ஆச்சி தமிழ்ப் பேச்சி!

temp Vijay

விஜய் டிவியின் ஆச்சி தமிழ் பேச்சு நான் ரசித்துப் பார்க்கிற நிகழ்ச்சிகளில் ஒன்று.

சுபாவீயின் மீசை,அவருடைய திருத்தமான தமிழ் மட்டுமின்றி அவர் குழந்தைகளிடம் பேசும் விதமும் எனக்குப் பிடிக்கும்.

அதில் குழந்தைகள் “பேசும்” போது அவ்வளவாக ரசிப்பதில்லை. காரணம் கதை,வசனம் டைரக்ஷன் வேறே யாரோ என்பது வெளிப்படை. ஒரு குழந்தையின் சிந்தனைக்கு எட்டாததெல்லாம் பேச்சில் வரும்.

ஆனால்,

பேச்சின் முடிவில் கேள்வி கேட்கப் படுகிறபோது குழந்தைகளின் நிஜ ஸ்வரூபம் வெளிப்படும். அது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

நேற்று தொலைக்காட்சியால் தொல்லைதான் என்கிற பொருளில் கௌதம் என்று ஒரு சிறுவன் பேசினான். பெரும்பாலும் அவன் விமர்சனம் செய்தது ராசிப்பலன்,ராசிக் கற்கள்,திருப்பதி,திருவண்ணாமலை நேரடி ஒளிபரப்பு போன்றவைகளை! (பையன் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறான் பாருங்கள்!)

சுபவீ கேட்டார், “ஏன் தம்பி,நீங்க டிவி பாக்கறதாலேதானே இவ்வளவும் தெரிஞ்சிருக்கு? இன்னும் உலகத்திலே நடக்கிற விஷயங்கள் எல்லாமும் தெரிஞ்சிருக்கு?அப்பா டிவி பாக்கறது தப்பில்லைதானே?”

ஒரு நிமிஷம் தயங்கின கௌதம் வெடுக்கென்று சொன்ன பதில், “பாட்டி வீட்லே போய் கொஞ்ச நேரம் பாக்கலாம்”

இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது என் மனசில் எழுந்த ஒரு கேள்வியை உங்களோடு சரி பார்க்க விரும்புகிறேன்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பெரியவர்களுக்கு ஒரு அறிவுப் பூர்வமான சர்ச்சையாக இருக்கலாம். ஆனால் பியர் ஆப் காட் என்பது குழந்தைகளை நல்ல வழியில் இட்டுச் செல்லும் என்பதே என் கருத்து. குழந்தைப் பருவத்திலேயே நாத்திகத்தை மனசில் புகுத்துவது சரியா?

Advertisements

20 comments

 1. விவாதங்களின் போது, பொதுவாக குழந்தைகள் திணறினாலும், பேசுவது நன்றாகவே இருக்கும்.

  அது குறித்து, சுப.வீரபாண்டியன் கூறியது,

  “அதற்கு காரணம், உங்களுக்கு, அதாவது குழந்தைகளுக்கு பொய் பேச தெரிவதில்லை. பரவாயில்லை… விவாதம் தோற்றாலும், உண்மை ஜெயிக்கட்டும்”

  நான் ரொம்பவும் ரசித்தது.

 2. ஆமாம், குழந்தைகளுக்கு சமய்க் கல்வி புட்டினால்த் தான் பின்னாடி எப்படி கேணத்தனமாய் இருந்திருக்கின்றோம் என்று சிந்திப்பார்கள்.

  1. உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் நீங்கள் முன் வைத்திருக்கும் விவாதம் ரசனையாக இருக்கிறது!

  2. Kulanthaikalukku samaya kalviyum vendaam, nathigha kolgaiyum vendaam. Avan kelvi Gnanathai kedukkama irundha podhum. Thappu seidhaal erpadum theiyavaikalaium padhukaapaiyum kodutha podhum.

   Samaya kalvi ellam valandhu ketta namakku than!

  1. ஜகன்,

   இன்னும் சற்று விவரமாக-பின்னூட்டமாகப் போட்டாலும் சரி, வலைப்பதிவாகப் போட்டாலும் சரி..உங்கள் “காலடி” க்கு(!) வருவேன்!

 3. ‘பியர் ஆப் காட்’ என்பதை விட செய்த தவறை பாவ மன்னிப்பு அல்லது பூஜை செய்தல் போன்ற வற்றினால் நிவர்த்தி செய்ய முடியும் என்ற கருத்தே அவர்கள் மனதில் பதிகிறது. அதே குழந்தைகளிடம் தவறு செய்வது என்பது இயல்பு ஆனால் அதை மீண்டும் செய்யாமல் திரித்தி கொள்வதே மனித பண்பு என்ற எண்ணம் விதைக்கப்படுமாயின் நமக்கு ‘புனித’ நூல்கள் என்ன ipc’ கூட வேண்டாம் என்று நம்புகிறேன்.(இதில் எது தவறு என்பதின் விவாதம் தொடர்ந்து கொண்ட இருக்கும் அதையும் இந்த மதங்கள் விடாது)

 4. வணக்கம்! “பியர் ஆப் காட் ” தேவையில்லை என்றே தோன்றுகிறது!
  எது நல்லது எது கெட்டது , என்று் சொல்லி தந்தால் மட்டும் போதுமானது என்று நினைக்கிறேன்!

 5. குழந்தைகளுக்கு காட் பியர் என்பது நம்பிக்கையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். “சாமி கண்ணை குத்திடுவார்” போன்ற பியர் தவிர்க்கப்படலாம்.

 6. பயமில்லா விட்டால் பாதி விஷயம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. இணைப்புப் பிடுங்கப் படும் என்றில்லா விட்டால் electric bill கட்டுவோமா…. Traffic constable இல்லா விட்டால் சாலை விதிகளைத்தான் மதிப்போமா? Fear என்ற வார்த்தையைப் போடுவதால் மூடுபனி பிரதாப்பாகி விடுவோமா என்ன?

 7. குழந்தை பருவத்தில் எதையும் (ஆத்திகம் மற்றும் நாத்திகம்) புகுத்த வேண்டாம் என்பதே என் கருத்து. அவர்களை சுயமாக சிந்திக்க விட்டால் போதும்.
  நானும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

 8. ஆத்திகம்,நாத்திகமும் சைவமும், அசைவமும் மாதிரி.

  எல்லாம் அவரவர் வளர்கின்ற, வளர்க்கப்படுகின்ற பின் பழகுகின்ற சூழ்நிலையைப் பொறுத்தது. சைவம் சாப்பிட்டு வந்தவர் திடீரென அசைவத்திற்கு மாறலாம்.அசைவம் சாப்பிட்டு கொண்டிருப்பவர் தீவிர சைவத்திற்கு மாறலாம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s