காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்…

ம்ம்ம் ஹூம் அப்டிப் பாக்காதே

ம்ம்ம் ஹூம் அப்டிப் பாக்காதே

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

Advertisements

11 comments

  1. நன்றி சக ஆத்தர். சிம்பல்கள் சரியாக அப்பியர் ஆகிறதில்லை. இளிப்புன்னு எனக்குப் புரியுது.

 1. ஏழு, பத்து: ஒத்துக்க முடியாது ஐயா…!

  Potential / Kinetic Energy பற்றி சொன்னீர்கள்.
  ஆனால் போட்டேன்ஷியல் எனேர்ஜீ பல வகைப்படும்! Elastic, Electric (magnetic, Nuclear), chemical, Thermal, Heat

  இவ்வகையில் பார்க்கையில்
  காதல் உடலில் தேங்கும் -“போட்டேன்ஷியல் எனேர்ஜீ” என்றால் இதன் Source பலவாகும்.

  போதையினால் (மது, Narcotics)/ Harmones ஆல் உண்டாகும் காதல் – Chemical Potential Energy

  நீண்ட பழக்கத்தினால் உண்டாகும் காதல் – Elastic Potential Energy

  அழகான பெண்ணை பார்த்ததும் வரும் காதல் – magnetic Potential Energy.

  வடிவான பெண்ணைக் கண்டு உடல் சூடாகி வரும் காதல் – Heat/Thermal Potential Energy

  நீங்கள் எந்த வகை Potential Energy பற்றி பேசுகிறீர்கள்?

  Elastic Potential ஒரு வரம்புக்கும்ப்பின் இழுத்தால் source சிலேயே Dissipate ஆகிவிடும் – ரொம்ப நாள் பேசிகிட்டா காதல் மொக்கையாக போகும் என்பதே அர்த்தம்.

  Magnetic Potential – Demagnetizion நடந்தால் Sourceசிலேயே Dissipate ஆகிவிடும்- பெண்ணை அழகாக்கும் வாசனை திரவங்கள், அரிதாரம், “அழகான” உடைகள் போன்றவற்றை மாற்றினால் பறந்துவிடும்.

  Thermal Potential Energy உடலில் உள்ள சூடு சுற்றுபுரத்த்துக்குள் வடிந்தால் source சிலேயே Dissipate ஆகிவிடும் – அதாவது பெண் வடிவிழந்தால் காதல் பறந்து விடும்.

  Chemical potential energy என்பது சூரியன், ரசாயனப் பொருட்கள் (Harmones, fuel) மூலமாக வருவது.
  இது தான் அழியாத காதல் என்பது என் கருத்து. தொடர்ந்து போதை இருந்தாலோ அல்லது சூரியன் (கவிகள் கூறும் கண்ணில் தொடங்கும் காதல் ஒளி சம்மந்தப் பட்டது – அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -பார்த்ததும் காதல்) இருக்கும் வரையிலோ இந்த காதல் தொடரும். சோறு (அதாவது பணம்), அல்லது உடலில் Harmone அளவுகள் குறையாமல் (மிக சுலபாம். எல்லாவற்றிற்கு மேலும் காதல் கொண்டால் காதலி மேல் பாசம் குறையாது) இருந்தாலோ இந்தக் காதலுக்கு பங்கம் வராது.
  என்ன நினைக்கிறீர்கள்?

  1. என்னத்தை நினைப்பது…
   அருமையான சிந்தனை. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இன்னும் பல வாசகர்களின் சிந்தனைகள் வந்தால் நல்லா இருக்கும்!

 2. இதற்கும் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன :
  “ஒரு முறை தான் காதல் வரும் – தமிழர் பண்பாடு
  அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது
  வருவதெல்லாம் காதல் என்றால் வாழ்வென்பதேது
  தன் வாழ்க்கையே காதலித்தால் தெரியும் அப்போது”

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s