இசைஞானி யோசிக்கணும்!

Raajaa1

இளையராஜா அவர்களின் காமென்ட்டைப் படித்தீர்களா?

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கிற ஸ்டேட்மென்ட் மதம் சார்ந்தது என்கிற அவரது புரிதலில் நமக்கு வேறுபாடு இருக்கிறது.

‘கடமையைச் செய். பலனை எனக்கு விட்டுவிடு’ என்று பகவத் கீதை சொல்கிறது.

இதற்கு என்ன அர்த்தம்?

நீ வெறும் கருவிதான். உன் செயல்களால் நன்மை ஏற்பட்டாலும், தீமை ஏற்பட்டாலும், லாபமானாலும், நஷ்டமானாலும், புகழானாலும், இகழ்ச்சியானாலும் அதெல்லாம் எனக்கே. என்று அர்த்தம்.

நல்லது நடக்கிற போது இளிப்போடு ஏற்றுக் கொள்கிறோம். தப்பாகிப் போனால் ‘அவன் சித்தம் அப்படி’ என்று மேலே கையைக் காட்டுகிறோம்.

தோல்விகளால் வருகிற துவளலும் நமக்கு வரக் கூடாது. வெற்றியால் வருகிற மதர்ப்பும் மண்டைக்கு ஏறக் கூடாது என்பதற்காக சொல்லப் பட்டது.

புகழை விடப் பெரிய போதை கிடையாது. அதை விட அதிக மமதை தருவது எதுவுமில்லை. அதனால் சொல்லப்பட்ட வாக்கியம்தான் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’

இதே அர்த்தம் வருகிற மாதிரி ‘நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்’ என்று பைபிள் வாசகம் கூட இருக்கிறது.

மேற்சொன்ன மூன்றில் எதுவுமே மதம் சம்பத்தப் பட்டது அல்ல. எல்லாமே மனிஷன் சம்பத்தப் பட்டது.

இறைவனுக்குப் புகழ் எதற்கு என்கிற கேள்வி கூட சில சிந்தனைகளைத் தருகிறது.

இறைவனுக்குப் புகழைத் தருவது அவருக்கு வேண்டும் என்பதற்காக அல்ல. நமக்கு வேண்டாம் என்பதற்காக!

கோயிலுக்கு வேண்டிக்கொண்டு முடி இறக்குகிறவர்களைப் பற்றி சிலர் தமாஷ் (என்று நினைத்துக் கொண்டு) பண்ணுவதுண்டு.

“திரும்பி வளர்ந்துடும்ன்னுதானே எடுக்கிறே. கை கால் எதையாவது எடுக்கிறதுதானே?”

அவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாமிக்கு உபயோகப்படும் என்கிற நினைப்பில் முடியை யாரும் தருவதில்லை. முடி என்றும் வேறு விதமாகவும் ரொம்பக் கேவலமாகப் பேசினாலும், ஒவ்வொருத்தரும் உயிராக நினைப்பது அதைத்தான். மீசையைக் கூட சிரைக்க தைரியமில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். மேற்சொன்ன காமெண்ட்டை அடிக்கிற பலரும் இந்த ரகம்தான்.

முடியைக் கொடுப்பதன் மூலம் கொஞ்ச நாளைக்கு அழகைத் தியாகம் செய்வதாக நம்புகிறார்கள் என்பதே நிஜம்.

இளையராஜா சார்.. சுருதி பிசகுவது இசைக் கலைஞனுக்கு அழகல்ல

Advertisements

23 comments

  1. நவநீதகிருஷ்ணன் : அடுத்தவங்க ஆர்டிகிளைப் போடறப்போ நன்றின்னு போடறதில்லையா? குறைஞ்சது ஒரிஜினல் ஆத்தர் பேரையாவது போடலாமில்லே?

 1. //முடி என்றும் வேறு விதமாகவும் ரொம்பக் கேவலமாகப் பேசினாலும், ஒவ்வொருத்தரும் உயிராக நினைப்பது அதைத்தான். மீசையைக் கூட சிரைக்க தைரியமில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். //

  என்ன கொடுமை சார் இது!

 2. மேலே கட்டிங் படித்தேன். இளைய இராஜ இசைக்கு இராஜாவாக இருந்தாலும் நான் அவருடைய அற்ப புத்தியை (இளைய ராஜா ரசிகர்கள் மன்னிக்க) இசையுடன் தொடர்பு படுத்திக் கொள்வது இல்லை.

  விரும்பாதவர்களை மேடையில் புகழ்ந்தாலும் சமயம் கிடைக்கும் போது எரிச்சலை தீர்த்துக் கொள்வது வெகு சிலரின் வழக்கம்.

  லூசில் விடுவோம் !

  🙂

 3. //மேலே கட்டிங் படித்தேன். இளைய இராஜ இசைக்கு இராஜாவாக இருந்தாலும் நான் அவருடைய அற்ப புத்தியை (இளைய ராஜா ரசிகர்கள் மன்னிக்க) இசையுடன் தொடர்பு படுத்திக் கொள்வது இல்லை.//

  தெளிவான முடிவு தல 🙂 🙂

  1. நன்றி குரு, நமக்கு குமுதம் படிச்சப்புறம்தான் தெரிஞ்சுது. அவங்க கொஞ்சம் அட்வான்சாவே எழுதிட்டாங்க!

 4. அவரோட ஆற்றாமையை இப்படி உரையாற்றி தணிச்சிருக்காரு… 🙂

  இதைத்தான் நம்மாளு திருவள்ளுவர்,

  யாகாவாராயினும் நாகாக்க காவாராயின் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ன்னு சிம்பிளா சொல்லியிருக்கார்.

 5. இயலாமையோ , கோவமோ, சந்தோஷமோ, பொறாமையோ எந்த உணர்ச்சியும் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் வாய் உலரும், உளறும்…அதற்க்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு இந்த மனிதருடைய பேச்சு

  1. நான் சொன்னதை சரியான அர்த்தத்திலே எடுத்துகிட்டதுக்கு நன்றி நவநீ… நம்ம ஆர்டிகிள்சை போடுங்க. கடைசீலே ஒரு வரி : நன்றி-https://kgjawarlal.wordpress.com. அது போதும்!

 6. நடிகராக வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் சொந்த வாழ்க்கை சோகத்தில் ஊடக வௌிச்சம் அதிகமாக படுவதற்குக்காரணமே அவர்களின் நடிப்பு நிஜ வாழ்க்கையிலும் இருந்து தொலைப்பதினால் தானே? கற்றுக்கொள்வதை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதால் தானே நாம் பார்த்துக்கொண்டுருக்கும் அத்தனை வளர்ச்சிகளும் வீழ்ச்சிகளும்?

  மாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்து ஹிந்தி பாடல்களைப்போல் வேண்டும் என்ற போதுதான் இரட்டையராய் சிம்மசானம் போட்டு அமர்ந்தவர்களின் ராஜ்யத்தை சுருக்க முடிக்க முடிந்தது. அதனால் தான் ஒவ்வொருத்தரின் உள் மனத்தில் ஊறிக்கொண்டுருந்த மண்சார்ந்த வௌிப்பாடுகள் உற்சாகமாய் பீறிட்டது. இந்த உலகம் இசைக்கு இவர் மட்டும் தான் ஞானி என்று போற்றியது. அந்த ஞானியே விளங்க முடியாத விஞ்ஞானியாய் போனதால் விடிவௌ்ளியாய் முளைத்து உலகமெங்கும் “எல்லாப் புகழும் இறைவனுக்குகே ” என்று தமிழில் பறைசாற்றி தலைகுனிந்து தலைக்கனம் இல்லாததையும் வரவு வைத்துக்கொண்டது.

  http://texlords.wordpress.com/2009/08/04/வாழும்-மகாத்மா-நடிகர்-சி-2/

 7. Ilayaraja is a genius, but only negative thing that destroys everything is his Ego. As a die hard fan I wish him to get a chance/incident to get rid of this infamous Ego.

  @Jawarlal sir: About Tansure, your point of view is also correct. But added to that point, in our hindu culture whatever we are doing have a scientific reason behind it. From various sources I have found out something. About Hair (Mayir), It is black and it has a receptive character of Cosmic energy. Temple is a concentrated area of Cosmic energy. if u do tansure, ur hair will receive the energy and cure any imbalance in your energy body (Suchama udal). That is the reason we do tansure and an observation saint/monk grows hair to receive more. Any comments!!!!!!!!!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s