சீதைக்கு பையர் பாத் பாஞ்சாலிக்கு ஷவர் பாத்

ஷவர் பாத் கிடைக்கலைங்க, அதான் சன் பாத்-ஏதோ இதை வைக்கற இடத்திலே இதை வெக்கறா மாதிரிம்பாங்களே......

ஷவர் பாத் கிடைக்கலைங்க, அதான் சன் பாத்-ஏதோ இதை வைக்கற இடத்திலே இதை வெக்கறா மாதிரிம்பாங்களே......

கடலை போட ஒருத்தன்
காதலிக்க இன்னொருத்தன்
ஹோட்டலுக்குக் கூட்டிப் போகவும்
தியேட்டருக்குள் திரிசமன் செய்யவும்
தனித் தனிப் பையன்கள்
கல்யாணம் என்றால்
கண்டிப்பாய் வேறொருத்தன்
காரணம் என்னவென்று
கன்னிகளைக் கேட்டேன்
பெண்ணென்றால் கண்டிப்பாய்
நாலு குணம் கேட்கிறீர்-
ஆணுக்கு அஞ்சாவது வேண்டாமா?
அஞ்சு குணத்தில் ஆம்பளையே கிடைக்காது
அஞ்சு ஆம்படையானைக் கொடுத்து
பாஞ்சாலிக்கு பதிவிரதைத் தகுதிகளில்
எக்செம்ஷன்!
பதிவிரதை சீதைக்கோ பயரில்
எக்சாம்நேஷன்!
சீதைகளுக்கு பாயர் பாத்
பாஞ்சாலிகளுக்கு ஷவர் பாத்
இந்தியா டிராப்பிகல் தேசம்
ஷவர் பாத்தே எங்கள் நேசமென்றாள்!

Advertisements

7 comments

 1. கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

  நன்றி…

  1. ஜகதீஷ்,

   உங்கள் கவிதைகள் எல்லாமே உணர்வுப் பூர்வமாகவும், ஆழ்ந்த பொருட்செறிவு உள்ளவையாகவும் இருக்கின்றன. சோளக்கொல்லை பொம்மை கவிதை சட்டென்று தைத்தது.

   ஹைக்கூக்களும் முயன்று பாருங்களேன்!

  1. இன்னொரு பாகத்தைப் படிக்கிற(?) ஆர்வம் பலருக்கும் வந்திருந்தாலும் நீங்கள்தான் முதலில் சொல்லியிருக்கிறீர்கள். முயற்ச்சிக்கிறேன்.

 2. வணக்கம்

  \\சீதைகளுக்கு பாயர் பாத்
  பாஞ்சாலிகளுக்கு ஷவர் பாத்
  இந்தியா டிராப்பிகல் தேசம்\\

  நியாயம்தானே.
  எங்கள் பாட்டி சொல்லுவார், ஐவருக்கும் பொண்டாட்டி அழியாத பத்தினி – னு

 3. சீதைக்கு பஃபயர் பாத்…..பாஞ்சாலிக்கு ஷவர் பாத் இப்படி ஒரு கவிதைக்கு இப்படி ஒரு கதை!இதே ரீதியில் கவிதைகள் போனால் தமிழ் நாடு ரொம்ம்ப நல்லா இருக்கும்.

  கற்பை விடுங்கள் அது அவுட் டேடட் விஷயம். இந்த எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்
  அதிகரிக்காதா?

  எனக்கே இதைப்படித்த போது நியாயமாகத்தான் தோன்றியது. மஹா பாரதத்தை தெரிந்திருந்த போதிலும் !

  இந்த மாதிரிக் கவிதைகள் மனசை லேசாக்குகிறது என்று சொல்வீர்கள்.

  நடத்துங்கள்! வேரெ என்ன சொல்ல முடியும்?

  அன்புடன்
  கமலா

  1. மேடம்,

   உங்கள் மாதிரி பெரியவர்கள் எங்கள் வலையைப் படிப்பதில் எங்களுக்குப் பெருமை. கருத்தளவில் தவறு இருந்தால் தயவு செய்து தலையில் குட்டி சுட்டிக் காட்டுங்கள்.
   நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s