அவ பெரிய ராங்கிக்காரி…

“என்னங்க, பால் பொங்கிடிச்சுன்னா ஸ்டவ்வை ஆப் பண்ணிடுங்க. ஒரு காபி போட்டுக்கங்க. அப்படியே எனக்கொரு காபி. அதுக்குள்ளே நான் புடவையை மாத்திகிட்டு வந்துடறேன்.”

“சரி லஷ்மி”

“என்னப்பா இது, இன்னமும் அழுக்கு வேட்டியோடையே இருக்கீங்க? டயமாச்சு, சீக்கிரம் கிளம்புங்க”

“சும்மாவாடா இருக்கேன், காலைலே எழுந்து வாஷிங் மிஷின் போட்டேன், துணியெல்லாம் மடிச்சி வெச்சேன், டிகாஷன் போட்டு வெச்சேன், அம்மாவுக்கு வெந்நீர் போட்டு வெச்சுட்டு அவ ஜாக்கெட்டை அயர்ன் பண்ணிகிட்டிருந்தேன். அதுக்குள்ளே கூப்பிடறா”

“போய்க் குளிச்சிட்டு வாங்கப்பா”

“காப்பியை போட்டுட்டேதான் போறேனேடா.”

“டேய்,அருண் என்னடா இங்கே அப்பாவோட வாயாடிகிட்டு இருக்கே. நீ ரெடியா? ஐயெய்யெ இதென்ன ஆஷ் கலர் பாண்ட்டு… நல்லாயில்லே. போய் பிரவுன் கலர் பாண்ட்டும், ஸ்ட்ரைப் போட்ட சட்டையும் போட்டுக்கிட்டு வா”

“என்னம்மா இது. இப்பதான் அப்பா சூப்பரா இருக்குன்னு சொன்னார்”

“ஏய், பசங்களுக்கு எது நல்லா இருக்கும்ன்னு அம்மாக்குதாண்டா தெரியும். அம்மா சொல்ற டிரெஸ்ஸை போட்டுக்க, அட்டகாசமா இருக்கும். லஷ்மி பிரிஜ் மேலே காபி வெச்சிருந்தேனே எடுத்துகிட்டியா?”

“ஆ..ஆ..பாத்தேன். நீங்க குளிச்சாச்சா?”

“குளிச்சி டிரெஸ்ஸெ மாத்தியாச்சே பாக்கலையா?”

“ஓ… என்ன இது பார்மல் டிரெஸ்? ஜீன்சும் டி ஷர்ட்டும் போட்டுக்கலாமில்லே?”

“போன தரம் அப்டித்தான் புறப்பட்டேன். நீதான் பொண்ணு பாக்கறது உங்களுக்கா அருணுக்கா, போய் பார்மல் டிரெஸ் போடுங்கன்னு சொன்னே”

“அபப சொன்னா….இப்பவும் அதேதானா, நாம யாரு வீட்டுக்குப் போறமோ அதுக்கேத்த மாதிரி போக வேண்டாமா?”

“டயமாச்சும்மா…. வேலூர் போக ரெண்டரை மணி நேரமாவது ஆகும். சரிய்யா லன்ச் டயத்துக்கு அங்கே போன மாதிரி ஆயிடும்”

“சரி லஷ்மி, நான் காரை ஷெட்லேர்ந்து எடுத்து வெக்கறேன். வீட்டை லாக் பண்ணிக்கிட்டு வந்துடறயா?”

“நீங்க ஏன் காரை ஓட்டணும்? டிரைவரா? சாவியை என் கிட்டே குடுங்க”

“அதுவும் சரிதான். அப்பத்தான் கம்பீரமா இருக்கும்”

“யாருக்கு?”

“உனக்குத்தான்”

*******************************************************

“நமஸ்காரம், வாங்க… வாங்க… என்னங்க சம்மந்தி வீட்டுக்காரங்க வந்துட்டாங்க, ஏன் தூரமானவங்க மாதிரி அங்க போய் நிக்கறீங்க”

“இதோ வந்துட்டேன் உஷா. வாங்கோ, ஐ ஆம் சுந்தரராஜன். சூப்பரின்ட்டேன்டன்ட் ஆப்…..”

“உங்க பெருமையை எல்லாம் உக்காந்தப்புறம் வெச்சிக்கக் கூடாதா? உட்காருங்க சம்மந்தி. மாப்பிள்ளை நீங்களும் உக்காருங்க. என்னங்க உள்ளே போய் ஜெயாவை வரச்சொல்லுங்க”

“சரி உஷா, நீ பேசிகிட்டிரு”

“என்ன.. வந்ததுமே சம்மந்தி, மாப்பிள்ளைன்னெல்லாம் சொல்றேனேன்னு பார்க்கறீங்களா? எங்களைப் பொறுத்த வரைக்கும் முடிவு பண்ணிட்டோம். என்னங்க சரிதானே”

“ஆமாம் உஷா”

“நாங்க இன்னம் முடிவு பண்ணல்லை. நேரில பார்த்து முடிவு பண்ணிக்கலாம்னுதானே வந்திருக்கோம். என்னங்க நான் சொல்றது சரியா?”

“கரெக்ட் லெஷ்மி”

“காபி எடுத்துக்கங்க”

“பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி போலிருக்கே?”

“ஹாஹ்ஹா ஹாஹ்ஹா”

“என்ன சிரிப்பு?”

“நல்ல தமாஷ்தான் போங்க”

“எது தமாஷு? பொண்ணு கிழவியாட்டம் இருக்கிறது உங்களுக்கு தமாஷா?”

“ஐயே..இது எங்க வீட்டு சமையல் மாமி”

“இதென்ன புதுப் பழக்கம்.. பொண்ணு கிட்டேதானே காபியைக் குடுப்பாங்க?”

“அதெல்லாம் அந்தக் காலம்ங்க. பொண்ணு ஊனமான்னு பாக்க காபி கொண்டாரச் சொல்றது. ஊமையான்னு பாக்க பாடச் சொல்றது….இவதான் எம்பொண்ணு ஜெயா”

“பெரியவங்களுக்கு நமஸ்காரம் பண்றது உண்டா, இல்லே அதுவும் இடுப்பு புடிச்சிருக்கான்னு பாக்கிறதுக்குன்னுதான்னு சொல்லி விட்டுடலாமா?”

“அம்மா, எனக்கு இடுப்பு புடிச்சிருக்கு”

“என்னடா உளர்றே?”

“இல்லே, பொண்ணோட இடுப்பு புடிச்சிருக்குன்னு சொன்னேன்”

“வழியாதே… வாயை மூடு”

“ஏய், நாட்டி. ஐ லைக் தட் காமெண்ட் டா”

“டா… வா..?”

“என்ன சம்மந்தி நீங்க, பாக்யராஜ் படத்துலே வர்ற அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி எல்லாத்துக்கும் ஷாக் குடுக்கறீங்க. அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டும். நமக்கென்ன வந்தது?”

“லைக் டு ஹேவ் எ டாக் அருண்?”

“ஓ..ஸ்யூர்”

*****************************************************

“என்னங்க… இந்த சம்பந்தம் வேண்டாம்”

“சரி லெஷ்மி”

“என்ன எதுக்கெடுத்தாலும் சரி. ஏன்னு கேக்க மாட்டேங்களா?”

“ஏன் லெஷ்மி?”

“பொண்ணோட அம்மா படு ராங்கிக்காரியா இருக்கா… புருஷனை மதிக்கிறதில்லே. கால் மேலே கால் போட்டு உக்கார்றா…”

“ஆமாம் லெஷ்மி, நானும் கவனிச்சேன்”

“இப்படி ஒரு பொம்பளை வளத்த பொண்ணு படகாமணியா இருப்பா”

“கரெக்ட் லெஷ்மி”

Advertisements

11 comments

 1. ஹா ஹா ஹா ….

  படித்தேன்! ரசித்தேன்!! சிரித்தேன்!!!

  இது உங்க கற்பனையோ இல்லை நிஜமோ தெரியாது ஆனா நான் நிஜமாகவே இவங்க போல் ஒரு காரெக்டர் பார்த்திருக்கேன்.

  அன்புடன்

  1. நல்லா கவனிச்சிருக்கீங்க மஞ்சூர் ராசா. நேரேஷன் இல்லாம வெறும் உரையாடல்லே மட்டும் ஒரு கதையை சொல்றதை பொதுவா யாரும் செய்யறதில்லே. நன்றி…

 2. ரம்ஜான் மாசத்துல எங்க அலுவலகத்துல முழுமையா இரவு நேரப்பணி மாத்திரம்தான். அதனால படிக்க முடியும். கமெண்ட் போடுறது கஷ்டம். உங்க பதிவுகள் எல்லாமே படிச்சுட்டேன். கமல்ஹாசன் பத்தி எழுதுனதுக்கு கமெண்ட் போட நினைச்சு இன்னும் பெண்டிங்க்ல இருக்குது 🙂

 3. ” நான் உன்னைப் பொண்ணு பார்க்க வந்த் போது உங்கம்மாவும் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருந்தாங்க… எங்கம்மாவும் இந்தப் பொண்ணு வேண்டாம்னு சொன்னாங்க… ஏன்னு கேட்டா… நம்ம வந்திருக்கறதை கவனிக்காம, இப்படி போன்ல கால் மேல கால் போட்டு பேசிக்கிட்டே இருக்காங்களே… பொண்ணு எவ்வளவு பெரிய வாயாடியா இருப்பான்னு சொன்னாங்க… ஒருகால் நான் அம்மா பேச்சைக் கேட்டிருந்தா இப்ப கால் வாசி உசிராவது மிஞ்சியிருக்கும்… ஹூம் விதி யாரை விட்டது…? “

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s