டுமின்றி கெமிஸ்ட்ரியிலும் ஸ்ட்ராங்னு தெரியுது….

  3. அண்ணே, இத மாதிரி எழுத நெறைய பேரு இருக்காங்க. நம்ம ஊரு ஆளுகளுக்கு எழுதவா சொல்லித் தரனும். கதை, கவிதைன்னு வேற தளத்துல பின்னுங்கண்ணே.

  4. //இதெல்லாம் உனக்கு வேணாம்டா ன்னு சொல்றீங்களா?//

    ஆமாண்ணே, பி.ஹெச்.டி. முடிச்சவரு எட்டாங் கிளாஸ் பரிட்சை எழுத வேணாம்ங்கறேன்…

    1. ஆஹா, மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடா ன்னு சொல்ல இப்போ காளமேகப் புலவர் உயிரோட இல்லே. அவரை ஏனய்யா இழுக்கறேன்னு நினைப்பீங்க.. அதுக்கொரு ஆர்டிகிள் வெச்சிருக்கேன்.

      எனக்கு நிறைய வெல் விஷர்கள் இருப்பது நிஜமாகவே சந்தோசம் அளிக்கிறது. நன்றி விஜய்.

  5. ஒண்ணாம் கிளாஸாணும் சாரே.. 🙂

    ‘எட்டாங்கிளாஸ்’, ‘பி.ஹெச்.டி.’ எல்லாமே நீங்க எழுதினா ‘ஏ’ கிளாஸ் தான் சார்.. 🙂

    (உங்களது பல்சுவை பதிவுகள் தான் பலரும் படிக்க காரணம். எனவே ஒரு குறிப்பிட்ட வட்டம் ,சதுரம், செவ்வகத்தில் அடங்கிவிடாமல் இது போன்ற எல்லாவிதமான பகிர்வுகளையும் தாருங்கள்)

  6. A class Joks ஒரு Joker மட்டுமல்ல. பல Joker’களுக்கு சமம். அதிலும் கணவன் மனைவி செலவுகளை எப்படி குறைப்பது. செம ஜோக்’மா.
    இந்த 2010 ஆம் ஆண்டில் வாரி இறையுங்கள்…நாங்கள் அள்ளிக்கொண்டுபோக

  7. நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்??????//
    இப்படி இல்ல

    நீங்களும் நல்லா ஓட்டினா டிரைவர நிறுத்திடலாம்

    1. என்ன தேவா, சீரோ ரேட்டிங்கா! 🙂 விகடன்ல உங்க ட்விட்டர் காமெண்ட்டைப் போட்டிருந்தாங்க பாத்தீங்களா?

  8. உங்கள் அக்கவுண்டன்ட் புத்திக்கு உறைக்காத விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது///

    செம சார்:)

KESAVAN -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி