கையளவு பழுத்த கல்லாமை!

இந்தப் படத்தைப் போட்டிருந்தாருன்னா வள்ளுவர் கெட்ட வார்த்தையே எழுதியிருக்க வேணாங்க!

இந்தப் படத்தைப் போட்டிருந்தாருன்னா வள்ளுவர் கெட்ட வார்த்தையே எழுதியிருக்க வேணாங்க!

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற்றற்று

மேற்சொன்ன குறள் இடம் பெற்றிருப்பது காமத்துப் பாலில் இல்லை. கல்லாமையில்.

இது ரொம்ப விவாதத்துக்குரிய குறள்.

கல்லாதான் சொற்காமுறுதல் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்கிறார்கள்.

கல்லாதவன் பேச ஆசைப்படுவது என்று ஒரு அர்த்தமும், கல்லாதவனின் பேச்சில் கவரப் படுதல் என்று ஒரு அர்த்தமும் சொல்கிறார்கள். இதே போல முலையிரண்டும் இல்லாதான் பெண்காமுற்றற்று என்பதற்கும் ஒரு ஆக்டிவ் அர்த்தமும் ஒரு பாசிவ் அர்த்தமும் சொல்கிறார்கள். அதாவது மார்புகள் இல்லாத பெண் காதலுறுவது என்று ஒரு அர்த்தமும், மார்புகள் இல்லாத பெண்ணைக் காமுறுவது என்று ஒரு அர்த்தமும் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் நாலு அர்த்தம்.

திருவள்ளுவர் தாடி கீடி எல்லாம் வைத்துக் கொண்டு பார்க்க சாமியார் மாதிரி இருந்தாலும் எப்படிப்பட்ட பாக்யராஜ் வேலை செய்திருக்கிறார் பாருங்கள். கல்லாமை அதிகாரத்தில் கொண்டு வந்து கல்பஜா வார்த்தையைப் புகுத்தியிருக்கிறார்.

இதனால் எத்தனை வாத்யார்களுக்கு தர்ம சங்கடம் தெரியுமா?

எங்க ஊர் நேஷனல் ஹை ஸ்கூலில் ஒரு நாள் தமிழ் வாத்யார் பி.சோமசுந்தரம் வரவில்லை. ஆக்டிங்குக்காக …………………………………… டீச்சரை போட்டிருந்தார்கள். அந்தம்மா உடலமைப்பில் கொஞ்சம் நமிதா டைப்.

தமிழ்ப் பாடம் நடத்துகிறேன் என்று அவர் ஆரம்பித்தால் வில்லங்கம் பிடித்த மாதிரி இந்த திருக்குறள்.

ஸ்ரீராமுலு, பழனிவேலு மாதிரி வளர்த்தியான பையன்கள் “……………….. இல்லைன்னா காதலிக்கக் கூடாதா டீச்சர்?” என்கிற மாதிரி சங்கடமான கேள்விகளைக் கேட்டு அவரை லஜ்ஜா(அ)வதி ஆக்கினார்கள்.

ஸ்கேலால் மேசையை இரண்டு தட்டு தட்டி விட்டு அவர் சொன்ன விளக்கம் :

“ச்ச்சூ, திருவள்ளுவர் சொல்ல வந்தது, மார்பகங்கள் இல்லாதவள் தாய்மைக்கு ஆசைப் படுவதைப் போலன்னு. காமம்ன்னா ஆசை. காமுற்றுன்னுதான் சொல்லியிருக்காரு. மார்பகங்கள் இல்லாதவ எதுக்கு ஆசைப் படக் கூடாது? தாய்மைக்குதானே?”

என்று சென்டிமென்ட்டில் அடித்தார்.

ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த சமயோசிதம் வருமா?

அது நாகப்பட்டினம் ஸ்பெஷல் ஆயிற்றே!

Advertisements

13 comments

  1. கல்லாமை வருவது காமத்துப்பால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் 3.5% ஆரொக்யா பால் குடித்தால் கல்லாமை வரவே வராது.. வேணுண்ணா மேலே படத்தில் உள்ள அர்ஜூன் அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க..

    இதுபோல் மேலும் வள்ளுவரின் லீலைகள் இருந்தால் எழுதுங்கள்.. நன்றி

    1. அறிஞர் அண்ணா எழுதிய ‘கம்ப ரசம்’ படித்து விட்டு கம்ப ராமாயணத்தைப் படித்து ஆத்திகரான கண்ணதாசன் இல்லை நான். எனக்கு நிஜமாவே வள்ளுவரைப் பிடிக்கும்!

  2. திருவள்ளுவர் பிடிச்சதுனாலே இந்த 😉 குறள் பிடிக்குமா, இல்லாட்டி இந்த மாதிரி குறள் எழுதறதாலே வள்ளுவரைப் பிடிக்குமா?

    1. திருவள்ளுவருக்கும் நமக்கும் வேவ் லெங்க்த் மாட்ச் ஆகுதுங்க. அவருக்கும் முப்பால் பிடிக்கும். எனக்கும் முப்பால் பிடிக்கும். எந்தெந்த பால் என்கிறதுலேதான் கொஞ்சம் வித்யாசம். அந்தப்பால்களைச் சொன்னா சிலர் அப்பால் போய்டுவாங்க, சிலர் செருப்பால் அடிப்பாங்க,சிலர் வெறுப்பால் திட்டுவாங்க, இன்னும் சிலர் இந்த அறுப்பால் துடிப்பாங்க!

  3. சங்க இலக்கியத்தில் – போரில் தன் மகன் இறந்த செய்தி கேட்டு தாய் “அவன் புறமுதுகிட்டு மாண்டிருந்தால் அவன் பாலுண்ட இந்த மார்பகங்களை கிள்ளி எறிவேன் ” என்று.சொல்கிறாள். கண்ணகியோ , தன் ஒரு முலையை திருகி எரிந்து மதுரையை எரித்தாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.வள்ளுவரோ காமத்திருக்கு உதாரணம் காட்டுகிறார். இப்படி, காமம், கோவம், க்ரோதம் என்ற உணர்ச்சிகளுக்கு (ஆண்)இல்லக்கியகர்த்தக்கள் ஏன் “அதையே” கைஆள்கிறார்கள் என்று தெரியவில்லை.

  4. குறளை விடுங்க… படத்துல உள்ள பாப்பா யாரு…? பார்த்தா பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்த உடம்பாத் தெரியலை… பாத்திரம் புஷ்டியா இருக்கு…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s