அஞ்சே நிமிஷத்தில ஹிந்தி கத்துக்குங்க

முப்பது நாட்களில் ஹிந்தி பாஷை ன்னு புத்தகம் இருக்குறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அஞ்சு நிமிஷத்துலே ஹிந்தி கத்துக்கிறதுக்கு அருமையான வழி இதோ : ஹிந்தி சினிமா பேரெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதையெல்லாம் தமிழ்லே மொழி பெயர்த்திருக்கோம். ஹிந்தி கத்துக்க இதை விட ஷார்ட் கட் கிடையாதுங்க…

ஹம் கிஸீசே கம் நஹி – எங்களுக்கு கிஸ் அடிக்க வரல்லை
தோ ரஹா – ரெண்டு ரவா
ரொட்டி கப்டா அவுர் மக்கான் – ரொட்டியிலே கப்பு வருதுடா மாக்கான்
ஆப் கி கசம் – உங்க மேலே (காக்கா) ஆய் (போயிருக்கு)
சோட்டிசி பாத் – சின்னதா ஒரு குளியல்
காலா பத்தர் – கால் பண்ணனுமா? பத்தர் கடைக்கு போங்க
கூன் பெசீனா – கூலி பேசினியா?
படோசன் – பெரிய பையன்
அமர் பிரேம் – உட்காரு பிரேம்
அந்தா கானூன் – அந்தால போச்சு-காணூம்
ஏக் தூஜே கேலியே – ஏக தூசியா இருக்குன்னா கேளேன்
பிரேம் நகர் – பிரேம் (கொஞ்சம்) நகர்ந்துக்க

என்ன, நல்லா புரிஞ்சிகிட்டீங்களா?

சரி, அப்ப சொல்லுங்க… யாதோங்கி பாராத் ன்ன என்ன அர்த்தம்?

Advertisements

54 comments

 1. நான் கொஞ்சம் சீரியஸா நோட்டு,பேனாவெல்லாம் தூக்கினு வந்திட்டேன் வாத்தியாரே,,பரவாயில்லை, ஆனாலும் “உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.”.
  “ஜெரி ஈசானந்தா”-மதுரை

  1. ஜெரி : நன்றி கவிஞரே…அடிக்கடி வாங்க. புத்தனின் பல்லில் கூறேற்றிக் கொண்ட ஆயுதங்கள்…. அருமையா கவிதை எழுதறீங்க!

  1. வாங்க அருணா மேடம்,

   ப்ரின்சிபாலுக்கே பாடம் நடத்த என்னாலே முடியுமா! பெஞ்சி மேலே நிக்க வெச்சிட மாட்டீங்க? இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன்…

 2. யாதோங்கி பாராத் –யாரோ பார்க்கிறார்கள்
  தோஸ்தானா — நண்பன்தானா?
  ஜமானே கோ திகானா ஹை — ஜமானை திகார் ஜெயிலில் வை.
  ஷோலே — சோலை
  கீத காத்தா சல் — கீதா காத்துல சல்லுன்னு போறா

 3. பாமா விஜயம் படத்தில், சௌகார் ஜானகி தனக்குத்தான் ஹிந்தி தெரியும்னு பீத்திக்குவாங்க… “ எனக்குத்தான் ஹிந்தி தெரியும்… உங்களுக்கெல்லாம் ஒரு இழவும் தெரியாது… பூனம் கி ராத் அப்படீன்னா அர்த்த ராத்திரியில பூனை வந்த்துன்னு சொல்லுவீங்க…”

  1. ஹலோ…ஸ்டார் கேபிள்ஜீ! வாங்க…வாங்க…பெரியவங்கல்லாம் நம்ம வூட்டுக்கு வர்றீங்க… நன்றி…மீண்டும் வருக!

 4. குமுதத்தில் சுமார் 25 வருடம் முன்பே இதே போல ஒரு கட்டுரை வந்த நினைவு இருக்கிறது
  அதிலிருந்து
  யாதோங்கி பாராத் யாரோ அங்க பார்க்கறான்
  கோரா காகஜ் கோரமான காகம்

  1. சூப்பர் சுப்பிரமணி சார், இருபத்தஞ்சு வருஷம் முன்னே நான் ரொம்ப சின்னப் பையன். சூப்பர சுப்பராயனா இருந்தேன்! தகவலுக்கு நன்றி.

 5. யாதோம் கீ பாரத் = ஏதோ கீது பாத்து (நட).
  ஹம் கிசீசே கம் நஹி = அமுக்கி வாசிடா கம்னாட்டி
  குச் குச் ஹோத்தா ஹை = கு(தி)ச்சு கு(தி)ச்சு ஓடாதே
  மைதிலி சந்திரசேகரன்

 6. ஜவஹர்ஜி, ஒரு தத்துவம் சொல்றேன் கேளுங்க.

  சிலர் தமாஷை தமாஷா எடுத்துப்பாங்க
  சிலர் தமாஷை சீரியசா எடுத்துப்பாங்க
  சிலர் சீரியஸை தமாஷா எடுத்துப்பாங்க
  சிலர் சீரியஸை சீரியஸா எடுத்துப்பாங்க

  தமாஷை தமாஷா எடுத்துண்டாலும்
  சீரியஸை தமாஷா எடுத்துண்டாலும்
  விஷயம் தமாஷா முடிஞ்சிடும்.

  தமாஷை சீரியஸா எடுத்துண்டாலும்
  சீரியஸை சீரியஸா எடுத்துண்டாலும்
  விஷயம் சீரியஸா முடிஞ்சிடும்.

  அதனாலே நான் இப்போ சொன்னதை
  நீங்க சீரியஸா எடுக்காம
  தமாஷா எடுத்துக்கணும்னு கேட்டுக்கறேன்.

 7. நானும் நானும் படிக்கப் போறேன் இந்தி – நாங்க படிச்ச காலத்துல ஹிந்தி வாத்யார் கேப்பார் கேள்வி – குர்சி பர் க்யா ஹை ? நாங்கல்லாம் கோரஸா சொல்வோம் – குர்சி பர் குத்தா ஹை — எப்படி இருக்கு – ஏன்னா நாக்காலிலே அவர் ஒருத்தர் தான் உக்காந்துருப்பார். – ஹா ஹா ஹா ஹா ஹா

 8. அஞ்சு நிமிஷத்தில் இந்தி பேச்லான்னு ஆசையா வந்தேன் இனி
  அஞ்சு வருஷத்துக்கு இந்தின்னாலே இது தானய்யா நியாபகத்துக்கு வரும். ஏன்யா இப்படி கெடுதல் உட்ரீங்க. என்னமோ போங்க, நல்லா வருவீங்க தம்பீ.

 9. சல்மான் ஐயா இன்னா சொல்றாக;
  போ, காட்டுக்குப் போய் ஒரு நாற்காலி செஞ்சு செவ்வாய்க்கிழமை வா ‍ அப்டீன்னா?

 10. அவசரமா ஹிந்தி கத்துக்க ஓடி வந்தா இத்தனை பேர் வரிசையிலே நிக்கறாங்க. அதிலே ஒரே ஒரு தப்பு சார்!

  पडोसन = Padosan அப்படினு உச்சரிக்கணும், நீங்க என்னடான்னா
  बडोसन =Badoson அப்படினு நினைச்சிருக்கீங்க. இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே. அப்புறமாச் சொல்லிக் கொடுக்கலாம். 😛 😛 😛

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s