30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்……

விஜய் டிவியின் நீயா-நானாவில் கடந்த ஞாயிறு (நேற்று) ஒரு சுவாரஸ்யமான தலைப்பில் விவாதம்.

முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இளமையோடும் அழகோடும் தோன்ற வேண்டும் என்று நினைப்பது சரியா-தவறா?

முதற்கண் அவர்கள் கொடுத்த தலைப்பு தவறானது. ஏனென்றால் பேசியவர்கள் அத்தனை பேரும் செயற்கையாகச் செய்து கொள்கிற இளமையையும் அழகையும் பற்றித்தான் பேசினார்கள். எத்தனை வயதானாலும் அழகோடும், இளமையோடும் தோற்றமளிக்கிற பெண்கள் பலர் இருக்கிறார்கள். ஆகவே முப்பது வயதில் கோடு கிழித்திருக்க வேண்டியதில்லை.

தவறு என்று பேசிய பலருக்கு செயற்கையாக இளமையும் அழகும் படுத்திக் கொள்வது ஒழுக்கக் குறைவானது என்கிற எண்ணம் இருப்பது புரிந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மிஸ்ஸஸ்.சென்னை (திருமதி ரேமா மோகன்?) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் இருவரும் வந்திருந்தார்கள்.

திருமணமான, பிள்ளைகள் பெற்ற பெண்கள் தங்களை அழகாக, இளமையாகக் காட்டிக் கொள்வது தப்பில்லை என்பதை மிஸ்ஸஸ் சென்னை சொல்ல நினைத்தார். ஆனால் அதை கம்யூனிகேட் செய்ய முடியவில்லை.

பாலபாரதி அம்மையார் தன கருத்தை மிகத் தெளிவாக தெரிவித்தார்.

பெண்கள், தாங்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலைக்கும், தங்கள் குடும்பப் பின்னணிக்கும், தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் தேவைக்கும் ஏற்றவாறு உடையணிவதும், அழகு படுத்திக் கொள்வதும் தவறாகத் தெரியாது. அதற்குப் பொருத்தமில்லாது நிர்ப்பந்தமாக செய்கிறபோது வேஷம் போட்டாற்போல் இருக்கும் என்றார். தொடர்ந்து, பெண்கள் இளமையாக, அழகாகக் தோன்றுவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் ஆண்கள்தான். இது ஆணாதிக்க சமுதாயம் என்று அவர் சொன்னதில் நமக்கு உடன்பாடு இல்லை. நிகழ்ச்சிக்கு வந்தவர்களிலேயே பெண்கள்தான் அதிகமான எதிமறைக் கருத்துக்களைத் தெரிவித்தவர்கள்.

நிற்க.

இப்போது நம்முடைய சிந்தனைகள்.

நிஜமாகவே அழகும்,இளமையும் கெடாமல் இருக்கிற பெண்கள் இதையெல்லாம் செய்வதில்லை. தலை முடியைக் கோடாலி முடிச்சு போட்டுக் கொண்டு, சின்னாளம் பட்டுப் புடவை உடுத்திக் கொண்டு, பிளாஸ்டிக் வளையலும் ரப்பர் செருப்புமாக பால் பாங்க்கிற்கு வருகிற பல பெண்கள் ஸ்ரேயாவுக்கு குடும்பத் தலைவி வேஷம் போட்ட மாதிரி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே விவாதம் அவர்களைப் பற்றியது அல்ல.

ப்யூட்டி பார்லருக்கு ஒரு வாரம் போகாமல் இருந்தாலோ, நல்ல உடையோ அல்லது அலங்காரமோ இல்லாத போதோ, தேனீ குஞ்சரம்மா மாதிரி இருப்பவர்களைப் பற்றியது விவாதம்.

இதுமாதிரி செயற்கை அழகும்,இளமையும் செய்து கொள்வதற்கு எளிமையானது முதல், ரொம்ப ரிமோட்டானது வரை பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ரொம்பவும் ஆரோக்யமான ஒரு காரணத்தையும் ரிமோட்டான ஒரு எதிமறைக் காரணத்தையும் பார்ப்போம்.

தான் அழகாயும் இளமையாயும் இருக்கிறோம் என்கிற உணர்வு தன்னம்பிக்கையைத் தரும். இந்தத் தன்னம்பிக்கை பலவிதமாகவும் அவர்களது செயல்பாடுகளில் உதவியாக இருக்கும். இதுதான் பெரும்பான்மையான காரணம்.

இன்னொரு கோணமும் இருக்கிறது. இது ரிமோட்டானது என்றாலும் நிராகரிப்பதற்கில்லை.

செயற்கை அழகும் செயற்கை இளமையும் மனோதத்துவ அடிப்படையில் எதையோ மறைக்கிற ஆசை. கள்ளத்தனம். அவர்களுக்கு வெளியில் சொல்லத் தயங்குகிற ஆசைகள் இருக்கின்றன. ரகசியங்கள் நிறைந்தவர்கள்.

நம் வலைக்குப் பெண் ஆர்வலர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் உதைக்கப் புறப்படுவதற்குள் இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். மேற்சொன்ன மனோதத்துவம் டை அடிக்கிற, விக் வைத்துக் கொள்கிற, தொப்பியால் வழுக்கையை மறைக்கிற,கறுப்புக் கண்ணாடியால் குழி விழுந்த கண்களை மறைக்கிற ஆண்களுக்கும் பொருந்தும்!

கோபிநாத் சார், இந்த வகை ஆண்கள் பற்றிய விவாதம் எப்போது?

Advertisements

22 comments

 1. எனக்குதான் கல்யாணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆகிவிட்டேனே. பின்ன எதுக்கு மேக்கப்பு? எனும் பெண்கள் சிலர். எனக்காகவல்ல என் கணவருக்குப்பிடிக்கும், பிள்ளைகளின் சந்தோசம் எனும் பெண்கள் பலர். ஆள்பாதி மேக்கப் பாதியாமே?

 2. //நம் வலைக்குப் பெண் ஆர்வலர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் உதைக்கப் புறப்படுவதற்குள் இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்//
  ஏதோ உள்குத்து இருப்பதாக உணர்கிறேன்!
  கமலா

 3. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

 4. அழகு என்பது உடம்பைப் பொறுத்ததா, மனதைப் பொறுத்ததா, அல்லது பார்க்கிறவர்கள் கண்ணையும் மனதையும் பொறுத்ததா?
  பொதுவாகவே சிறிய வயதில் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியும், வயதானவுடன் சின்னவர்களாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியும் மனிதர்கள் இரு பாலாருக்கும் உண்டு என்று எண்ணுகிறேன்.

 5. இதே கருத்து குறித்த எனது கவிதைப்பதிவு.

  புருவம் திருத்திய பெண்கள்.
  http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_29.html.

  படிச்சுட்டு கருத்து சொல்லுங்க ஜவஹர்ண்ணே…

  நான் வருத்தப்பட்ட சிலநாடகளில் உங்கள் பதிவும்……..

  நம்ம கருத்துக்கள் நிறைய ஒத்துப்போவது குறித்து மிக்க மகிழ்ச்சி. 🙂

  1. இல்லை ராஜா… புகைப்பட செட்டிங்கை நான் மாற்றவில்லை. வோர்ட்ப்ரெஸ் காரர்களின் புகைப்படங்கள் வருகின்றன. ப்ளாக்ஸ்பாட் காரர்களின் படம் வருவதில்லை. என் படம் கூட ப்ளாக்ஸ்பாட் ப்ளாக்குகளில் வருவதில்லை.

 6. தேனீ குஞ்சரம்மா, இல்லைங்க , அது தேனி. எங்க மாவட்டத்து பேரவே தப்பா அடிச்சுப்புட்டிங்களே. அதுவும் இல்லாம , அந்தம்மா அழகுக்கு என்னையா கொறைய கண்டீரு ?

  1. விவேக் : ஆஹா… வந்துட்டாங்கய்யா! தேனி குஞ்சரம்மாவோட அழகை குறை சொல்லல்லை அய்யா… மேக் அப் இல்லைன்னா வயசு தெரிஞ்சிடும்ங்கிறதுக்காக சொன்ன உவமை அய்யா அது. இதுக்கும் நீங்க தேனி குஞ்சரம்மா வயசுக்கு வந்து சில மாதங்களே ஆனன்னு ஆரம்பிச்சா ஹேண்ட்ஸ் அப்….

 7. செயற்கை இளமை என்று ஒன்று இருக்கிறதா என்ன? ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் செயற்கை இளமை (என்று ஒன்று இருந்தால்) மீது ஆசைப்படுவதில் வியப்பில்லை.

  ‘அழகுக்கு அழகு’ என்பது இலக்கிய அளவில் ஒப்புக்கொள்ளும் படி இருந்தாலும் அழகு செய்து கொள்ளும் ஆர்வம் இயற்கை தானே? கல்லுக்குக் கூட புடவை வெட்டி கட்டி கடவுள் எனும் கூட்டம் தானே நம் கூட்டம்? ஒப்பனை செய்து கொள்வதில் என்ன தவறு? இதில் கள்ளத்தனம் எதுவும் இல்லை. ஒப்பனை செய்து கொள்வதால் தன்னம்பிக்கம் வளரும் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

  ஒரு சீனக் குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. யான்க்சீ நீர்த் தேவதையிடம் (நம்ம ஊர் கங்காதேவி, காவிரித்தாய் போல) ஒரு முதியவன் தன்னை இளமைப்படுத்தும்படி வரம் கேட்டானாம். ‘வரம் தருவேன், ஆனால் இளமையில் செய்த தவறுகளையும் மீண்டும் செய்யும் படி நேரிடும், சரியா?’ என்றாளாம் தேவதை. ‘ஆளை விடு தாயே’ என்று முதியவன் ஓட்டம் பிடித்தானம்.

 8. “தான் அழகாயும் இளமையாயும் இருக்கிறோம் என்கிற உணர்வு தன்னம்பிக்கையைத் தரும். இந்தத் தன்னம்பிக்கை பலவிதமாகவும் அவர்களது செயல்பாடுகளில் உதவியாக இருக்கும். இதுதான் பெரும்பான்மையான காரணம்.” இதில் எந்த தவறும் இல்லையே!வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதுதானே!

  1. நிச்சயம் இதில் தவறில்லை என்பதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறோம் பத்மஹரி. பைசாவுக்கு இரண்டு பக்கம் என்பதால் இன்னொரு பக்கம் என்னவாக இருக்கும் என்றும் கண்டறிய முயற்சித்திருக்கிறோம்.

 9. அவரவர் விருப்பத்திற்கு அழகாக்கிக் கொள்றாங்க, பைசாவின் மத்தப் பக்கம் எல்லாத்துக்கும் தானே இருக்கு…….
  btw, உங்க பின்னுட்டத்தை உங்க ஈமெயில அதி போட்டிருக்கீங்கந்னு நினைச்சு அழித்துவிட்டேன் .மன்னிக்கணும்:-)

  1. ஆன்மீகத்தைப் பற்றி நிறைய எழுத ஆவல்தான், ஆனால் அதை எதிர்பார்க்கிறவர் எதைப் படித்திருக்கிறார்? எதிலிருந்து பின்னூட்டம் எழுதுகிறார் என்பதையும் பார்க்கிறேன். ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது புரிய வேண்டுமல்லவா!!!

 10. Enna kodumai idhu dye adikravan lam kallathanamana ennangal vachurukan adikadhavan nallavan solra madiri iruku. Dye adichutu uthamana irukra enga annachiyum undu..make up potukama kadavul bhakthi solitu bus la idichu pakra en nanbargalum undu.

  Thanudaiya make up ngradhu thani manidha suthandiram..than kuraigal matravargaluku teriya avasiyam ilai than niraigal matumey parkatum nu thanambikaya thara vishayam. oru official meeting ku deodrant podama sambar vaadai yoda poi thalai vali kudupadhai vida kodumai onum ilai.

  1. ஸ்ரீநிஜி, டை அடிக்கிறவங்க எல்லாரும் தப்பானவங்கங்கிறது நம்ம அபிப்பிராயம் இல்லை. டை அடிக்கிறதோட சைக்காலஜியைத்தான் சொல்லியிருந்தேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s