வில்லு…வில்லு…வில்லு…வில்லேய்!

பாரடைம் ஷிப்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நைட் ஷிப்ட்,டே ஷிப்ட் தெரியும், அதென்ன பாரடைம் ஷிப்ட் என்று கேட்கிறவர்களுக்காக :

ஒரே சூழ்நிலை, ஒரே மனிதர்கள், ஒரே சம்பவம் ஆனால் பார்கிறவனின் மனநிலை மாறும் போது அந்தக் காட்சி முற்றிலும் எதிரான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. இப்படி ஏற்படுகிற தாக்கத்தைத்தான் பாரடைம் ஷிப்ட் என்கிறார்கள்.

உங்களுக்கு எளிதாகப் புரிய வைக்க ராமாயணத்திலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஜனகருக்கு தன்னிடமிருந்த சிவ தனுசு பற்றி மதர்ப்பு அதிகம்.

‘ஆஹா, என் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் எப்படிப்பட்ட வீரர்கள். எப்படிப்பட்ட கில்லாடி வில் என்னிடம் இருக்கு பாத்தியா!’ என்கிற எண்ணம். ஒவ்வொரு அரசனும், அரச குமாரனும் அதை வளைக்க முற்படுகிற போது நக்கலாகப் பார்த்துக் கொண்டிருப்பாராம்.

‘இந்த தயிர்வடை தேசிகனா வில்லை வளைக்கப் போகிறான்?’ என்று.

இப்படி ஒவ்வொருத்தனும் வில்லை எடுக்கும் போது மதர்ப்பும்,வெற்றியும்,கேலியும்,சந்தோஷமுமாக இருந்த ஜனகர்,

ராமனைக் கண்டதும், “ஐயய்யோ, இவனால் வில்லை வளைக்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது! ஒரு நல்ல மாப்பிள்ளையை இழந்து விடுவோமே.. போயும் போயும் மாப்பிள்ளை செலெக்ட் செய்ய இப்படி ஒரு போட்டியை வைத்தோமே!” என்று இடிந்து போனானாம்.

அதே வில்,அதே சுயம்வரம்,அதே ஜனகர் ஆனால் பெருமிதம் பயமாக மாறுகிறது.

இதுதான் பாரடைம் ஷிப்ட்….

மனப்போக்கில் மாறுதல் வந்தால்தான் முன்னேற முடியும் என்பதற்காக தொழில் நிறுவனங்களில் பாரடைம் ஷிப்ட் ஐ வலியுறுத்துவார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Advertisements

14 comments

 1. //அதே வில்,அதே சுயம்வரம்,அதே ஜனகர் ஆனால் பெருமிதம் பயமாக மாறுகிறது.
  இதுதான் பாரடைம் ஷிப்ட்….//

  மிக நல்ல செய்தியை சொன்னீர்கள். இதற்கான இராமாயண எடுத்துக்காட்டு மிக அருமை. நன்றி தங்களின் சிந்தனை பகிர்தலுக்கு.

 2. அதே ஆத்துக்காரி… தினமும் அதே வத்தக்குழம்பு… அதே சுட்ட அப்பளம்.. சிவனேன்னு மறு பேச்சில்லாம உள்ளே தள்ளறவன், மறுநாள் ஆத்துக்காரி பொறந்தாத்துக்கு போகப்போறான்னு தெரிஞ்சதும்,
  “ பேஷ் பேஷ்…. சமையல் ரொம்ப நன்னா இருக்குன்னு “ மன நிலை மாறி, மாறி மாறி பாரிக்கு பாராட்டுக்களை வாரி வழங்கிவிட்டு, இன்னொரு கரண்டி வத்தக்குழம்பு விட்டுப்பேன். இது எங்க வீட்டு ராமாயணம்.

 3. ஜனகருக்கு ராமரை முன்னரே பிடித்திருந்தது என்ற விடயமே இப்பொழுது தான் எனக்கு தெரியும்! concept-Based விளக்கங்கள்/கதைகள் எல்லாமே அருமை. நல்ல சுவாரசியம். சிரிப்போம் சிந்திப்போம் types. தொடர்க உமது பணி.

 4. நம் அன்றாட வாழ்க்கையில் தான் எத்தனை”பாரடைம் ஷிப்டு”கள்.
  “வில்”லங்க மில்லாத விளக்கம் அருமை, எளிமை, புதுமை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s