எம்.ஜி.ஆரும் மேனஜ்மேன்ட்டும்

எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.

ஏன் என்று சொல்கிறேன்.

பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.

ஏன் ஏன் என்று கேட்டுக் கேட்டு (கையில் கிண்ணத்தைப் பிடித்துக் கொண்டு அல்ல!) ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.

நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.

ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.

அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?

அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!

Advertisements

20 comments

 1. //நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.//

  அருமை

 2. //முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?//

  சின்னவர் என்னசொல்லை நம் தலைமுறையினர் உபயோகப் படுத்தலாமா? நண்பரே….

  1. வயசு வித்யாசமின்றி எல்லாரும் பயன் படுத்தி அவராலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட நிக் நேம் அது. காரணம் குடும்பத்தைப் பொறுத்த வரை சக்ரபாணிதான் பெரியவர்.

 3. //அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.//

  இது போன்ற வரிகள் அவரது படங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றதால் அந்த பாடல் வரிகளுக்கு எழுதியவரைவிட அவரே சொந்தக் காரர். அதனால் அவற்றை எம்ஜியார் பாடல்கள் என்றே நாம் சொல்லலாம்.

  கவிஞர்களால் அவருக்கு மட்டுமே இது போன்ற வரிகளை எழுத முடியும்

 4. 5Y & 1H Analysis முதல் படி மட்டுமே….அதை நீங்கள் Six Sigma முறையில் செயல் படுத்தி பாருங்களேன் விளைவுகள் அற்புதமாக உள்ளன……(நாங்கள் இதில் pareto மற்றும் Recurrance உதவு கோள்களை பயன் படுத்தி வருகிறோம்…..வெறும் ஆய்வு கட்டத்திலேயே இருந்தாலும் கண்டுபிடித்த செயல் பாட்டு குறைகள் ஏராளம்…..)

 5. நெஞ்சில் நின்ற, மேலும் சில வரிகள்:

  “மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
  உனக்கு மாலைகள் விழவேண்டும்;
  ஒரு மாற்று குறையாத மன்னன் இவன்
  என்று போற்றிப் புகழ வேண்டும்!”

 6. உண்மைதான். திரு.எம்.ஜி,ஆர். அவ்ர்களின் நிர்வாகத்திறமை யாருக்குமே வராது.

  நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல். என்னும் குறளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் அவர்.

 7. எத்தனை காலந்தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே
  சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே

  சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
  சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
  பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
  பாமர மக்களை வலையினில் மாட்டி
  எத்தனை……
  தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி
  தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
  கருத்தாக பல தொழில் பயிலுவோம், ஊரில்
  கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்
  எத்தனை…..
  ஆளுக்கொரு வீடு கட்டுவோம், அதில்
  ஆன கலைகளை சீராக பயில்வோம்
  கேளிக்கையாகவே நாளினை போக்கிட
  கேள்வியும் ஞானமும் ஒன்றாக திரட்டுவோம்
  எத்தனை…..

  45 வருடமில்லை. 54லேயே மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு.

  சகாதேவன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s