கமலஹாசன் என்கிற களிமண்!

உற்பத்திப் பொறியியலில் முதன்மையானது வார்ப்புகள்.

இரும்பை உருக்கி அச்சில் ஊற்றி விரும்பிய உருவத்தைக் கொண்டு வருகிற யுக்தி. அச்சை எப்படி உருவாக்குவது?

எந்த உருவம் வேண்டுமோ அதை எதிலாவது பதிக்க வேண்டும். அப்படிப் பதிக்கிற போது அந்த உருவத்தின் குழிந்த அச்சு உருவாகிறது. அதில் உருக்கின இரும்பை ஊற்றுகிற போது குவிந்த உருவம் கிடைக்கிறது.

எதிலாவது என்று சொன்னோமே, அது எப்படி இருக்க வேண்டும்?

உருவத்தைப் பதித்த உடன் அப்படியே எடுத்துக் கொண்டு அதே போல பிரதிபலிக்க வேண்டும். அந்தக் குணம் எந்தப் பொருளுக்கு இருக்கிறது?

களிமண்.

களிமண்ணைக் கொஞ்சம் நீர் சேர்த்துப் பிசைந்து கொண்டால், அதில் எந்த உருவத்தை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதை அச்சாக உபயோகித்தால் அது மாதிரி பல உருவங்களை உற்பத்தி செய்யலாம். மண்ணாலான அச்சை விட அது உருவாக்குகிற இரும்பு உருவங்கள் உறுதியாகவும் நீண்ட நாள் நீடித்திருப்பவையாகவும் இருக்கும்.

டைரக்டர்களின் கற்பனை உருவத்தை மனதில் பதித்து அச்சை உருவாக்கி அதில் இரும்பு வார்ப்பு மாதிரி உறுதியான பாத்திரங்களை உருவாக்குகிற திறமை இருக்கிற கமலஹாசன் களிமண்தானே? எத்தனை எத்தனை வார்ப்படங்களை உருவாக்கினாலும் மறுபடி தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் அடுத்த வார்ப்படத்துக்கு களிமண் தயாராகி விடும்.

வார்ப்புகள் அழிந்தாலும் களிமண் அழிவதில்லை.

ஐம்பது வருஷமென்ன, ஐயாயிரம் வருஷமானாலும் களிமண் அதே குணத்தோடு, மென்மேலும் சிறந்த வார்ப்புகளை உருவாக்கவல்லது. தொடரட்டும் புதுப் புது வார்ப்புகள்.

‘சலங்கை ஒலி’ மற்றும் ‘சிப்பிக்குள் முத்து’ படங்களைப் பார்த்த சிவாஜி கணேசன், “நல்லாத்தான் நடிச்சிருக்கே, ஆனா என்னைக்கு நீ தாடி மீசை இல்லாம கிழவன் வேஷம் போடறயோ அன்னிக்குத்தான் உன் நடிப்பை நான் பாராட்டுவேன்” என்றாராம்.

கமலின் உடனடி முயற்சி நாயகன்.

தாடி இல்லாமல், விக் வைக்காமல் அதில் வயதான வேடம் பண்ணி நடிகர் திலகத்துக்குக் காட்டிய போது “நான் ஹீரோவா பண்றப்போ இது மாதிரி கதைகள் வரல்லையெடா!” என்று ஏங்கியதோடு நில்லாமல் “இந்த வருஷமும் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் உனக்குத்தாண்டா” என்றாராம்.

கமலின் அடுத்த முயற்சி தாடி மீசை ரெண்டுமே இல்லாத கிழ வேடம்.

சுஜாதா ரங்கராஜன் கமலிடம் “ஒரு தாத்தாவை ஹீரோவா வெச்சி எடுத்த படம் சக்கைப் போடு போட்டு ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளியிருக்கிறதே, அப்படி ஒரு படம் பண்ண ஆசை இருக்கா?” என்று காந்தி படத்தை சுட்டிக் காட்டி கேட்டாராம். அதுதான் இந்தியன் படத்தின் விதை.

கமலின் இந்தியன் பட கெட் அப் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நினைவு படுத்துவதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள்?

கமல் உள்பட பலரும் ஜெ.கே யை நாத்திகர் என்று எண்ணியிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு agnostic. ஏறக்குறைய நாத்திகத்திலிருந்து agnosticism க்கு அவர் மாறியிருப்பதை தசாவதாரம் படம் காட்டுகிறது!

72 comments

 1. \\’ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்!’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

  வட இந்திய தனியார் சேனலுக்கு கமல் ஹாசன், நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:

  திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை. குடும்ப அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது பலமானது. ஆனால் அதற்காக திருமணம் அவசியமில்லை.

  வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம், என்றார்.

  உடனே செய்தியாளர் குறுக்கிட்டு,’அப்படியானால் 2 குழந்தைகள் பெற்ற பின் சரிகாவை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்றார்.

  அதற்கு கமலஹாசன், “ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’ என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்.

  என் குழந்தைகளுடன் இப்போது சரிகா எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களும் அப்படித்தான். குழந்தைகள், சரிகாவுடன் இருக்க விரும்பவில்லை.//

  இது போன்ற கருத்துடைய மனிதரை தமிழன் என்று சொல்லவே அருவெறுப்பாக உள்ளது.

  1. ரஜினி (எ) பிங்களன் சார். கமலஹாசனின் இந்தக் கருத்து எனக்குக் கூடப் பிடிக்கவில்லைதான். ஆனாலும் அவருடைய கலையுலக சாதனைகளை இந்தக் கருத்தோடு தொடர்பு படுத்தத் தேவையில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

 2. தலைவா, கமலஹாசன் சிறந்த நடிகர் தான் . நீங்க சொன்ன மாதிரி களிமண் தான் . ஆனா எல்லாரும் அவர சிறந்த படைப்பாளினு சொல்லிகிறாங்க , அதுல எனக்கு அந்தளவுக்கு உடன்பாடு இல்லை. பிறமொழி படங்களை நம்மவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதில் கைதேர்ந்தவர்.

  1948’ல் வந்த அகிரோ குரசோவா’வின் ‘ Rashomon’ தான் விருமாண்டியின் கதை கரு. அதே படத்தில் சிறை கதவுகளை பிய்த்து கொண்டு அந்த ஈட்டி முனைகளால் காவலர்களை குத்துவது போன்ற காட்சி ‘spartacus’ என்ற ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி. அன்பே சிவம் படத்தின் முதல் பாதி , ‘Flights, trains and Automobiles’ படத்தின் காப்பி. தெனாலி, பஞ்சதந்திரம் , இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம் , இப்படி எல்லாமே தழுவல் படங்கள் தான் . அடுத்து ‘ wednesday’ படத்த ரீமேக் பண்றாராம்.

  வேற்று மொழி படங்கள் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து கமல் மேல் இருந்த அபிமானம் குறையத்துவங்கிவிட்டது.

  1. விவேக் ; படைப்பாளிகளின் மனதிலிருப்பதை மிகச் சரியாகப் பிரதிபலிப்பவர் அவர் என்பதே நம் கருத்து. அவராகப் படைக்க நினைத்தவை மக்களைச் சரியாக சென்று சேரவில்லையோ என்பது நம் அச்சம்!

  1. காவிரிமைந்தன் சார், (நானும் தஞ்சாவூர் மாவட்டம்தான்) நானும் அந்த பேட்டியைப் பார்த்தேன். அவருடைய இந்தக் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் இந்தக் கருத்துக்கள் தனியாக விவாதிக்கப் பட வேண்டியவை. கமலஹாசன் என்கிற நடிகரைப் பற்றிப் பேசும்போது இது தேவையில்லை. அவரை ஒரு சமூகப் பிரக்யை இருக்கும் பிரபலஸ்தராக எடுத்துக் கொள்கிற போது இந்தக் கருத்துக்கள் விவாதத்துக்கோ, விமரிசனத்துக்கோ எடுத்துக் கொள்ளப் படவேண்டியவை.

 3. கமலின் பேட்டியை நானும் NDTV யில் பார்த்தேன். அவர் கண்களில் உண்மையும் இல்லை – ஒளியும் இல்லை !! கபடம் தான் தெரிந்தது -என்னை மடக்க முடியாது என்று சொல்லும் சாமர்த்தியம் தான் தெரிந்தது. அவர் நிச்சயமாக ஒரு சாமர்த்தியசாலி தான் -அதில் சந்தேகம் எதுவும் தேவை இல்லை.

  ஆனால் சாமர்த்தியசாலியாக இருந்தால் போதுமா ? மிகத்திறமையானவர் என்பதற்காக ஒரு சமுதாய விரோதியை பாராட்ட முடியுமா ?
  முதலில் ஒருவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். பிறகு தான் நல்ல கலைஞர் என்பது.

  திருமணம் அவருக்கு தேவை இல்லை என்றால் சரி. அவர் விருப்பப்படி துணையை மாற்றிகொண்டே இருக்கட்டும் !
  (அதுவும் எத்தனை வயது வரை வருவார்கள் ? இருக்கும் இளமையும் செல்வமும் போய்விட்டால் யார் சீந்துவார்கள் ?)

  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல சமுதாயச் சிற்பிகளின் உழைப்பினால், தியாகங்களால் உருவாகி இருக்கும் இந்த சமுதாயத்தை/ பண்பாட்டை /குடும்ப அமைப்பை / பந்தங்களை, பொறுப்பற்ற முறையில் சிதைக்க முயலும் அவர் எந்த விதத்திலும் பாராட்டுதலுக்கு உரியவர் அல்ல !

  சிறந்த கலைஞர் என்கிற முறையிலும் அவருக்கு இப்போது கிடைத்திருக்கும் அங்கீகாரமே அதிகம் !

  கல்யாணத்திற்கு முன் சமையலே தெரியாமல் இருந்த என் பெண் திருமணமான ஒரே வருடத்தில் பிரமாதமான சமையல் கலைஞி ஆகி விட்டாள் – இந்த நிலையில் ஐம்பது ஆண்டுகளாக ஒரே தொழிலை செய்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதில் திறமை பெற்றிருப்பதில் அதிசயம் என்ன இருக்கிறது ?

  சினிமா என்கிற கவர்ச்சியும், மிதமிஞ்சிய விளம்பரங்களும் அவருக்கு ஒரு மிகப்பெரிய மாயத்தோற்றத்தை (larger than life image) கொடுத்திருக்கின்றன. இந்த மாயத்தோற்றத்தை நீக்கிப் பார்த்தால் அவர் சராசரி மனிதருக்கும் கீழே தான்.

  உணர்ச்சி வசப்படாமல் நான் எழுதி இருப்பதை இரண்டாம் முறை படித்துப் பாருங்கள் – நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் !

  மற்றபடி -உங்கள் வலைப்பதிவுகள் மிகவும் ரசனையுடன் அமைந்துள்ளன.
  உங்களுக்கு என்
  வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
  – GK
  http://gkpage.wordpress.com

  1. GK சார், முதற்கண் உங்கள் விரிவான, தெளிவான, பண்பான பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை உணர்ச்சி வசப்படாமல் படித்தேன். ஒரு விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் இருக்கும். உங்கள் கோணம் இது. நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். ஆனால் ஒரு சுவாரஸ்யமான விவாதத்தை முன் வைத்திருக்கிறீர்கள். நன்றி.

 4. கமல் மூளை சரியான களிமண் என்று ஒப்பிட்டது நல்லதொரு வஞ்சப்புகழ்ச்சி. அவருடைய அத்தனை படைப்புகளும் இந்த மண்ணில் களிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்

 5. கமல் ஒரு பிறவிக்கலைஞ்ர்.

  அன்பே சிவம் படத்தில் கமல் ஊனமுற்ற தோற்றத்தில் வருவதுபோல் நடிக்க இப்போது இருக்கும் எந்த நடிகராவது ஒத்துக்கொள்வாரா. அப்படியே நடித்தாலும் கமல் போல் இயல்பாக நடிக்க முடியுமா ??!!…

  கமலின் 50வது திரயுலக் ஆண்டிற்கு எங்கள் வாழ்த்துக்களும்.

  //எந்த உருவம் வேண்டுமோ அதை எதிலாவது பதிக்க வேண்டும். அப்படிப் பதிக்கிற போது அந்த உருவத்தின் குழிந்த அச்சு உருவாகிறது. அதில் உருக்கின இரும்பை ஊற்றுகிற போது குவிந்த உருவம் கிடைக்கிறது.//

  விவகாரமா ஆரம்பிச்சி விவரமா முடிச்சிட்டிங்க தல… 🙂

 6. @ Rajini

  அவரது தனிப்பட்ட வாழ்க்கை வேறு
  அவரது கலைத்திறன் வேறு
  அவரது கலைவாழ்க்கை வேறு

  கமல் மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் கிடையாது.

  தமிழ் படங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அவர் முயற்சித்தார் என்பதில் சந்தேகமுண்டா

 7. @ Vivek

  நாயகன், அவ்வை சண்முகி, வசூல்ராஜா ஆகியவற்றை விட்டு விட்டீர்கள் 🙂 🙂

  //ஆனா எல்லாரும் அவர சிறந்த படைப்பாளினு சொல்லிகிறாங்க , அதுல எனக்கு அந்தளவுக்கு உடன்பாடு இல்லை//

  அது சரி

  குணா என்று ஒரு படம் வந்ததே, பார்த்தீர்களா

  மகாநதி

  சதிலீலாவதி

  பம்மல் கே சம்பந்தம்

  தேவர் மகன்

  மைக்கேல் மதன காமராஜன்

  இதுவெல்லாம் கூட ஆங்கில படங்களின் பிரதி தானா

 8. //அன்பே சிவம் படத்தில் கமல் ஊனமுற்ற தோற்றத்தில் வருவதுபோல் நடிக்க இப்போது இருக்கும் எந்த நடிகராவது ஒத்துக்கொள்வாரா. அப்படியே நடித்தாலும் கமல் போல் இயல்பாக நடிக்க முடியுமா ??!!…//

  அந்தப்படத்தில் விடுதியில் அவர் தரையில் படுக்கும் காட்சி வரும்

  அதில் ஒரு கால் உயரமாகவும், அடுத்த கால் கட்டையாகவும் இருக்கும்

  அதை கூட சரியாக காட்சிப்படுத்தியிருப்பார்

  ஊனமுற்றவராக நடிக்க, நொண்டி நடப்பது பலரால் முடிவது தான்

  ஆனால் படுக்கும் போது கூட கால் உயரங்களில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்று நினைத்து அதை செய்வது அசாத்தியம்

  கண்டிப்பாக பாரட்டப்படவேண்டியது

 9. ஜவஹர்,

  நான் கூட கமல் திருமணம் பற்றி விட்ட ஸ்டேட்மெண்ட் படிச்சுட்டு கொதிச்சு போய் களிமண் என்று திட்டுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனா அஇல்லைன்னு பதிவை படிச்சதும் தெரிஞ்சது
  🙂

  1. கண்ணன்ஜி, எல்லாம் உங்க கிட்டே கத்துகிட்ட பாடம்தான் குரு. ஒருத்தரோட கலையுலக வாழ்க்கையையும் சொந்தக் கருத்துக்களையும் குழப்பிக்க வேணாம்ன்னு நீங்க இசைஞானி மேட்டர்லே சொன்னீங்களே!

 10. கமல் நடிப்பைப் பற்றிப் பேசினால், நமக்கு அது பற்றி ஓரளவேனும் தெரிந்தால் விமர்சிக்கலாம், வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது அவர் நம்மைப் போன்று ஒரு பொது மனிதர் தான், நம்மைப் போன்று கருத்து அவருக்கும் இருக்கும், பொதுவான மற்றவைகளில் அவரு மாஸ்டர் கிடையாது அதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை 🙂 அதே போல் இளையராஜா இசை, அதுக்கு மேல அவரோட இசைத் தவிர்த்து பிற கருத்துக்களைச் சொல்லும் போது நம்மைப் போல் அவரும் வாயில் வந்ததை உளறுகிறார் என்று நினைத்துக் கொண்டு நாம போக வேண்டியது தான். வெறி எடுத்த ரசிகர்கள் தான் உதிர்க்கும் சொற்களையெல்லாம் வேதவாக்காக பார்பாங்க. நமக்கு அவர்களுடைய கலை தவிர்த்து பிற பேச்சுகள் முக்கியமற்றது

  1. சரியில்லை ரமேஷ்.

   கூடும் போதே பிரிவுக்கு சௌகர்யம் பண்ணிக்கிறது எப்படி இருக்குன்னா, சாப்பிடும் போதே வாந்தி எடுத்தா கழுவி விட பக்கத்திலே பினாயிலை வெச்சிக்கிற மாதிரி இருக்கு.

 11. கலைஞனுக்குள்ளே இருக்கும் திறமையை நடித்து காட்டும்பொழுது நாம் ரசிப்பதோடு பாராட்டுவதோடு நிறுத்திகொண்டால் நல்லதென்று தெரிகிறது. அதைவிடுத்து அவரது அந்தரங்க விஷயங்களில் நாம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும். அவரது பதில் அவரது சொந்தக்கருத்து அதனால் அவர் திறமைக்குரியவர் அல்ல என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா

 12. sariyaga chonneergal kamal, avar oru veadikkaiyaanavar . kaaranam (thirumanam) kalai thurayil cholvathai pondru oru karuthai chollalaam endru enni vittar endru ennukirean, athaavathu. anbe sivam, padattai kooda oh supper endru 6 matham kalitthu chonna rasigargal thaney endru. ninaithtu irukkalaam, aanaalum, avar sirantha nadikar thanakku oru periya anggikaram intha, samuthayathil illayae enmbathal, kooda av bathil avvaaru amainthirukkalaam, illaya? evvaraayinum, verum viyabara nokkangl mattum kondulla thiray ulagil : kamal, oru samuthaya chinthani kondavar ulagamey ethirthtaalum onmaiyai koora orunaalum oruvarukkum anjaah or alavu veeran,((hey ram,kuruthi punal,mahanathi,sandiyar,anbe sivam,dasavatharam,guna) kamal oru kurinci malar, avar vaarthaikalai vida avar vadivanggal siranthathu (aadaigalai vida agam) endru naan ninaikkirean ?

 13. திருமணம் ஒத்து வரலைன்னா ஏதாவது சொல்லி சமாளிச்சுக்க வேண்டியதுதான்.கமல் ஒரு காதல் மன்னன் இல்லையா? நிஜவாழ்வில் ஒரு மனைவியுடன் வாழ்ந்து காதல் மன்னனாக எப்படி இருக்கமுடியும்?
  பாவம் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். சாமர்த்தியசாலிதான் கமல். குழந்தைகளை தன் வசமாக்கிகொண்டுள்ளரே!இனி அவருக்கு ஒன்றும் பேரிய இழப்புகள் இருப்பதாகச் சொல்ல முடியாது!
  உண்மையாக நான் ஒரு கமல் ரசிகை.கமலை எப்படிப் பார்த்தாலும் உருகுவேன்!//பத்துக்குள்ளெ நம்பர் ஒண்ணு சொல்லு.// பாட்டானாலும், வேட்டையாடு விளையாடு படத்தின் கமாலினி முகர்ஜியுடன் பாடும் //பார்த்த நாள் முதல்னாளே// ஆனாலும் மயங்குவேன்.
  அப்புற‌ம் யூகித்துக்கொள்ளுங்கள் மற்ற(சலைங்கை ஒலி,நாயகன்,பஞ்சதந்திரம்,தெனாலி,அவ்வைசண்முகி) படங்களைப்பற்றி!
  அன்புடன்
  கமலா

 14. அன்பான நண்பர் திரு ஜவகார்,

  அருமையான பதிவு!

  ரொம்ப சரி. கமல் ஒரு ஒப்பற்ற கலைஞன். சிந்திக்க தெரிந்த கலைஞன்! சினமாவை ஒரு பணம் பண்ணும் கருவியாக மட்டுமே நினைக்கத்தெரியாத ஒரு அற்புதமான படைப்பாளி! பெரிய சூப்பர் ஸ்டாரான ஒருவர் ஒரு சிரிப்பு நடிகையை தனது ஜோடியாக காட்ட ஒப்புக்கொள்வாறேன்றால் அது கமலால்தான் முடியும் (சதி லீலாவதியில் கோவை சரளாவுடம் ஜோடி சேர்ந்தது)! அந்த பாத்திரத்தின் தேவையைத்தான் கமல் பார்த்தாறேயன்றி ஜோடி சரியா என்று அல்ல! இது சத்தியமாக யாராலும் முடியாது, கமலைத்தவிர!!

  அகிரா கொருசொவா படத்திலிருந்து inspiration இருந்தால் என்ன?? விருமாண்டியை அதாவது மதுரை தேனீ மண்ணின் மைந்தரை அல்லவே அவர் நம் கண்முன் கொண்டு வந்தார்? ஒரு ஜப்பானிய சமுராயையா அவர் விருமாண்டியில் காட்டினர்?
  விருமாண்டிதான், பருத்திவீரனுக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது!!! இப்போது தமிழ் சினிமாவில் கிளம்பியிருக்கும் எதார்த்த சினிமா அலைக்கு வித்திட்டவர் கமல்! No doubts about that. What none dared, Kamal was ready to do! Only thing that slows down Kamal seems to be the financial constraints when the distributors expect Masala to be added!!!

  வருடம் 1981/82. அப்போது வந்து கொண்டிருந்த படங்கள் குப்பைகளிலும் குப்பைகள்தான்! தயாரிப்பாளர்களும் விநியொகிஸ்தர்கலும் மசலாவைத்தவிர வேறு எதையும் தொடக்கூட மாட்டார்கள்!!! இந்த காலகட்டத்தில் தமிழ்ர்களை பொறுத்தவரையில் சினிமா என்றால் மசாலா, நல்ல சினிமா என்றால் அழுது வடியும், மிகை நடிப்பு மிகுந்த குடும்பகதைகள் மட்டுமே!! (Of course there were exceptions from Balachander, Mahendran, Barathi Raja and a few others). இந்த நேரத்தில் கமல் தன்னுடைய நூறாவது படத்தை ஒரு மசாலா மலையாக ஆக்கி பெரும் வெற்றியை பெற நினைக்கவில்லை! நல்ல படம் கொடுக்க நினைத்தார்! ராஜ பார்வை தந்தார்! குருடனாக, பிறரிடம் அடிபடும் எதார்த்தமான பத்த்ரத்தில் நடிக்க எந்த பெரும் நடிகருக்கு தைரியம் வரும், கமலைத்தவிர?

  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த மாபெரும் கலைஞனைப்பற்றி!!!!

  பலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி புலம்புகிறார்கள்! ஏன் என்றுதான் புரியவில்லை! அது அவரின் வாழ்க்கை, அவரின் எண்ணங்கள், அவரின் கருத்துகள்! அவர் ஒன்றும் ஊரைக்கூட்டி நான் இப்படி சொல்வதானால், செய்வதனால் நீங்கள் எல்லோரும் இதையே செய்ய வேண்டும் என்று குரல்கொடுக்கவில்லை, எதிர்ப்பார்க்கவும் இல்லை! தான் செரியான நினைக்கும் கருத்துக்களை, யாராவது வலிய வந்து கேட்டால் , சொல்லுகிறார், அவ்வளவுதான்!

  நிற்க

  அவர் கருத்துகள், யாரையும் திட்டுவதாகவும் இல்லை, வசைவது இல்லை, சட்டத்திற்கு எதிரானவையும் இல்லை, எந்த ஒரு தனிப்பட்ட அல்லது பொதுப்படையான தாக்குதலோ இல்லை! வாழ்கையை பற்றிய அவரின் கருத்து. அவ்வளவே!

  இது புரியாமல் அவரை வசை பாடும் அரைகுறைகளை என்ன சொல்வது????????

  To cut the story short, Kamal is a gift of Tamils to Indian cinema, if not world cinema! If someone tries to see his abilities through the prism of his personal life, then such a person is not only prejudiced but also has his own personal and opinionated agenda on how things are to be in this world!

  நன்றி
  நோ

  1. விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி மிஸ்டர் நோ(!). ஒரு விஷயம் சொல்கிறேன். . நான் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும் ஒரு கலைஞன். எனக்கு கஞ்சா இழுக்கிற பழக்கம் இருக்கிறது. டிவி பேட்டியில், நான் தினமும் கஞ்சா இழுப்பது வழக்கம் என்று நான் சொல்லலாமா? சொல்லிவிட்டு நான் யாரையும் கஞ்சா இழுக்க சொல்லவில்லையே என்று சொல்வது ஏற்புடையதாக இருக்குமா?

   எதை வேண்டுமானாலும் செய்து கொள்கிற உரிமை எனக்கிருக்கலாம். அதை மீடியாவில் சொல்வது பொறுப்பின்மை.

   பிரபலஸ்தர்களின் சொந்த விஷயங்கள் கலாச்சாரத் தொடர்புடையது என்றால், அதை மீடியாவில் பேசக் கூடாது.

   1. Jawahar, Your writing style also suggests that, you are copying the style of Sujatha. That is the inspiration cast by Sujatha on many people. Kamla himself has told many time that, all actors will have the influence of Sivaji. Likewise, being a good “rasikan”, the overseas movies could have influenced him, what is wrong in that. He is only trying to reach it to the people of his State what he has liked, in format which is understandable to his people.

    He said that, he neither a Leader nor Follower, his views are personal in nature, there are so many people who have the same views, including me. Just becuase he is celebrity you cannot say that in media, he needs to be Hypocritical like we general Tamilans do. If you feel that, his views are not acceptable, don’t even listen to them and be matured enough not follow it. Every writer and creator has a right to express his views. So take other subjects which you like most for discussion.

 15. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
  புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க…
  நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்…
  பல தள செய்திகள்…
  ஓட்டுப்பட்டை வேண்டாம்…
  எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  முழுவதும் தமிழில் படிக்க….

  தமிழ்செய்திகளை வாசிக்க

  தமிழ்செய்திகளை இணைக்க

  ஆங்கில செய்திகளை வாசிக்க

  வலைப்பூ தரவரிசை

  சினிமா புக்மார்க்குகள்

  சினிமா புகைப்படங்கள்

  1. அன்புள்ள அருண், நான் மதிப்பு மிக்க பதிவர் என்கிற அண்டர்ச்டாண்டிங்கில் தானாக இணையட்டும் என்று விட்டு விடுகிறேன். என் மதிப்பு எப்போது உயர்ந்தது என்று அறிய இது நல்ல யுக்தியாக இருக்கும்!

 16. அன்பான நண்பர் திரு ஜவகார்,

  நீங்களும் ஒரு சராசரிதான் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள்!!!!

  கமல் கஞ்சா அடிப்பதைப்பற்றி பேசவில்லை, ரௌடித்தனம் செய்தால் நன்று என்று பேசவில்லை, திருடினால் மனதிற்கு வாழ்கைக்கும் நன்மை பயக்கும் என்று பேசவில்லை!!!!!

  He has not talked about anything that is antisocial nor that would incite voilence nor defames some one or denigrate something! He has talked about his view on an institution called marraige!!!

  Remember, social instituitions are connected with the times one would live through and hence not universal truths! Imagine what Hindus would have said about Divorce 150 years back. That society would have spit on a woman who dared talk about divorce from a husband! Imagine the same now and as you know its no longer an issue! Imagine what happens if some one even acknowledged existence of homosexual behaviour a century ago! It was a taboo and hence no thought or talk was allowed on that issue. But see whats happening around the world. People have started aknowledging the fact that there is indeed a set of people who have different sexual preferences and they need to have some space in the society. Imagine somebody taking about this in a media (Radio or in press) just 50 years ago. He would have been blasted. Imagine the same now. People will think and explore if there are some truths in that. In next 50 years, believe me, we all will not be so much repulsed with the idea of same sex marraiges, or atleast offical sanction of living together! You like it or not, this will happen.
  This all called Zeitgeist, which is an English/ German word signifying the term, “spirit of the time”!

  நண்பரே, ஆதலால், கமல் சொன்னது இந்த சூழலில் கொஞ்சம் அதிக காரமான கருத்துகள் மட்டுமேஅன்றி தவறானதாக எடுத்துக்கொள்ள முடியாது!

  நன்றி

  1. அன்புள்ள மிஸ்டர் நோ. பெரும்பாலானவர்கள் என்மாதிரி சராசரியானவர்கள்தான். உங்களையும் கமலஹாசன் அவர்களையும் போன்ற அறிவு ஜீவிகள் மிகக் குறைவு. ஆகவே எல்லாருக்கும் சரியாகப் படுவது போல பேசுவதே நன்று.

 17. அன்பான நண்பர் திரு ஜவகர்,

  உலகின் சராசரியான மனிதர்கள் முக்கால்வாசிபேர் இருநூறு வருடங்களுக்கு முன் கூட உலகம் உருண்டை என்பதை மனதிற்குள் ஏற்க்கமுடியாமல், புரிபடாமலும் இருந்தார்கள்! ஆதலால் இந்தமாதிரி விஷியங்களில் சராசரி என்பது ஒரு qualification இல்லை! அதேமாதிரி இதைப்புரிந்தவர்கள் எல்லாம் அறிவுஜீவிகளும் இல்லை!

  Its just that you have a very strong preconceived notion on what should be your culture and how it needs to be defined! Of course, nothing wrong with that, but the problem starts once you start defining to others as to what their culture should also be!

  Please note, no one wants “you” to disown what you see as an appropriate culture in which you may live now. It is just that people also have other ideas which do not confirm to yours and which if it does not infringe on anybody else’s personal freedom, confirms to prevailing law of the land, doesnt create social anarchy and conflict, have every right to be enunciated and if possible propagated!

  நீங்கள் இந்த இடத்தில் கமல்ஹாசனை ஒரு நாத்திகனாக மட்டுமே பார்த்து, எப்படி ஒரு நாத்திகனானவனின் கருத்து நல்லதாக இருக்கமுடியும் என்று எடைபோடுவதுபோல தோன்றுகிறது!

  Totally incorrect and Dissapointing!!!

  நன்றி `

 18. அவருக்கு சரியென தோன்றுவதை அவர் செய்கிறார். மற்றவர்களை அப்படி செய்யுங்கள் என்று சொல்லுவதில்லை. அவரது கலைத்திறனை பார்ப்போமே, ஏன் அவரது சொந்த விஷயத்தில் தலையிட வேண்டும்?

 19. ஆங்கிலப்படங்களைப் பார்க்கும் போது தமிழில் இப்படிப் பட்ட படம் வராதா என்று ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக Brave Heart , The God Father, the Untouchables, Pulp Fiction, Silence of the Lambs, A Beautiful Life…… இந்த ஆதங்கத்தை சரி செய்தவர் கமல். ஹீரோ இமேஜ் பார்க்கும் காலத்தில் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்தவர். பன்ச் டயலாக் காலத்தில் பேசும் படம் நடித்தவர், சாம்பு, மேக் அப் கோட் மட்டுமே நடிகன் என்றிருந்த காலத்தில் அப்பு, நல்ல சிவம் வேஷம் போட்டவர், புளிச் புளிச் நாட்டாமை காலத்தில் தேவர் மகன் படத்தில் நடித்தவர். He is the best and has a futuristic view of cinema. அவர் ஒரு “Epitome of Acting”. அவருடைய நடிப்போ அல்லது முயற்சிகளோ கண்டிப்பாக பாராட்டத்தக்கது. அதில் சந்தேகமே கிடையாது.
  சினிமா என்பது உலகத்தின் மிக முதன்மையான, பணம் புழங்கும் ஒரு வர்த்தகம். அதில் ஒரு ஊரில் வெற்றி பெற்றாலும் சரி உலகெங்கும் வெற்றி பெற்றாலும் சரி, A victory is a victory. அதில் அந்த கலைஞர் கமல் போல சினிமா ஞானம் உடையவராகவும் இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சிலை கூட எழுப்பலாம், அவர் கலைச் சேவைக்காக.

  Mel Gibson, Cary Grant, Rock Hudson, Roger Moore, Johnny Depp are all very brilliant actors who had major hits and are very popular. But some of them were Homosexual, some were bi-sexual, some had 5 wives and some had drug addiction. Nobody cared about it. All they cared was about their movies. In our country, we associate very closely with the lives of actors, we want our idols to do as we expect, live our fantasies and die like a king. If we don’t like an Actor, we compare him with another actor and belittle him. Is this all necessary? How many of us worry about our colleague at office smoking too much or our boss marrying a 21 year old girl. Only Gossip mongers and cinema column journalists interest themselves about off-screen lives of actors and backstage. For the rest of us, there is the big screen to watch, listen and enjoy.

  1. Mr.Sundaram, we do agree with your views about Kamal’s performance. and ofcourse no one has a right to judge/indulge in to his personal life. we only think that while talking in a public media he could have been more careful. When a person has numorous followers and admirers, he sometimes unknowingly drives certain things in to hearts of them. That’s it…

 20. நல்ல நடிகனா அவர் இருக்கலாம் ஆனால் அவர் மட்டுமே நல்ல நடிகனா இருக்காருன்னு சொல்லமுடியாது இவருடைய திறமை தெருகூத்துல நடிக்கிற எத்தனையோ நடிகனுக்கு இருக்கு அதனால திறமைய மட்டும் வச்சி ஒருத்தர பாரட்டமுடியாது ஒழுக்கம் வேண்டும். திறமை மட்டுமே போதும் அப்படினாக்க அத வெச்சி சினிமாலா வில்லன் கதாபாத்திரம் எடுத்து நடிக்க வேண்டியதுதானே. நல்லவரா ஒழுக்கமானவர நடிக்க மட்டும் தெரியும் வாழ்க்கையில் ஒழுக்கமா இருக்க தெரியாத. 50 ஆண்டுகளாய் நல்ல நடிகன் பேரு வாங்கியாச்சி 50 வருஷத்துல ஒரு நாளவது நல்ல மனிதனா இருந்திருப்பார

  1. நன்றி கண்ணன், திறமை நிறைய பேருக்கு இருக்கு. ஏன், உங்களுக்குக் கூட இருக்கு, எனக்கு இருக்கு. நாமெல்லாம் அந்த அளவு உயர முடிஞ்சதா? உயர்வுக்கு திறமையை மீறி எதோ ஒன்னு தேவைப் படுது இல்லே?

 21. பிறவி கலைனனக இருப்பவனை காலமும் கலையையே சிந்திபவனை கலை விசயத்தில் விமர்சித்தால் நல்லது
  நான் கமலின் ரசிகன்

  1. எனதன்பு இப்ராகிம் சார், இந்தக் கட்டுரையில் முழுக்க முழுக்க நான் கமலஹாசனின் கலை பற்றி மட்டும்தான் எழுதி இருக்கிறேன்… எது உங்களை இப்படிச் சொல்ல வைத்தது?

   பின் குறிப்பு : நிழல் நிஜமாகிறது தொடங்கி, இன்று வரை நானும் கமலஹாசன் ரசிகன்தான்.

 22. கல்யாணம் என்ற சடங்கு, சம்பந்தம் வேண்டாமே என்று கமல் சொல்வதில் பலருக்கு உடன்பாடு இருக்கும். பலருக்கு இல்லாதிருக்கும். ஒரு பெண் தாயாகிவிட்ட பின்னர் அவளுக்கு ஒரு பாதுகாப்பு என்பதை கணவன், குடும்பம் ஆகிய ‘ஸ்தாபனங்கள்’ தரும். அப்படி இல்லாமல் தெரு விளக்குக் கம்பத்தை பார்த்து நம்பர் ஒன செய்து பிறகு ஓடிப்போகும் ஆண் சபலங்களின் பிரதி பலிப்பாகத் தான் இந்த ‘ கல்யாணம் வேண்டாம் கட்சி’ யைப் பார்க்க முடிகிறது. சிநேகமாக சுகமாக இருப்போம். அலுத்தவுடன் அடுத்த வண்டிக்கு டிக்கட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்பது என்ன மாதிரியான மனப்பான்மை? இதை உச்சத்தில் இருப்பவர் அவர் எந்த துறையைச் சார்ந்தவர் ஆனாலும் சொல்வது சமுதாய அநீதி அல்லவா? திருமண பந்தம் தேவையற்றது என்று ஒரு லட்சம் அல்ல கோடி ஆண்கள் சொல்லலாம், ஆனால் ஒரு ஆயிரம் பெண்கள் சொல்வார்களா? பெண் பெயரில் வலம் வரும் ஆண்களை கணக்கில் எடுக்கக் கூடாது.

  சகல கலா வல்லவர்தான் கமல். அதற்காக உலகில் உள்ள எல்லா விஷயங்களிலும் தீர்மானமாக இருப்பது அதை பரவலாக இறைப்பது சரியாகாது.

  இந்த படம் காபி, அந்தப் படம் காபி என்று பட்டியல் இடுபவர்களுக்கு ஒரு வார்த்தை. இந்தக் காபி வரவில்லையென்றால் அந்த அசல் படம் எத்தனை பேரை போய் சேர்ந்திருக்கும்? சட்ட ரீதியாக காபி உரிமை பெற வேண்டுமானால் அது கட்டுபடி ஆகாது போலிருக்கிறது. இல்லை என்றால் கமல் மாதிரி கலைஞர்கள் அதை சரியான பாதையில் செய்ய முனைந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. மேலும் இந்த காபி படங்களுக்கு கமல் மட்டும்தான் பொறுப்பா? தயாரிப்பாளர் இயக்குனர், முக்கியமான பைனான்சியர் இப்படி பலப் பல ஊக்கிகள் இருப்பார்களே.

 23. கமல்ஹாசன் ஒரு பிறவிக் கலைஞன். ஒரு அரசியல்வாதி அல்ல. ஒரு கலைஞன் உண்மையை பேசுகிறான் என்றால் அதை நாம் வரவேற்கவேண்டும்.
  பொய்களையே அவிழ்த்துவிட்டு பொய்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பல பிரபலங்களின் மத்தியில் உண்மையை பேசும் கமல்ஹாசன் ஒரு சுடர்விவிளக்குதான்.

 24. சார் எனக்கு கமலஹாசனின் மொபைல் நம்பர் வேணும் கிடைக்குமா
  பல வருடங்களா முயற்சி செய்றேன்
  ட்ரை பண்ணுங்களேன்

 25. ஒரு திரைப்படத்தின் பாத்திரங்கள் பல்வேறு கோணமுடையது. பலவேறு பாத்திரங்கள் உள்ளது. பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் அல்லது கதைக்கு ஏற்றாற்போல் புதிய நடிகர்களையோ அல்லது பழைய நடிகர்களையோ கூட நடிக்கவைக்கப்படும். நகைச்சுவையாக விடயங்களைச் சொல்லலாம். சிலவேளை பாத்திரத்தின் பொருத்தம் கருதி, பாத்திரத்துடன் பொருந்திப்போகும் ஒருவரை நடிக்கவைக்கலாம். ஒரு திரைப்படத்தின் கதையுடன் தொடர்பில்லாமல், ஒரு சில காட்சிகளிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ கூட, ஒரு புகழ்பெற்ற நடிகரை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உள்ளன. நகைச்சுவை நடிகர்களை அல்லது நகைச்சுவையை விரும்புவோரை கவரும் விதமாக கதையுடன் தொடர்பில்லாத காட்சிகள் கூட சில திரைப்படங்களில் வந்துள்ளன.

  ஆனால், ஒரு திரைப்படத்தின் கதையுடனோ, கதாப்பாத்திரத்துடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாமல், “மன்மதன் அன்பு” எனும் திரைப்படத்தில் காட்டப்படும் “ஈழத்தமிழர்” பாத்திரமானது வேண்டுமென்றே ஒரு இனத்தை வழிய இழுத்து, இழிவு படுத்தும் வகையிலானது என்பது திரைப்படத்தை பார்த்த எந்த ஒரு சாதாரணனுக்கும் புரியும்.

  இச்செயலானது ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கமல் செய்த செயலானது, கமலஹாசன் எனும் நடிகன் எத்தனை கேவலமானவன் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய செயலாகும்.

  1. தவறான கருத்து. ஈழத் தமிழர்கள் பால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் கரிசனம் உண்டு எனப்து புன்னகை மன்னன், தெனாலி உள்ளிட்ட பல படங்களில் தெரியும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s