இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

எதிர்க் கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோளை மக்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

வாக்குப் பதிவு சதவீதத்தில் எந்த மாறுதலும் இல்லை. போட்டால் என் கட்சிக்கு இல்லாவிட்டால் யாருக்குமே கிடையாது என்கிற மாதிரி தீவிர ரசிகர்கள் எந்த கட்சிக்கும் இல்லை என்பது தெரிகிறது. இது ஆரோக்யமான விஷயமாகவே நமக்குப் படுகிறது.

ஆளும் கட்சிகளின் மீது மக்களுக்கு பெரிதாக அதிருப்தி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

எதிர்க் கட்சிகளின் (பெரும்பாலும் அ.தி.மு.க.) ஓட்டுக்களை யாரெல்லாம் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அடுத்த சுவாரஸ்யமான விஷயம்.

எதிர்க் கட்சிக்கு விழுகிற எல்லா ஓட்டுக்களுமே ஆளுங்கட்சிக்கு எதிரானவை அல்ல என்பது தெரிகிறது. அதிக பட்சம் 15 சதவீதமே ஆளுங்கட்சிக்கு எதிரானவை. மீதி எல்லாம் நீ பரவாயில்லை என்கிற ஓட்டுக்கள். அது, இருப்பவர்களில் ஓக்கே வாக இருக்கிறவர்களுக்கு விழும் என்பது தெரிகிறது. ஏனென்றால், தி.மு.க./காங்கிரசுக்கு 20 முதல் 25 சதவீதமும், தே.மு.தி.க. வுக்கு 10 முதல் 15 சதவீதமும் வாக்குகள் அதிகமாகி இருக்கின்றன.

தி.மு.க. வா அ.தி.மு.க. வா என்பதில் மக்களுக்கு உறுதி இன்மை இருப்பது மாதிரி தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது.

எதிர்க் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதையும், ஆளுங்கட்சி மீது குறை கண்டு பிடிப்பதையும் நிறுத்தி விட்டு, உயர்ந்த மக்கள் முன்னேற்ற திட்டங்களை தேர்தல் பிரச்சாரங்களில் அறிவித்தால், அவர்களுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்துக்கு-பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கே எல்லாரும் முண்டி அடிக்கிற நிலை இன்று இருக்கிறது. எந்தப் படிப்புப் படித்தாலும், நல்ல ஊதியம் உண்டு என்கிற நம்பிக்கை வருகிற அளவுக்கு ஊதியத் திருத்தங்கள் செய்வது.

மாதாந்திர சம்பளம் வாங்கும் மக்களுக்கு வருமான வரியைக் குறைத்து, திரைப்படக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், பள்ளி கல்லூரிகள் நடத்துகிறவர்கள் ஆகியோருக்கு சற்று கூடுதலான வரியை நிர்ணயிப்பது.

அத்தியாவசியப் பொருட்களின் மேல் வரியை ஏற்றுவதற்கு பதில், மதுபானங்கள், சிகரெட், சினிமா ஆகியவற்றுக்கு ஏற்றுவது. இவை எல்லாம் எவ்வளவு ஏறினாலும் மக்கள் ஆதரவு குறைவதில்லை.

உங்களிடம் ஏதாவது மக்கள் நலத் திட்டங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்…

11 comments

 1. இடைத் தேர்தல்கள் எதிலுமே – MGR காலத்துக்குப் பிறகு – சமீப காலங்களில் –
  எதிர்க் கட்சி ஜெயித்ததாக – தமிழ் நாட்டில் சரித்திரம் இல்லை என்று நினைக்கிறேன்.
  இதற்குப் பல காரணங்கள் உண்டு. இடைதேர்தல் வாக்காளர்கள் – ஆள்பவர்களிடமும், ‘அடி’ யார்களிடமும் – மாற்றாந்தாய் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று நினைப்பதுதான் முதல் காரணமாக இருக்கும்.

 2. //ஆளும் கட்சிகளின் மீது மக்களுக்கு பெரிதாக அதிருப்தி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது//
  –அலுத்துப் போனவனுக்கு புளுத்த கத்திரிக்கா!–

 3. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, ஒருவருக்கொருவர் திட்டக்கமிஷனுடன் இணைந்து, நாட்டு நலனை முன்னிட்டு செயல் பட்டால் போதும். இது இல்லையென்றால் அது என்கிற மனோநிலை மாற வேண்டும். புது அணி (கட்சி) உருவாக்கப்பட வேண்டும். அது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட வேண்டும். மக்கள் விரும்புவது(எதிர்பார்ப்பது) “ர”.. வில் ஆரம்பித்து “னி” இல் முடியுமே அந்த மூன்றெழுத்து சக்தி தான்.

  1. சிம்வா : கஷ்டமான புதிரா இருக்கே…? ர விலே ஆரம்பிச்சி னி இலே முடியற மூணு எழுத்தா? ஒரு வேலை ரமனி யா இருக்குமோ? ரமனி யாருங்க?

  1. பத்த வெக்காதே பரட்டை, இடை தேர்தல்ங்கிறது கவர்ச்சியான தலைப்புதான்! அருமையான படங்கள் கைவசம் இருக்கு. ஆனா ஏற்கனவே பத்மாஜி சொன்ன மாதிரி படத்தைப் பார்த்துட்டு கட்டுரையை படிக்காம இருந்துட்டாங்கன்ன என்ன பண்றதுன்னுதான் போடல்லை..

 4. //புது அணி (கட்சி) உருவாக்கப்பட வேண்டும். அது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட வேண்டும். மக்கள் விரும்புவது(எதிர்பார்ப்பது) “ர”.. வில் ஆரம்பித்து “னி” இல் முடியுமே அந்த மூன்றெழுத்து சக்தி தான்.
  //

  கரெக்ட் தாங்க.. வந்திருவாருனு தான் நினைக்கறேன் !

 5. //மாதாந்திர சம்பளம் வாங்கும் மக்களுக்கு வருமான வரியைக் குறைத்து, திரைப்படக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், பள்ளி கல்லூரிகள் நடத்துகிறவர்கள் ஆகியோருக்கு சற்று கூடுதலான வரியை நிர்ணயிப்பது//

  இதை நானும் வழிமொழிகிறேன்.

 6. //சிம்வா : கஷ்டமான புதிரா இருக்கே…? ர விலே ஆரம்பிச்சி னி இலே முடியற மூணு எழுத்தா? ஒரு வேலை ரமனி யா இருக்குமோ? ரமனி யாருங்க?//

  ஜி, டூ மச் இது டூ டூ மச் 🙂

  ////புது அணி (கட்சி) உருவாக்கப்பட வேண்டும். அது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட வேண்டும். மக்கள் விரும்புவது(எதிர்பார்ப்பது) “ர”.. வில் ஆரம்பித்து “னி” இல் முடியுமே அந்த மூன்றெழுத்து சக்தி தான்.
  //

  கரெக்ட் தாங்க.. வந்திருவாருனு தான் நினைக்கறேன் !//

  வரணும்… கண்டிப்பா வருவார்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s