கள்ளக் காதல்ன்னா இளப்பமா?

துலுக்காணம் பயல இஸ்துகினு வந்துரு

துலுக்காணம் பயல இஸ்துகினு வந்துரு

ரேடியோவுக்குப் பிறகு ரொம்ப விரைவாக எளியவர்கள் வரை பரவியிருக்கிற தொழிற்நுட்பம் மொபைல்.

பாசிமணி-ஊசிமணி மார்கெட்டிங் செய்யும் நண்பர்கள் வரை ரேடியோ பரவிற்று.

மொபைலின் வளர்ச்சி அசாதாரணமானது.

தனிமையான மரத்தடிகளிலும், கண்ணாடிகள் ஏற்றப்பட்ட கார்களின் உள்ளேயும், டாப் பெர்த்களிலும் வெட்கம் பிடுங்கித் தின்ன இளம் பெண்கள் பேசுவதைப் பார்க்கிற போது, இந்த அசுர வளர்ச்சியின் காரணம் சடுதியில் விளங்குகிறது. அச்சம்-நாணம் இந்த இரண்டு பாக்டர்களை பெண்கள் எளிதில் ஓவர்கம் செய்ய முடிகிறது. ஆகவே ஆண்களுக்கு வேலை ஐம்பது சதவீதம் சுலபம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு “அவசரமா வெளியூர் போயிட்டிருக்கேன். ஒரு நாள் லீவ் வேணும்” என்று கேட்க முடிகிறது.

பாரில் உட்கார்ந்து இருக்கிற போது பார்யாள் அழைத்தால் தாழ்ந்த குரலில் “ஒரு மீட்டிங்க்லே இருக்கேன்” என்று சொல்ல முடிகிறது.

ராங் கால் மாதிரி எனக்கு வந்த ஒரு ராங் எஸ் எம் எஸ் :

‘Wait, he is still at home’ (சத்தியமா யாருன்னு தெரியாதுங்க)

மேற்படி எஸ் எம் எஸ் நல்ல காதலோ, கள்ளக் காதலோ!

எப்படி இருந்தாலும் காதல் காதல்தானே?

Advertisements

13 comments

 1. இது முழுநீள செல்போன் புராணம்… இதில் கள்ளக்காதல் எங்கிருந்து வந்ததுன்னு புரியலை… வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்து லீவு கேக்கறதுக்கும் காதலுக்கும் என்னய்யா சம்பந்தம்…?

  1. அ… அ….. இப்டி கேட்டா உங்களுக்கு மொபைல் போனுக்கும் கள்ளக் காதலுக்கும் இருக்கிற சம்பந்தம் தெரியாதுன்னு நாங்க நம்பிடுவோமா..

 2. //வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு “அவசரமா வெளியூர் போயிட்டிருக்கேன். ஒரு நாள் லீவ் வேணும்” என்று கேட்க முடிகிறது.

  பாரில் உட்கார்ந்து இருக்கிற போது பார்யாள் அழைத்தால் தாழ்ந்த குரலில் “ஒரு மீட்டிங்க்லே இருக்கேன்” என்று சொல்ல முடிகிறது.//

  ரசிக்க வைக்கும் பொய்கள்.

 3. கள்ளக் காதலைப் பத்தி எல்லாருமே தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. ஆக்சுவலி, அப்பா அம்மா பாத்து கட்டி வச்ச பொண்ணு புடிக்காம போனாத்தான் இன்னொருத்திய காதலிக்கிறாங்க. ஆக காதலே இப்பத்தான் ஸ்டார்ட் ஆகுது, இதப் போயி கள்ளக் காதல்னு சொல்றீங்களே. (தகவல்: வினவு தளத்தில் நிகழ்ந்த ஒரு விவாதத்திலிருந்து)

  1. நல்ல தகவல் விஜய்,

   ஆனா ஆண்டு அனுபவிச்சிட்டு அப்புறமா இன்னொருத்தரை கரெக்ட் பண்றவங்களைப் பத்தி என்ன சொல்றீங்க?

 4. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு “அவசரமா வெளியூர் போயிட்டிருக்கேன். ஒரு நாள் லீவ் வேணும்” என்று கேட்க முடிகிறது.

  ஏங்க இண்டியன் டாய்லெட்ல உட்கார்ந்து லீவு கேட்டா கிடைக்காதுங்களா……

 5. //ஆனா ஆண்டு அனுபவிச்சிட்டு //
  ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!இதை நான் வன்மையாகக்கண்டிக்கிறேன்.பெண்கள் என்ன சட்டை அல்லது ட்ரவுசரா உஙளுக்கு ஆண்டு அனுபவிப்பதற்கு?வாழ்ந்துவிட்டும்மன்னு சொல்லுங்க!
  உண்மைதான் இந்த மொபயில் கள்ள மற்றும் நல்ல காதலுக்கு ஒரு உறுதுணைதான்!
  kamala

  1. ஐயய்யோ மேடம்,

   நான் சொன்னது ஆண்களை பெண்கள் ஆண்டு அனுபவிச்சிட்டு அப்புறம்… ஆஹா, இதுலயும் வில்லங்கம் வருதே… பொம்பளைங்கதான் கள்ளக் காதல் பண்றாங்களான்னு மறுபடியும் காதைத் திருகுவீங்க. வேணாம்…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s