நானும் காளமேகப் புலவரும்

காளமேகப் புலவர் என்பது யாரென்றால்.. என்று ஆரம்பித்து அவரைப் பற்றி ஒரு பாரா முன்னுரை எழுதத் தேவையில்லை. தமிழ் தெரிந்த எல்லாருக்கும் காளமேகத்தைத் தெரிந்திருக்கும்.

நாகைக்கு வந்திருந்த காளமேகம் பசியால் வாடிப் போய் உட்கார்ந்திருந்தார். காத்தான் சத்திரத்தில் சாப்பாடு தயாராகத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. தெருவில் சிறுவர்கள் பாக்குக் கோட்டையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.(பிற்காலத்தில் கோலி குண்டு ஆட்டம்). சாப்பாடு காசு கொடுத்து வாங்கியாவது சாப்பிட நினைத்த காளமேகம் ஒரு சிறுவனை அழைத்து,

“தம்பீ, சோறு எங்கப்பா விக்கும்?” என்று அயர்ச்சியோடு கேட்டார்.

அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே

“சோறு தொண்டைலே விக்கும்” என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டான்.

சிலேடைச் சிங்கம் காளமேகம் இந்த பதிலில் வியப்புற்று, பசியையே மறந்தார்.

கையில் கிடைத்த கரித் துண்டை எடுத்துக்கொண்டு, காத்தான் சத்திரத்தின் சுவற்றில்

“பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர் நாவில் தமிழ் தெறிக்கும் திருநாகை”

என்று எழுதினாராம்.

தாமதமாகப் பரிமாறப்ப்பட்ட சாப்பாட்டைக் குறித்து காளமேகம் பாடிய சிலேடை சரித்திரப் புகழ் வாய்ந்தது. அது பற்றி அப்புறம் பார்க்கலாம்.

இப்போது-

நான் கூட அந்த நாகை பாலகன்தான்!

Advertisements

7 comments

  1. 2009 ஜீலை மாதத்திற்கான சிறந்த புதிய பதிவருக்கான விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். விருதுக்கான இமேஜை http://tamilblogawardsinternational.blogspot.com/2009/07/2009.html என்ற லிங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

    1. மிக்க நன்றி. அங்கீகாரத்திற்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம். இது என்னை ஊக்குவித்து என் வலைப்பதிவின் தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள அடிகோலும்.

  2. சோறு எங்க விக்கும் – பதில் சூப்பர் பதில் – அன்பின் ஜவஹர் – நாகை பாலகன் காள்மேகத்தினைத் தூக்கி சாப்பிட்டுட்டான் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s