முயற்சி திருதிரு வினையாக்கும்!

சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான உரையாடலைக் கேட்டேன்.

ஒரு மேலாளருக்கும், அவரிடம் வேலை பார்க்கும் பொறியாளருக்கும் நடந்த உரையாடல் அது.

“முயற்சிக்கிறதுன்னு எதுவுமே கிடையாது. ஒண்ணு நாளைக்குப் பண்றேன்னு சொல்லு. இல்லே நாளைக்கு பண்ண மாட்டேன்னு சொல்லு.”

“அதெப்படி சார் சொல்ல முடியும்? பெரிய ஸ்டேட்மென்ட் அது. ஆறு சப்ளையர்ஸ் இருக்காங்க. பனிரெண்டு நார்ம்ஸ் இருக்கு. ஒவ்வொரு நார்ம்ச்க்கும் மூணு லெவல்ஸ் இருக்கு. எத்தனை பாசிபிளிடிஸ் தெரியுமா?”

“அப்ப நாளைக்கு முடியாதுன்னு சொல்லு”

“முடியாதுன்னும் சொல்ல முடியாது”

“அப்ப முடியும்ன்னு சொல்லு”

“சார் உங்களுக்குப் புரியலை”

“ஆமாம், புரியலைதான். ஒரு வேலை முடியவும் முடியாம, முடியாமையும் இருக்காம எப்படி இருக்க முடியும்?”

“அதுதான் சார் முயற்சி”

“எது, முடிக்கவும் முடிக்காம, முடிக்காமையும் இருக்காம இருக்கிறதுக்குப் பேர் முயற்சியா?”

“குழப்பறீங்க சார்”

“இப்போ, அந்த வேலையை முடிச்சா என்னன்னு சொல்வே?”

“முடிச்சிட்டேன்னு சொல்வேன்”

“இல்லைன்னா?”

“முடிக்கல்லைன்னு சொல்வேன்”

“ஆரம்பிச்சிருந்தா?”

“ஆரம்பிச்சிட்டேன்னு சொல்வேன்”

“முடிக்கிற ஸ்டேஜிலே இருந்தா?”

“முடிக்கப் போறேன்னு சொல்வேன்”

“நடுவிலே கேட்டா?”

“பண்ணிகிட்டிருக்கேன்னு சொல்வேன்”

“எங்கேயுமே முயற்சி வரல்லையே……. எதை முயற்சின்னு சொன்னே?”

அந்த ஆள் இப்போது சரண்டர் ஆனான்.

“நாளைக்கு முடிச்சிடறேன் சார்”

“முடியல்லைன்னா?”

“நாளான்னிக்கு முடிச்சிடறேன்”

“ஏன் திடீர்ன்னு முயற்சியை விட்டுட்டே? முயற்சி திருவினையாக்கும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே…”

“முயற்சி வினைதான் ஆக்குது. அதைப்பாத்து திரு திருன்னு முழிக்கிறப்போ அது திருவினை ஆயிடுது”

Advertisements

10 comments

  1. நானும் இரண்டு வாரமா ஒரு பதிவு எழுத முயற்சி பண்ணுகிறேன். இன்னிக்கு முடிச்சிரணும்னு உட்காருவேன். பேரன் வந்து கீபோர்டில் தட்டுவான். அவன் தூங்கியதும் வரலாம் என்றால் நான் அவனுக்கு முன் தூங்கிடுவேன். நாளைக்கு முடிச்சுரலாம்னு இருப்பேன். இன்னிக்கு எப்படியும் எழுத முயற்சிக்கிறேன்
    சகாதேவன்

  2. //“நடுவிலே கேட்டா?”

    “பண்ணிகிட்டிருக்கேன்னு சொல்வேன்”//
    இதுதானே முயற்சி?
    மேலதிகாரி என்ன விசுவுக்கு அண்ணனா இருப்பார் போல இருக்கே !!!!!!!!!!

  3. இது என்னோட கருத்து.

    இயலாமையின்
    முதல்கட்ட
    வெளிப்பாடு
    எரிச்சல்.

    இரண்டாம் கட்டம்
    கோபம்.

    மூன்றாம் கட்டம்
    அழுகை.

    இறுதிக்கட்டம்
    (தற்)கொலை.

    முடிவை மாற்றி
    முன்னேற்றம்
    தரும்
    முக்கிய கட்டம்
    முயற்சி.

    http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_25.html

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s