Day: ஓகஸ்ட் 6, 2009

ஆர்டர்…ஆர்டர்!

எல்லா முதல் அனுபவங்களுமே சுவாரஸ்யமானவைதான்.

என்ன.. சிலதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாது.

முதன் முதலில் லூனா வாங்கி ஓட்டியபோது பனகல் பார்க் ஒன் வேயில் ஓட்டி மாட்டிக்கொண்டேன். டிராபிக் போலீஸ்காரர் கையை அசைத்து அழைத்த போது வியர்த்தது. தொடையெல்லாம் ஆடியது. மனசுக்குள் கோர்ட்,விலங்கு,ஜட்ஜ்,தூக்கு மேடை எல்லாம் ஓடி மறைந்தன.

அது ஒரு அஞ்சு ரூபாய் சமாச்சாரம் என்று புரிந்த பிறகு பயம் விட்டுப் போனது.

அதே போல ஒரு தரம் கோர்ட் வரைக்கும் போக வேண்டியதாகி விட்டது.

அந்த அனுபவத்தை கீழே இருக்கும் “ஆர்டர்..ஆர்டர்” கோப்பில் எழுதி இருக்கிறேன்.

படித்துப் பாருங்கள்.

Order…Order

“அவ காட்டறா” ஹைபாதெசிஸ்

நானும் என் நண்பர்களும் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தோம்.

வாரம் ஒருமுறை பல்லாவரம் ஜனதா தியேட்டர் அருகே இருக்கிற குட்டிச் சுவரில் உட்கார்ந்து அப்டேட் செய்து கொள்வோம்.

“என்னடா கலை, போன வாரம் இண்டர்வ்யூ போயிருந்தியே என்ன ஆச்சு?”

“அந்த வேலை கிடைக்காது மச்சி”

“ஏண்டா, என்ன ஆச்சு?”

“இண்டேர்வ்யூவிலே போய் உட்கார்ந்ததுலேந்து பாயில்ஸ் லா தெரியுமா, ஓம்ஸ் லா தெரியுமா, ந்யூடன்ஸ் லா தெரியுமான்னு கேட்டுகிட்டு இருந்தான். ஐ ஆம் நாட் எ லா கிராஜுவேட் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

அவன் இப்போது பி ஹெச் ஈ எல் லில் மேலாளராக இருக்கிறான்.

படித்தது எல்லாம் நமக்குப் பயன்படுகிறதா?

நமக்கு முன்னால் எவனாவது பிரமோஷன் வாங்கி விட்டால் ரத்தம் கொதிக்கிறதே, அதுதான் பாயில்ஸ் லாவா?

அவோ காட்ராஸ் ஹைபாதேசிஸ் பயன்படுகிறதோ இல்லையோ “அவ காட்டறா” ஹைபோதேசிஸ் சினிமாக்காரர்களுக்குப் பயன்படுகிறது.

எனக்கு இன்றுவரை ஆரம்பக் கல்வியில் பயின்ற தமிழும்,ஆங்கிலமும்,கூட்டல்-கழித்தல்-பெருக்கல்-வகுத்தலும்தான் பெரும்பாலும் பயன்பட்டு வருகிறது.

உங்களுக்கு?

நிலை உயரும் போது பணிவு கொண்டால்

எல்லாருக்கும் நன்றிங்க..௨௭ நாட்கள்லே ௰,௦௦௦ பார்வைகள்!

எல்லாருக்கும் நன்றிங்க..27 நாட்கள்லே 10,000௦௦௦ பார்வைகள்!

கவிஞர் கண்ணதாசனின் ஆண்டவன் கட்டளை படப் பாடல் நினைவுக்கு வருகிறது.

“நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்”

நான் வணங்குகிறேன்.

வோர்ட் பிரெஸ் நிர்வாகத்தினர்,நம் ரசிகர்கள்,சக பதிவாளர்கள்,தமிழ் மணம்-திரட்டி உள்ளிட்ட பல்வேறு திரட்டிகளின் நிர்வாகத்தினர் அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறேன்.

உயரத்தில் இருக்கிற நீங்கள் எல்லாரும் எனக்குக் கை கொடுத்து ஏற்றி விட்டு என்னையும் உங்களோடு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்!

என் கடன் என்டர்டைன் செய்து கிடப்பதே.