திருவள்ளுவர் தமிழரா-வெள்ளைக்காரரா?

ஒரு திருக்குறள் சொல்லு என்றால் உடனே பெரும்பாலானவர்கள் சொல்கிற குறள்,

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதற்குப் பெரும்பான்மையான உரையாசிரியர்கள் சொல்லும் பொருள், ‘அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முன்னால் இருப்பது போல் உலகத்தோருக்கு இறைவன் முதலானவன் ஆவான்.’

இந்தக் குறளில் சிந்திக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அகர வரிசை என்று சொல்வார்கள். அதாவது alphabetical ஆர்டர். அப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்தும் போது அகரம் முதலில் வருவது மாதிரி, உலகத்து உயிர்களை வரிசைப் படுத்தினால் ஆதாம் வருவான் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இறைவனைக் குறிக்க ஆதி என்கிற சொல் அவசியமில்லை. கடவுளில் ஆதியாவது, அந்தமாவது. முதல் மனிஷனை வெள்ளைக்காரர்கள் ஆதாம் என்கிறார்கள், வள்ளுவர் ஆதி என்கிறார்.

இன்னொரு சங்கதியையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

முதலெழுத்து தமிழில் மட்டும் ‘அ’ இல்லை. ஆங்கிலம் உள்பட எல்லா மொழியிலுமே ‘அ’ தான்.

ஏன்?

நாக்கையும் புரட்டாமல், உதடுகளையும் சேர்க்காமல் எழுப்ப முடிந்த ஒலி ‘அ’. குழந்தையிடமிருந்து முதலில் வருகிற ஒலியும் அதுவே.

Advertisements

12 comments

  1. நெஜமாத்தான் பீதியக் கெளப்பிட்டீங்க. என் கூட படிச்சவன் ஒருத்தன் வள்ளுவர் என்ன சாதி தெரியுமாடான்னு கேட்டான். தெரியலைடா நீயாவது சொல்லேன்னேன். உடையாருன்னான். நெஜமாவாடான்னு வாயப் பொளந்துக்கிட்டு கேட்டேன். அவரே தான் சொல்லிருக்காரேடா “அறிவுடையார் எல்லாம் உடையார்னு” கேக்க வந்துட்டான் டீட்டேயில்லுன்னு மானத்த வாங்கிட்டான்.

    1. வாங்க விஜய்…ரொம்ப நாளா ஊர்லே இல்லைன்னு நினைக்கிறேன். உங்க நண்பர் எவ்வளவு அருமையான ரிசர்ச் பண்ணியிருக்காரு, பெரிய ஆளுங்க அவுரு!

  2. வள்ளுவர் எழுதியது ஒரு பிள்ளையார் சுழி பாடல். அகரம்,உகரம்,மகரம்,மூன்றும் அடங்கிய “AUM” கொண்ட பிள்ளையார், ஆதி(அம்மா), பகவன் (அப்பா) அதாவது உலகமே அம்மைஅப்பன், அம்மையப்பனே உலகம் என்று வணங்கிய-உலகுக்கு உணர்த்திய முதற்கடவுள்- அவருக்கு எழுத்துக்களை சமர்ப்பிப்பதாக சொல்லப்பட்டது.அதனால் முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடிமகன் சார் அவர்.(பாத்து-எங்கேயாவது பத்திகிச்சுன்னா-) விட்டா அ(A for Adhi) B for Bhagwan- ன்னு ஆங்கிலேயராக்கிட போறாங்க….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s