எம்.ஜி.ஆர். எனக்கு ரொம்ப நெருக்கம்!

நாகப்பட்டினத்தில் ரமணி என்று ஒரு காரக்டர் இருந்தார்.

ரொம்ப உதார் பேர்வழி.

பேசிக்கொண்டே இருப்பார், திடீரென்று “ஐயைய்யோ மறந்தே போச்சு. சயந்திரம் சோமு கச்சேரி.இந்நேரம் ஊர்லேந்து வந்திருப்பார். ரமணி எங்க,ரமணி எங்கேன்னு தேடிகிட்டே இருப்பார்” என்று சொல்லிக்கொண்டு ஓடி விடுவார். பின்னாலேயே போய்ப் பார்த்தால் மதுரை சோமு தங்கியிருக்கும் குருனமச்சிவாயத்தின் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிற நூறு பேரில் ஒருத்தராக இவரும் நிற்பார்.

பிரபல வக்கீல் ஒருத்தரிடம் கொஞ்ச நாள் குமாஸ்தாவாக இருந்தார்.

ஒருநாள் ராத்திரி கையில் தடியான ஒரு புத்தகத்தோடு வந்து நின்று கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

“ரமணி, என்ன புஸ்தகம்டா அது?”

“அதுவா, இளமாறன்னு புதுசா ஒரு ஜுனியர் சேந்திருக்கான். அவன்கிட்ட தரச்சொல்லி சார் குடுத்தார்”

“போய்க் குடுடா, காத்துண்டிருக்கப் போறார்”

“ஆங்..அதெப்புடி, ராத்திரி நான் படிச்சிட்டு கார்த்தாலதான் தருவேன்”

கொஞ்சம் எட்டிப்பார்த்தால் அது இந்தியன் பீனல் கோட் புத்தகமாக இருக்கும்!(ரமணி எசெஸ்எல்சீ பெயில்)

இது மாதிரி கணக்கிலடங்காத உதார்கள்.

அவரைப் பற்றி நாங்கள் விளையாட்டாகப் பேசிக்கொள்கிற ஒரு விஷயம் வேறு வடிவத்தில் பாப்புலர் ஜோக்காக வந்து விட்டது!

“டேய், நம்ம ரமணி ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி எம் ஜி ஆர் எனக்கு ரொம்ப க்ளோஸ்ன்னு சொல்லிக்கிட்டு திரியராண்டா”

“அடப்பாவி.. எதாவது இன்சிடென்ட் சொல்லியிருப்பானே?”

“நம்மள மாதிரியே நம்பாம விசு கிண்டல் பண்ணியிருக்கான், அவனைக் கூட்டிகிட்டு நேரா எம் ஜி ஆர் வீட்டுக்கே போய்ட்டானாம்..”

“அட.. அப்புறம்?”

“இங்கியே நில்லுன்னு அவனை வாசல்லே விட்டுட்டு விடுவிடுன்னு உள்ளே போனானாம்..விசு நூத்துக் கணக்கான ஆட்களோட வாசல்லையே நின்னானாம்”

“அப்புறம்?”

“ஜனங்களைப் பாக்க பால்கனிக்கு வந்த எம் ஜி ஆரோட அவனும் வந்தானாம்”

“சுவாரஸ்யமா இருக்கு…அப்புறம்?”

“கீழே நின்ன விசு, பக்கத்துலே இருந்தவன் சொன்னதைக் கேட்டு மயக்கம் போட்டுட்டானாம்”

“என்ன சொன்னானாம்?”

“ஐ ரமணின்னானாம்”

“இதுல மயக்கம் போட என்ன இருக்கு?”

“மயக்கம் அதுக்கில்லே, அப்புறம் கேட்ட கேள்விக்குத்தான் மயக்கமாம்”

“அப்படி என்ன கேட்டானாம்?”

“ரமணி பக்கத்துலே செகப்பா தொப்பி போட்டு ஒருத்தர் நிக்கறாரே அவர் யாருன்னானாம்”

Advertisements

12 comments

 1. பல நாளாக சொல்ல நினைத்தது.

  மீசை இல்லாத போட்டோவில் நீங்கள் மறைந்த எழுத்தாளர் திரு.சுஜாதா போல் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்திலும் அவரது சாயல் தெரிகிறது.

  வாழ்த்துக்கள்.

  இது வஞ்சப்புகழ்ச்சி அல்ல. என் மனதில் நெடுநாட்களுக்கு முன்பே தோன்றியதே.

  1. நன்றி. நான் சுஜாதாவின் எழுத்துக்களை எக்ஸ்ட்டேன்சிவாகப் படிப்பவன். ஆகவே அவருடைய பாதிப்பு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

 2. உண்மையில் உங்கள் எழுத்துக்களையும், புகைப்படத்தையும் முதல் முதலில் பார்ததபோது நானும் அதையே தான் எழுத நினைத்தேன். துபாய் ராஜா முந்திக்கொண்டு சொல்லி விட்டார் !

  எப்படி இந்த அளவிற்கு யோசிக்க, உழைக்க – முடிகிறது உங்களால் ?

  வாழ்த்துக்கள் !

  1. நன்றி யாத்ரிகன்,

   நம்ம வலைக்கு வந்தது முதல் சந்தோஷம். பாராட்டறது ரெண்டாவது சந்தோஷம். சுஜாதா என் மானசீக குரு. நான் அவரை இலக்கண புஸ்தகமா நினைக்கிறேன். இலக்கணப் பிழை இல்லாம எழுதணும்ன்னு நினைக்கிறப்போ அவர் சாயல் வருதுன்னு நினைக்கிறேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s