சுதந்திரம் ரிடையர் ஆகி விட்டது!

சுதந்திரம் ரிட்டையர் ஆகி ரெண்டு வருஷமாகிறது.

மத்திய அரசுப் பணிகளுக்கு அறுபதுதானே ஒய்வு வயது? வேறே ஆள் கிடைக்கா விட்டால் அதே நபரை எக்ச்ட்டேன்ஷனில் வைப்பது மாதிரிதான் சுதந்திரத்தை வைத்திருக்கிறோம்.

சுதந்திரம் என்பதைப் பிரித்துப் பொருள் கூறினால்,(வட மொழியில்) சு + தந்திரம். இனிமையான தந்திரம் என்று பொருள் வரும். (சு ஹாசினி என்றால் இனிமையாகச் சிரிக்கிறவள் என்று அர்த்தம்!) சுதந்திரம் என்பதே நம்ம ஆட்கள் செய்த தந்திரம்தானோ என்று தோன்றும்.

ஆங்கிலேயன் என்கிற பொதுவான எதிரி நம்மை ஒன்றுபட வைத்தான்.

எதிரி போனதும் எதிர்ப்பும் போய் விட்டது. எதிர்ப்பு போனதும் ஒற்றுமையும் போய் விட்டது.

சில்லறை எதிரிகள் நிறைய இருக்கிறார்கள்.

நமக்கு இப்போது தேவை ஒரு பொதுவான எதிரி.

அது யார் அல்லது என்ன?

Give me few men and women who are pure and selfless. I shall shake this world.

என்று சுவாமி விவேகானந்தா சொல்கிறபோது உலகத்தை அசைக்க முடியும் என்கிற நம்பிக்கையை விட pure and selfless ஆக ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கைதான் இருந்திருக்கும்.

கண்ணெதிரே நமக்குத் தெரிகிற எதிரி அரசியல்வாதிகளின் சுத்தமின்மையும், சுய நலமும்தான்.

வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம். எப்போதும் உண்மையே பேசுவது என்கிற கொள்கை இருந்தால் பாக்கி எல்லா நற்குணங்களும் தானாகவே வந்துவிடும். உண்மை பேச நமக்குத் தடையாக இருப்பது என்ன? பயம். கொஞ்சம் யோசியுங்கள், நாம் பொய் பேசுகிற எல்லா சந்தர்ப்பங்களிலுமே ஒரு பயம் இருக்கும்.

மிலிடரி டிசிப்ளின் என்று சொல்வார்கள்.

இந்திய ராணுவத்தில் பயிற்சி எடுத்த யாரும் பொய் பேசி நான் பார்த்ததில்லை. முரட்டுத் தனமாக நிஜம் பேசி கெட்ட பேர் வாங்குவார்களே ஒழிய பொய் பேசிப் பார்த்ததில்லை.

எக்ஸ் சர்வீஸ் மேன்களைத்தான் தேர்ந்தெடுப்போம் என்று ஒரு இயக்கம் ஆரம்பிப்போமா? என்னோடு உடன்படாதவர்கள் யார் யார்? ஏன்?

உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்களேன்!

Advertisements

6 comments

    1. அவர்கள் கிருமி நாசினிகள் மாதிரி. சாக்கடையில் அவர்கள் கலந்தால் அது நீரோடை ஆகி விடும் என்பது என் ஆசை!

  1. அவர்கள் யுனிபார்ம் மாற்றி(கழற்றி) வெகு நாட்களாகி விட்டன. பதவி அவர்களையும் பொய் பேச வைத்துவிடும் என்பது என் கருத்து. மேலும் வாரிசுகள் இல்லாத அரசியலா? வேறு யாரவது வந்து விட முடியுமா என்ன?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s