தமிழன் மேனேஜ்மென்ட் முன்னோடி!

எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிற போது, திரு.ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய ‘தமிழன் அறிவியல் முன்னோடி’ என்றொரு பாடம் இருந்தது(ஸ்டாப்.. ரெண்டாயிரத்தி ஒம்போது மைனஸ் ஆயிரத்தி தொளாயிரத்தி என்று கணக்குப் போட வேண்டாம். இன்னும் வாக்கியம் முடியவில்லை) என் தாத்தாவுக்கு!

அதில் படித்ததை எல்லாம் விளக்கு விளக்கென்று விளக்கி உங்களை பாதியிலேயே ஓடச் செய்கிற எண்ணமில்லை. அது பற்றி சில சக ப்ளாக்கர்கள் ஏற்கனவே எழுதி இருப்பதை நான் அறிவேன். ஆனாலும் அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எழுத ஆசை. மீனாட்ச்யம்மைப் பிள்ளைத் தமிழில் நான் தேடும் பாடல் கிடைத்ததும் எழுதுறேன். ஏனென்றால் அந்தப் பாடல் என் மூத்த ப்ளாக்கர்களுக்கும் கிடைக்கவில்லை.

இப்போது எழுத வந்தது வேறே.

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

இதற்குப் பெரும்பான்மையானவர்கள் சொல்லும் அர்த்தம் : கோபக்காரர்கள் முட்டாள்கள் என்பதே. இவ்வளவு எளிமையான அர்த்தம் இருக்கிற விஷயம் தலைமுறை தலைமுறையாக சாகாவரம் பெற்று இன்றைக்கும் பேசப்படாது.

Transactional Analysis என்று ஒரு சப்ஜெக்ட் இருக்கிறது. I am OK You are OK என்று ஒரு புத்தகம் இருக்கிறது. இதெல்லாம் வெளிநாட்டில் நேற்று முளைத்த காளான்கள்! இவைகள் எல்லாம் மனித மனத்தின் பல்வேறு நிலைகளைப் பேசுகிற சமாச்சாரங்கள். அதில் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு ரெண்டைப் பார்க்கலாம்.

மனித மனத்தின் நிலைகளைப் பொதுவாக உணர்வுப் பூர்வ நிலை, அறிவுப் பூர்வ நிலை என்று இரண்டாகச் சொல்லலாம். இந்த இரண்டின் பெருக்குத் தொகை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறாதது-அதாவது கான்ஸ்டன்ட். பெருக்குத் தொகை மாறாதது என்றால் ஒன்றுக்கு மற்றது எதிரானது என்று அர்த்தம். அதாவது ஒன்று கூடினால் இன்னொன்று குறையும். (PV = k)

ஆத்திரம் என்பது உணர்வு. புத்தி என்பது அறிவு. உணர்வு அதிகமாகும் போது k இன் மதிப்பை சமநிலையில் வைக்க அறிவு குறைந்து விடும்.

அறிவு அடங்கியும் உணர்வு தூக்கலாகவும் இருக்கிற மன நிலை எமோஷனல் நிலை. இப்படிப்பட்ட மன நிலையில் முடிவுகள் எடுக்கப் பட்டால் அவை பெரும்பாலும் தவறாகவே அமையும். உணர்வு அடங்கியும் அறிவு தூக்கலாகவும் இருக்கும் மன நிலையை அஸ்ஸெர்ட்டிவ் என்பார்கள். முடிவெடுக்கிற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த அஸ்ஸெர்ட்டிவ்நெஸ் ரொம்ப அவசியம் என்கிறார்கள். (எமோஷனல் இண்டேல்லிஜென்ஸ் என்று ஒரு சப்ஜெக்ட் இருக்கிறது என்று பாய நினைக்கிறவர்களுக்கு : அந்தக் கச்சேரியை தனியாக வைத்துக் கொள்ளலாம்)

ஆத்திரத்தில் இருக்கிறவர் லாஜிக் பேசி எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

வங்கியில் வேலை செய்கிறவர் வட்டியை தப்பாகக் கணக்கிட்டால், கூட்டு வட்டி ஈஸ் ஈக்வல் டு பி இன்டூ ஒன ப்ளஸ் ஆர் பை ஹண்ட்ரட் தி ஹோல் பவர் என்ய்யா. பி என் ஆர் பை ஹண்ட்ரட் போட்டிருக்கியே என்று பாடம் நடத்துகிற மேனேஜர்கள் கிடைப்பது துர்லபம்.

“எவண்டா உனக்கு டிகிரி குடுத்தான்?” என்று விசிறி அடிக்கிறவர்கள்தான் ஏராளம்.

ஆத்திரத்தில் இருக்கிறவர்களிடம் லாஜிக் பேசினால் நம்மை சம்ஹாரம் செய்து விடுவார்கள்.

“ஏன்ய்யா, செத்தன்னிக்கு வரச்சொன்னா பத்தன்னிக்கு வந்திருக்கியே.. அறிவு இல்லை?” என்று கேட்பவரிடம்

“ஆக்சுவலா என்ன ஆச்சுன்னா பஸ்லேர்ந்து ஒர்த்தன் மோஷன்லே இறங்கினதாலே, லா ஆப் கான்செர்வேஷன் ஆப் மொமேன்ட்டம்ன்னாலே..” என்று ஆரம்பித்துப் பாருங்கள்.

அந்த பேட் மொமேன்ட்டால் உங்களுக்கு லூஸ் மோஷன் ஆரம்பித்து விடும்.

இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று திருக்குறளை விட சின்னதாகச் சொல்லியிருக்கிறான் நம்ம ஆள்..

இப்போ சொல்லுங்கள், தமிழன் மேனேஜ்மென்ட் முன்னோடிதானே?

Advertisements

10 comments

  1. ஆத்திரம் வரும்போதும் உணர்ச்சி மேலோங்கி இருக்கும்; ஆனால் அதை ஒருமுறை பிரயோகித்துவிட்டால் அது அடங்கி விடும். அது அனேகமாக அதே மன நிலை உள்ளவர்களிடம் தான் ஏற்படுகிறது. இராமர் , வாலி மாற்றான் மனைவியை கவர்ந்தான் என்று கேள்விப்பட்டு ஆத்திரம் கொண்டு உடனே மறைந்திருந்தாவது வதம் செய்கிறார்.(அடையாளதிருக்கு வாலிக்கு மாலை அணிவித்தாவது) ஏக பத்தினி விரதன். மனைவியை மற்றொருவன் கவர்ந்து சென்று விட்டான் என்ற பிரிவு மனநிலை. ஆனால் சீதை இருக்கும் இடம் அறிந்த பிறகும், இராவணன் தான் தன் மனைவியை கவர்ந்து சென்றவன் என்று அறிந்த பின்னும், நிதானமாக இன்று போய் நாளை வா என்று சொல்லி இறுதியில் அவனை அழிக்கிறான்.
    கோவம் இருக்கும் இடத்தில தான் குணம் இருக்கும் என்று தமிழன் அவசர அவசரமாக மறுத்திருப்பது இதனால்தானோ?

    1. //கோவம் இருக்கும் இடத்தில தான் குணம் இருக்கும் என்று தமிழன் அவசர அவசரமாக மறுத்திருப்பது இதனால்தானோ?//
      இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம். யோசிப்போம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s