ரஜினியின் பஞ்ச்களும் மேனேஜ்மேன்ட்டும்

நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி : இது communication இன் effectiveness ஐ விளக்குகிறது.

communication இல் மொழியை விட உடம்பை வைத்திருக்கும் பொசிஷன்,தெளிவு,அழுத்தம்,பார்வை,மாடுலேஷன் என்று பல விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லாம் சரியாக இருந்தால் ஒரு தடவை சொன்னால் போதும். இதையெல்லாம் உணராமல் communicate செய்தால், நூறு தடவை சொன்னாலும் அது ஒரு தடவை கூடப் புரியாது. மணிவண்ணன் வீர பாண்டியக் கட்டபொம்மன் ரோல் செய்திருந்தால் படம் இன்னும் நூறு மடங்கு அதிக நாள் ஓடியிருக்கும்!

ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான் : Do what the boss says.

நம்முடைய பொறுப்பில் இருக்கும் விஷயங்களை விட நம் மேலாளரின் பொறுப்பில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எந்த முடிவிலும் நம் கண்ணோட்டம் குறுகலாகத்தான் இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்புப் படுத்திப் பார்த்து எதையும் பாதிக்காத முடிவுகளை அவரால்தான் எடுக்க முடியும். அது நமக்குப் புரியாது, புரிய வேண்டுமென்கிற அவசியமும் இல்லை.

ஒரு பாஸ் கிட்டே ரெண்டு பேர் வேலை செஞ்சாங்க.

ஒருத்தனைக் கூப்பிட்டு வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வரச் சொன்னாரு. கம்பெனி காரை எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னாரு. ரெண்டு மணி நேரம் கழிச்சி வந்த அவன் கார் திரும்ப வர்றப்போ ஸ்டார்ட் ஆகல்லைன்னு சொன்னான். தினமும் இதே பிரச்சினைதான்.

பாஸ் ஒரு நாள் வேறே ஆளை அனுப்பிச்சாரு.

அவன் பத்தே நிமிஷத்திலே வந்துட்டான். ஆனா ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம்தான் வாங்கிட்டு வந்தான்.

முதல் ஆளைக் கேட்டா ஐஸ் க்ரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆகல்லைன்னான். ரெண்டாவது ஆளோ, வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கினாத்தான் ஸ்டார்ட் ஆகல்லைன்னான்.

வண்டி பழசாயிடிச்சு. கம்ப்ரெஷன் கம்மி ஆனதாலே கோல்ட் ஸ்டார்ட் ஆகல்லைன்னு கண்டு பிடிச்சி இன்ஜினை ட்யூன் பண்ணாரு பாஸ். ஒண்ணையும் மத்ததையும் சம்பத்தப் படுத்திப் பார்க்கணும்! boss is always right!

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது : Don’t chase an unrealistic goal.

நம் எல்லாச் செயல்களும் இலக்கை நோக்கித்தான் இருக்க வேண்டும் என்பது சரிதான். அதே சமயம் இலக்கு சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சம்பந்தப் படுகிற போது பத்து மாசத்தில் குழந்தை பிறக்கிறது. ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் சம்பந்தப் பட்டால் ஐந்து மாசத்தில் குழந்தை பிறக்குமா?

எப்டிங்க?

மத்த பன்ச் டயலாக்குகளை அப்புறம் பார்ப்போம்.

Advertisements

7 comments

  1. அர்த்தமே இல்லாமல் எந்தவொரு பன்ச் டயலாகும் இருக்க முடியாது. மற்றபடி ரஜினியின் பன்ச் என்றால் அது நிச்சயம் பயன்படுத்தக் கூடியது தான்.

  2. பிரமாதம் ஜி. இதயே நாங்க சொன்னா விசிலடிச்சான்குஞ்சுகள்-னு சொல்லிருவாங்க. உங்களமாதிரி ஆளுக சொன்னாவாது ஒத்துகறாங்களானு பாப்போம் 🙂

    //மத்த பன்ச் டயலாக்குகளை அப்புறம் பார்ப்போம். //

    தொடருங்க தொடருங்க 🙂

  3. கண்ணதாசன் கவிதைக்கு புதுசு புதுசா விளக்கம் சொல்வாங்களாம். நான் அப்படி நினைச்சி எழுதலை…ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு’ம்பாராம்…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s