எம்.ஜி.ஆர். பாடல்களில் தன்னம்பிக்கை

நேற்று ‘ஆச்சி தமிழ்ப் பேச்சில்’ திரைப்படப் பாடல்களில் தன்னம்பிக்கை என்கிற தலைப்பில் குழந்தைகள் பேசினார்கள். அவர்கள் ஏதேதோ பாடல்களைக் குறிப்பிட்டார்கள்.

எனக்கு சட்டென்று நினைவு வந்தது எம்.ஜி.ஆர். அவர்களின் ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்-உலகத்தில் போராடலாம்’ என்கிற பாட்டுத்தான்.

விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டுமே இதைத்தான் சொல்கிறது.

எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதற்கான அறிவும், திறனும் உனக்கு இருக்க வேண்டும் என்கிறது மேனேஜ்மென்ட். அறிவுக்குப் படிப்பு, திறமைக்கு அனுபவம். எனவே எந்த வேலையையும் எடுத்துக் கொள்ளுமுன் அதைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்று யோசிக்கிறோம் இல்லையா? தெரியாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தம் வருகிற போது பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்கிறார்கள் இல்லையா?

திருவள்ளுவர் கூட வலியறிதல் என்கிற அதிகாரத்தில் நம்மை நாம் அறிய வேண்டியதை வலியுறுத்துகிறார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான்வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செய்யவேண்டிய வேலைக்கு என்ன திறன் தேவை, அதை ஏற்கனவே செய்கிறவன் மற்றும் அவனுக்குத் துணையிருப்பவர்களின் திறன் என்ன, தன்னுடைய திறன் என்ன என்பவைகளை அறிந்து தன் திறன் அவ்வேலைக்கு பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

நான் யார்? என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதுதானே ஆன்மிகம்?

நாம் யார் என்பது நம் மனத்தின் அடித்தளத்தில் இருக்கிறது. அதை மறைத்திருக்கும் எண்ணங்களை இறைத்து வடிப்பதுதான் தியானம். யோகப் பயிற்சிகள் புராணங்கள் வாயிலாக வந்ததால் அதை நாத்திகர்கள் ஏற்கவில்லை! உண்மையில் யோகப் பயிற்சிகளுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பே கிடையாது.

யோகா என்பது நம்மை நாம் அறியும் முறை. அவ்வளவே…

விவேகானந்தரின் ராஜ யோகா படித்துப் பாருங்கள். அதில் எங்கேயாவது கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லியிருக்கிறதோ?

Advertisements

25 comments

 1. வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணைவி வலியும் தூக்கிச் செயல்.

  (தன்னம்பிக்கையற்றவர்களுக்காக குறள் சற்றே மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது)

 2. //எனக்கு சட்டென்று நினைவு வந்தது எம்.ஜி.ஆர். அவர்களின் ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்-உலகத்தில் போராடலாம்’ என்கிற பாட்டுத்தான்.//

  `எம்.ஜி.ஆர் பாட்டு’, `சிவாஜி பாட்டு’ எனுமாறு சொல்லிச் சொல்லியே நாம் பழகிவிட்டோம்.

  இது எப்படி எம்.ஜி.ஆர் பாட்டு ஆகும்?

  யாரோ ஒருவர் எழுத, யாரோ ஒருவர் இசையமைக்க, யாரோ ஒருவர் பாட, நடிகர் ஒருவர் பாட்டுக்கேற்ப உதட்டை அசைக்கிறார். எப்படி அந்தப் பாட்டு அந்த நடிகரின் பாட்டு ஆகும்?

  `வேட்டைக்காரன்’ (1964) திரைப்படத்துக்காகக் கவியரசு இயற்றிய பாடல் இது. இதனைக் கண்ணதாசனின் பாடல் என்றுதான் சொல்லவேண்டும். பாடலாசிரியருக்குத்தான் பாடலின் உரிமையை நாம் தரவேண்டும்; பாடல் சிறப்பெனில் அச்சிறப்பையும் பாடலாசிரியருக்கே நாம் வழங்கவேண்டும்.

  பொதுவான நம் பழக்கம் காரணமாக இப்பாட்டை எம்.ஜி.ஆர் பாட்டு என்று நீங்கள் குறிப்பட்டது தவறில்லை. ஆனால் கவியரசின் பெயரையும் சொல்லி இருக்கலாமே, ஐயா!

  1. எம்.ஜி.ஆர். பாடல்கள் என்று சொல்லிப் பழகியதற்குக் காரணம் இருக்கிறது.

   அவர் படப் பாடல்களின் பாடல் வரிகளிலும் இசையிலும் அவர் விசேஷ கவனம் செலுத்துவார் என்பதை பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே முதல் கிரெடிட் அவருக்குத்தான்.

   கவிஞரின் பெயரையும் என்பதில் இருக்கிற உம்ம்ம் எனக்கு உடன்பாடே. சொல்லியிருக்கலாம். கவனப் பிசகில் விடுபட்டுப் போய் விட்டது.

 3. Yenakku m.g.r padangal avvalavaga pikikkadhu…Comedy ,Dance la semaya sodhappina nadigar…”fit”ttana udanbum ,Rich ana action padangalakkum mattume avar padangalil sirappu…
  Nenajamundu Nermaiyundu song yenakku romba pidikkum..Thvandu pogum nerathil andha varigal yenakku urchagam alikkum…[Neram varum kaathirundhu paru raja…]

  -Krish

  1. நன்றி டாக்டர் சார். படிச்சேன்-பரவசம் அடைஞ்சேன்! என்கருத்து பலருக்கும் இருக்குன்னு தெரிய வெச்சதுக்கு நன்றி.

   இன்னொண்ணு, கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கள்ளே நல்லவங்களும் இருக்காங்கன்னு ஒரு கருத்து அந்த உரையாடல்லே வருது. நான் பார்த்த நாத்திகர்களில் பலர் உயர்ந்த பண்புகளை உடையவங்கதான். முக்கியமா பொய் சொல்லாதவங்க. ஆத்திக நாத்திகத்துக்கும், நல்லது கெட்டதுக்கும் சம்மந்தம் இல்லேன்னு நினைக்கிறேன். சரியா?

 4. எம்.ஜி.ஆர். பாடல்கள் என்று குறிப்பிட்டு இருந்தது சரிதான். அதைப்பாடிய திரு டி.எம்.சௌந்தரராஜன் கூட பல முறை வருத்தத்துடன் சொல்வது உண்டு. அந்த கால கட்டத்தில் அரசியலில் நுழைய முன்னோடியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க சில முறைகள் கையாளப்பட்டன.அதனால் வார்த்தைகளில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டது.(மற்றபடி நடிகரின் தனிப்பட்ட அக்கறையும் அவருடைய பாடல்களில் பிரதிபலிக்கும்) இப்பொழுது கூட பாடல் வரிகள், பன்ச் டயலாக்குகள், காட்சிகள் என்று பிரபல நடிகரின் படங்களில் கண்கூடு.(எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்……..?) அந்த மெசேஜ் க்கு என்று காத்திருப்பவர்கள் தான் இன்றும்.

  1. கரெக்ட் என்சீ சார். எம்.ஜி.ஆர். முன்னோடியா இருந்து ஆரம்பிச்சி வெச்ச விஷயத்தை அடுத்த தலைமுறையும் தொடர்ந்து கிட்டு இருக்கு…

 5. அவர் சொல்ல வந்தது “தன்னம்பிக்கை” பற்றி. தன்னை அறிந்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்.எந்த விதமான நம்பிக்கையும் கருத்துக்களும் திணிக்கப்படாமல் இருந்தால் தனக்கு தேவையானவற்றை தானே தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறோம்.அடுத்தவர் சொல்வதை கேட்கும்பொழுது உள்நோக்கி பார்ப்பதில்லை. நாமே சிந்தித்து வாழ்க்கையை பார்க்கும் பொழுது இயல்பாகவே நாம் நம் உள்நிலையை பார்க்கிறோம்.தன்னுடைய நிழலைப்பார்த்து வியப்பவர்களால் நிஜத்தை சந்திக்க முடியாது.இதுவும் யோகாவில் சொல்லப்படுவதுதான் (சரிதானே?)

 6. // யாரோ ஒருவர் எழுத, யாரோ ஒருவர் இசையமைக்க, யாரோ ஒருவர் பாட, நடிகர் ஒருவர் பாட்டுக்கேற்ப உதட்டை அசைக்கிறார். எப்படி அந்தப் பாட்டு அந்த நடிகரின் பாட்டு ஆகும்//
  இதை நான் முன்பு ஒருமுறை சொன்ன போது (இதற்கு முந்தைய இதே போன்ற MGR பாடல் ஒன்றுக்கு) வேறு ஏதோ சொல்லி சமாளித்தீர்கள் என்று நினைவு! யாராவது சொல்கிறீர்களா என்று பார்த்ததாக…

 7. நான் தீவிர நடிகர் திலகம் ரசிகன் என்றாலும் , எம்.ஜி.ஆர் படப்பாடல்களின் மிகப்பெரிய ரசிகன் .

  எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெறும் கொள்கை ,தன்னம்பிக்கை பாடல்களுக்கு தனித்தன்மை உண்டு .. அந்த பாடல்களின் உருவாக்கத்தில் எம்.ஜி.ஆருக்கும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ..எம்.ஜி.ஆரின் பல பாடல்கள் கவிஞர்கள் பல பாடலகள் எழுதி அவற்றில் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்து உறுதி செய்தவையே ,அல்லது இத்தகைய கருத்து வேண்டும் என அவர் சொல்லி கவிஞர்கள் மாற்றி எழுதி அவர் ஒப்புதல் பெற்ற பின்னரே உருவாக்கம் பெற்றவை . அதனால் தான் அவை தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது.

 8. //இதை நான் முன்பு ஒருமுறை சொன்ன போது (இதற்கு முந்தைய இதே போன்ற MGR பாடல் ஒன்றுக்கு) வேறு ஏதோ சொல்லி சமாளித்தீர்கள் என்று நினைவு! யாராவது சொல்கிறீர்களா என்று பார்த்ததாக…//

  ஸ்ரீராம் ஐயா, ஜவகரைத்தானே கேட்கிறீர்கள்?

  எம்.ஜி.ஆர். குறித்து இதற்கு முன்னர் ஏதும் நான் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

 9. //விவேகானந்தரின் ராஜ யோகா படித்துப் பாருங்கள். அதில் எங்கேயாவது கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லியிருக்கிறதோ?/

  எம்.ஜி.ஆர் பாடல் பிரச்சினையில் இந்த நல்ல கருத்தை எல்லோரும் விட்டுவிட்டார்கள்.

  நல்லதொரு பகிர்விற்கு வாழ்த்துக்கள் ஜவஹர் சார்.

  1. ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள். நான் சொல்ல நினைத்தது உங்களை வந்தடைந்திருக்கிறது. பாராட்டுக்கள் மற்றும் நன்றி ராஜா சார்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s