அலுத்துப் போனவனுக்கு புளுத்த கத்திரிக்கா!

இந்தப் படம் சில நடிகைகளின் அவியல். யார் யார்ன்னு தெரியுதா?

இந்தப் படம் சில நடிகைகளின் அவியல். யார் யார்ன்னு தெரியுதா?

“உலகத்திலேயே கஷ்டமான விஷயம் பையனுக்கு கல்யாணம் செய்வதுதான்” என்றார் நண்பர் சேஷாத்ரி.

சேஷாத்ரியிடம் ஒரு கெட்ட பழக்கம்.

சமீபத்தில் அவர் எதைச் செய்தாரோ அது ஹெர்கூலியன் டாஸ்க் என்கிற மாதிரி பேசுவது. ஆனால் ஒரு விஷயம். கஷ்டமோ நஷ்டமோ, அதை அவர் விவரிக்கிற ஸ்டைல் சுவாரஸ்யமாக இருக்கும்.

“இந்தப் பொண்ணு பார்க்கிற வேலையை ரெண்டு வருஷம் முன்னே ஆரம்பிச்சேன்” என்று ஆரம்பித்தார்.

“எத்தனை கண்டிஷன்களோ அவ்வளவு தூரம் பொண்ணு அமைகிற பிராபபிலிட்டி நேரோ ஆயிடுது. பிராபபிலிட்டி நேரோ ஆனா நம்பர் ஆப் அக்கேஷன்ஸ் அதிகமாயிடுத்து”

‘சார் ரொம்ப ஹை டெக்லே பேசறீங்க. நான் எசெல்சீ பெயில் ங்கிறதை ஞாபகம் வச்சிக்கணும் நீங்க”

“உனக்குப் புரியறாப்பலேயே சொல்றேன். ஒரு இருட்டு ரூமிலே பச்சை கலர் சாக்சுங்களும், சிகப்புக் கலர் சாக்சுங்களும் இருக்கு. ஒரே கலர்லே ரெண்டு சாக்ஸ் வேணும்ன்னா மொத்தம் எத்தனை சாக்ஸ் கைலே எடுத்துகிட்டு வரணும்?”

“மூணு”

“நீயே சொல்லிட்டியே! ரெண்டு டைப்புன்னா தப்பாப் போறதுக்கு ஒரு சான்சு. எத்தனை டைப்போ அதைவிட ஒண்ணு அதிகமா எடுத்து செலெக்ட் பண்றோம். பொண்ணு பாக்கிறதிலே எத்தனை டைப்பு, என்னென்ன நார்ம்சு, அப்ப எத்தனை தப்புக்கு சான்ஸ் இருக்கு அதை ஓவர்கம் பண்ணனும்ன்னா எவ்வளவு எடுத்து செலெக்ட் பண்ணனும்?”

“பின்னிட்டீங்க சார்”

“இரு. நான் இன்னம் சீவவே ஆரம்பிக்கவில்லை. அதுக்குள்ளே எங்க பின்றது”

“சொல்லுங்க”

“எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் பிடிக்கல்லேங்கிறான். அவன் யார் யாரைப் பிடிக்கல்லேன்னு சொல்றான்னு ஒரு டேடா பேஸ் போட்டு ஆராயிஞ்சேன். ஒரு க்ளூவும் கிடைக்கல்லே. உசரம்,குள்ளம்,குண்டு,ஒல்லி,நீட்ட மூக்கு,சப்பை மூக்கு,ஏழை,பணக்காரி,கருப்பு,சிகப்பு எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிட்டான்.”

“சார், பொண்ணு பாக்கற பசங்களோட மைன்ட் செட் ரெண்டு விதமா இருக்கும்”

“என்னது?”

“முதலாவது பிடிச்ச நடிகைகளை ஸ்கேலா எடுத்துக்கிறது”

“அதுவும் கிடைச்சுதேப்பா… டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி ஒரு பொண்ணு திருச்சியிலே”

“கஷ்டம்..கஷ்டம்.. பொண்ணு உங்களுக்கா பையனுக்கா? ஸ்ரேயா மாதிரின்னு சொன்னீங்கன்ன கூட அர்த்தமிருக்கு”

“அப்டிக்கூட ஒரு பொண்ணு பார்த்தமே”

“நான் சொல்ல வந்தது அது இல்லே சார். ஸ்ரேயா மாதிரி கண்ணு, நயன்தாரா மாதிரி மூக்குன்னு ஒரு null set மனசிலே வச்சிருப்பாங்க.  ஒண்ணு அது மாதிரி பொண்ணு கிடைக்காது. அல்லது கிடைச்சாலும் எல்லாம் சேர்ந்து அங்கமுத்து அல்லது சி கே சரஸ்வதி மாதிரி இருக்கும்”

“ரெண்டு விஷயம் தப்பா இருக்கே”

“என்னது?”

“நீ எசெல்சி பெயில்ன்னு சொன்னே. இப்போ நல் செட் அது இதெல்லாம் பேசறே. ரெண்டாவது நீ சொல்ற நடிகைகளெல்லாம் எனக்கே கிழவிங்க. உன் வயசு என்ன?”

“இதெல்லாம் எங்க தாத்தா சொன்னது சார்”

“அவர் என்ன படிச்சாரு?”

“அவர் பி ஏ பெயில்”

“உங்க பாமிலீலே எல்லாரும் எய்ம் பண்றப்பவே எதை பெயில் பண்னலாம்ன்னுதான் எய்ம் பண்ணுவீங்களா?”

“அப்டி இல்லே.. பாஸ் பண்ணப் பண்ண படிச்சிகிட்டே இருப்போம். பெயில் ஆனதும் நிறுத்திடுவோம்”

“சரிதான். நடிகைகளை நார்ம்சா வைக்கிறது முதல் டைப்பு. ரெண்டாவது என்ன?”

“ரெண்டாவது அம்மாவை ஸ்கேலா வைக்கிறது. பையங்க முதல்லே பார்க்கிற பெண் அவங்கம்மாதான். அம்மாதான் மாஸ்டர் சாம்பிள். அதோட கம்பேர் பண்றப்போ ஐஸ்வர்யா ராயை கூட ரிஜக்ட் பண்ணிடுவாங்க. இந்த விஷயத்திலேயும் கிடைக்காத கோலைத்தான் சேஸ் பண்றாங்க”

“பின்னே எப்டித்தான் செட்டிலாவாங்க?”

“தலைப்பைப் பாருங்க”

“ஓஹோ, நீ அப்டித்தான் கல்யாணம் பண்ணிகிட்டியா?”

“அ… அதெப்புடி…நாங்க லவ்ஸ் வுட்டு இல்லே கல்யாணம் பண்ணிகிட்டோம்!”

“நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ்ஸ் வுட்டோம்”

“ம்ம் ஹூம்… நீங்க பண்ணதுக்கு வேறே சீனப் பழமொழி இருக்கு.”

“என்ன அது?”

“If rape is inevitable, why not enjoy it?”

Advertisements

22 comments

 1. தமன்னா, த்ரிஷா, நயன், நமீதா (மும்ஸ் கூட இருக்காங்களோ?) தெரியறாங்க…. எந்தெந்த இடதுலனு கேட்டா ஒண்ணுதான் உறுதியா சொல்ல முடியும்.
  (இந்தக் கேள்வி எல்லாம் choice ல விட்டா நம்ம பெருமை என்ன ஆறது?)

  1. வாங்க பாஸ்டன் ஸ்ரீராம். அப்படியே எழுதினா கொஞ்சம் ரசக்குறைவா இருக்கறாப்பல இருந்திச்சி. அதனாலேதான் சின்ன மாற்றம் பண்ணேன். நன்றி.

 2. கழுத்துக்கு மேல ஒரு பக்கம் உங்களுக்கு பிடிச்ச தமன்னா, மறுபக்கம் எங்களுக்கு பிடிச்ச த்ரிஷா ன்னு தெரியுது.கழுத்துக்கு கீழே இரண்டு பக்கமும் நம்மளுக்கு
  ‘பிடிபடாத’ ஒண்ணாத்தான் தெரியுது.

  🙂 🙂 🙂

 3. //“உங்க பாமிலீலே எல்லாரும் எய்ம் பண்றப்பவே எதை பெயில் பண்னலாம்ன்னுதான் எய்ம் பண்ணுவீங்களா?”

  “அப்டி இல்லே.. பாஸ் பண்ணப் பண்ண படிச்சிகிட்டே இருப்போம். பெயில் ஆனதும் நிறுத்திடுவோம்”//

  LOL :))

 4. பதிவில் உள்ள உண்மை ரொம்ப realistic. அதுக்காக புழுத்த கத்திரிக்காயை வைத்தா இப்படி ஒரு அவியலான item தயாரிக்க வேண்டும்? அதுல இடம் பெற்றுக்கவங்க யார் யார் னு பாக்கர்த்திலேயே எல்லார் கவனமும் போய்டறது……

 5. //“உங்க பாமிலீலே எல்லாரும் எய்ம் பண்றப்பவே எதை பெயில் பண்னலாம்ன்னுதான் எய்ம் பண்ணுவீங்களா?”

  “அப்டி இல்லே.. பாஸ் பண்ணப் பண்ண படிச்சிகிட்டே இருப்போம். பெயில் ஆனதும் நிறுத்திடுவோம்”//

  இந்த ஜோக் உங்க வலைதளத்தில உள்ள பெரும்பாலான ஜோக்குகள காட்டிலும் நல்லாவே இருந்தது.

  கதையின் மைய கருவான பெண் பார்க்கும் படலம் பற்றி (a kind of male chauvinism) எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லாததால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. எனினும் தங்களுடைய எழுத்து நடையும் நகைச்சுவை உணர்வும் நன்றாக உள்ளது.

  1. நன்றி நித்தில். தொடர்ந்து ஆதரவு குடுங்க…. அடக் கடவுளே, இப்பல்லாம் பெண் பார்க்கிறதே மேல் ஷவநிசம் ஆயிடுச்சா!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s