சாந்தி கல்யாண போட்டோ

“ஏனய்யா, நேத்து வரைக்கும் காத்து வங்கிட்டிருந்தது நம்ம தியேட்டர், அதே படத்துக்கு இன்னைக்கு கூட்டம் சிண்டைப் பிச்சிகிட்டு போகுதே..எப்படீ?”

“நேத்து லோகல் கேபிள் சானல்லே விளம்பரம் குடுத்தமே, அவன் விளம்பரத்திலே பண்ண ஸ்பெல்லிங் மிஸ்டேக்தாங்க காரணம்”

“ஆசாபாசங்களை மதிக்கிறவர்கள் பார்க்க வேண்டிய கலகலப்பான படம்ன்னு குடுத்திருந்தோம்..”

“ஆமாங்க அவன் அதை ஆபாசங்களை மதிக்கிறவர்கள் பார்க்க வேண்டிய கிளுகிளுப்பான படம்ன்னு போட்டுட்டான்”
________________________________________________________________________________
“என்ன இது, நம்ம பொண்ணு கல்யாண போட்டோவைப் பார்க்க கூப்பிட்டா எல்லாரும் இப்டி ஓடறாங்க?”

“கர்மம்,கர்மம்..எங்க சாந்தி கல்யாண போட்டோவைப் பார்கறீங்களான்னு கூப்ட்டா யார்தான் பயப்பட மாட்டாங்க!”
________________________________________________________________________________
“என்னடா சொல்றே…ஐ டி யைக் காமிச்சும் ஏர்போர்ட்டிலே உள்ளே விடல்லையா?”

“ஐ டி யைக் காட்டுன்னாங்க, ஒரு பேப்பர்லே கிரி@ஜிமெயில்டாட்காம்ன்னு எழுதி காமிச்சேன்”
________________________________________________________________________________
“என்ன இழவு ரேடியோ இது…மெட்ராஸ் ஸ்டேஷன்ல வெச்சாலும் பாடல்லை, திருச்சி ஸ்டேஷன் வெச்சாலும் பாடல்லை,சிலோன் வெச்சாலும் பாடல்லை…”

“பேசாம அதை சுப.தெய்வானை ஆச்சி அடகு கடைலே வை. அம்பது மில்லி சாராயத்துக்கு ஆகும்.”
_________________________________________________________________________________

Advertisements

9 comments

  1. அனைத்தும் அருமை.

    //என்ன இது, நம்ம பொண்ணு கல்யாண போட்டோவைப் பார்க்க கூப்பிட்டா எல்லாரும் இப்டி ஓடறாங்க?”

    “கர்மம்,கர்மம்..எங்க சாந்தி கல்யாண போட்டோவைப் பார்கறீங்களான்னு கூப்ட்டா யார்தான் பயப்பட மாட்டாங்க!”//

    அனைத்திலும் அருமை.

  2. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
    புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க…
    நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்…
    பல தள செய்திகள்…
    ஓட்டுப்பட்டை வேண்டாம்…
    எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
    முழுவதும் தமிழில் படிக்க….

    தமிழ்செய்திகளை வாசிக்க

    தமிழ்செய்திகளை இணைக்க

    ஆங்கில செய்திகளை வாசிக்க

    வலைப்பூ தரவரிசை

  3. ” என்னது… படம் எல்லா ஷோவும்
    ஹவுஸ் ஃபுல்லா…?”

    “ முழு நீள காதல் காவியம் அப்டீங்கறதுக்கு பதிலா தவறுதலா முழு நீல காதல் காவியம்னு விளம்பரப்படுத்திட்டாங்களாம்..”

  4. இது பழைய ஜோக் தான் என்றாலும், கல்யாண போட்டோ வை குழைந்தைகளிடம் காட்டி பாருங்கள் – நான் மட்டும் இல்லையே ன்னு விழுந்து அழும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s