வயசுக் கோளாறு

தொண்ணூறு வயசைக் கடந்த மூன்று தாத்தாக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“கண்ணு சரியாத் தெரியுது, காது கேக்குது.. அதெல்லாம் ஒக்கே.ஒன் பாத் ரூம் போறது பெரிய டார்ச்சரா இருக்கு.” என்றார் முதல் தாத்தா.

“எனக்கும் மத்ததெல்லாம் பிரச்சினை இல்லே. டூ பாத ரூம் போகவே முடியல்லே” என்றார் ரெண்டாவது தாத்தா.

“எனக்கு காலைலே அஞ்சு மணிக்கே எந்தப் பிரச்சினையும் இல்லாம சுகமா ஒன் பாத் ரூம்,டூ பாத் ரூம் ரெண்டும் போய்டுது.” என்றார் மூன்றாவது தாத்தா.

“பின்னே உனக்கு என்னதான் பிரச்சினை?”

“எட்டரை மணி வரைக்கும் படுக்கைலேர்ந்து எழுந்திரிக்க முடியல்லே”

Advertisements

15 comments

  1. ” போன வருஷம் வரை எங்க அப்பா, கங்கோத்ரி போகணும், யமுனோத்ரி போகணும், கேதாரநாத் போகணும், பத்ரிநாத் போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தார்…”
    “ இப்ப என்ன சொல்றார்…? “
    ” பாத்ரூம் ஒழுங்கா போனாப் போதுங்கறார்…!”

    1. நல்ல ஜோக். நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் படிக்கிற/கேட்கிற விஷயங்களிலிருந்து உடனே ஜோக் எழுத முடியும் என்று நிரூபிக்கிறது உங்கள் காமெண்ட்!

  2. 1 + 1 = ?
    அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கும் போது,
    தம்பூரா போடுபவரிடம் – தாழ்ந்த குரலில் “ஒண்ணுக்குப் போகணும்” என்றாராம்.
    அவர் புன்னகைத்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டாராம்.
    அரியக்குடி அதே கோரிக்கையை வயலின் காரரிடம் சொல்ல – அங்கேயும் அதே
    ரியாக்ஷன். மிருதங்கக் காரரிடமிருந்தும் அதே அதே!
    பார்த்தார் அரியக்குடி – எல்லோருக்கும் கேட்கின்ற குரலிலே
    சொன்னாராம்: ” ஏண்டா – நான் ஒருத்தன் வயசானவன் – ஒண்ணுக்குப்
    போகனும்னு சொல்றேன் – ஒருத்தனாவது வாய் திறக்க மாட்டீங்கறீங்களே!

    1. அரியக்குடியின் சங்கீதத்தை விட நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படியாக இருக்கிறது! ஒரு நல்ல துணுக்கை சொன்னதற்கு நன்றி

  3. கச்சேரி என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது….
    “ மிருதங்க வித்வான், பாதியிலே எங்கே ஓடறார்…? “
    “ பாவம்… எவ்வளவு நேரம் தான் அடக்கி வாசிப்பார்…? “

    1. நன்றி விஜய்,

      உங்களை மாதிரி சீனியர்களின் வழிகாட்டலை உடனே ஏற்றத்தில் நம் வலைக்கு பார்வையாளர்கள் ஜாஸ்தி ஆயிருக்காங்க! தொடர்ந்து வழி காட்டுங்கள்.

      1. என்ன அண்ணே, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு… பல வருஷ ஆர்வம் இருக்கவங்க தான் இங்கே நிக்க முடியும்… அந்த வகையில் உங்களுடைய எத்தனையோ வருட ஆர்வம்தான் நீங்கள் வந்து கொஞ்ச நாளிலேயே இத்தனை பேருடனான அறிமுகத்தைக் கொடுத்திருக்கு. தொடர்ந்து வழி காட்டுங்கன்னு சொல்றதெல்லாம் டூ மச்… 🙂

      2. இல்லை விஜய்,

        இந்தத் துறையில் எனக்கு நீங்கள் முன்னோடி. எந்தத் துறைக்குப் போனாலும் முன்னோடிகளை மதிப்பது பண்பு மட்டுமல்ல. அதில் நிறைய பயனும் உள்ளது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்று, திருவள்ளுவர் பண்பினால் வருகிற பயனையும் சொல்லத் தவறவில்லை!

  4. //எனக்கு காலைலே அஞ்சு மணிக்கே எந்தப் பிரச்சினையும் இல்லாம சுகமா ஒன் பாத் ரூம்,டூ பாத் ரூம் ரெண்டும் போய்டுது.” என்றார் மூன்றாவது தாத்தா.

    “பின்னே உனக்கு என்னதான் பிரச்சினை?”

    “எட்டரை மணி வரைக்கும் படுக்கைலேர்ந்து எழுந்திரிக்க முடியல்லே” //

    நினைத்து நினைத்து சிரித்தேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s