ஜெட் ஏர்வேஸ் வேலைநிறுத்தம்

ஜெட் ஏர் வேய்ஸ் விமானிகள் நேற்று (08-09-09) மாஸ் சி.எல். எடுத்திருக்கிறார்கள்.

தொழிற் சங்கம் அமைக்க முற்பட்ட இரண்டு விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்த நடவடிக்கை. 130 க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அதாவது சுமார் 40,000௦௦ பயணிகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

விமானிகள் தொழிலாளர்களா?

இது கொஞ்சம் நிரடலான விஷயம். ஒரு நிர்வாகம் குறிப்பிட்ட பிரிவினரை மேனேஜ்மென்ட் ஸ்டாப் என்று அறிவித்து விட்டால், அவர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் தகுதி போய் விடுகிறது. ஆனால் அப்படி அறிவிக்கப் பட்டவர்களுக்கு முடிவெடுக்கும் உரிமை தரப்படவில்லையானால், நீதி மன்றம் அவர்களை மேனேஜ்மென்ட் ஊழியர்களாக அங்கீகரிப்பதில்லை. (நான் மேனேஜரே இல்லை என்று வாதிட்ட ஒருவரை, அவருக்கு முடிவெடுக்கும் உரிமை தரப்பட்டிருந்தது என்று குறுக்கு விசாரணையில் திரு.சோ நிரூபித்தாராம்! அவரது அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் புத்தகம் படியுங்கள்)

விமானிகளின் படிப்பு,அவர்களின் சம்பளம்,அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றைப் பார்க்கிற போது அவர்களைத் தொழிலாளிகள் என்று ஏற்பதில் தயக்கம் இருக்கவே செய்கிறது. விமானிகள் தொழிலாளர்களா என்பதை நீதி மன்றம்தான் சொல்ல வேண்டும். மும்பை நீதி மன்றம் அவர்களது வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தார்மீகமாக அவர்கள் தொழிற் சங்கம் அமைப்பதில் என்ன சங்கடங்கள் என்று வேண்டுமானால் பார்க்கலாம்.

விமான கட்டணத்தின் மூலம் நிமிஷத்துக்கு எத்தனை ரூபாய் செலவோ, அதை விட அதிகமாக ஒரு நிமிஷத்தில் சம்பாதிக்கிறவர்களோ, அல்லது அப்படி சம்பாதிக்கவல்ல முடிவுகளை எடுப்பவர்களோதான் பொதுவாக விமானத்தில் பயணிக்கிறார்கள். அவசரத் தேவைகளுக்காக என்றோ ஒரு நாள் போகிறவர்கள் சொற்பம். ஆகவே, விமானிகள் வேலை நிறுத்தம் மறைமுகமாக கோடிக்கணக்கில் நஷ்டம். நேரடியாகவும் சில கோடிகள் நஷ்டம்.

நஷ்டம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

சங்கடத்துக்கு உள்ளான பயணிகளில் எத்தனை மாப்பிள்ளைகளோ, எத்தனை மணப் பெண்களோ, மரணமடைந்த நெருக்கமானவர்களை கடைசியாகப் பார்க்கப் போனவர்கள் எத்தனையோ, உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்றப் போன டாக்டர்கள் எத்தனையோ, உயிர் காக்கும் மருந்துகள் எத்தனையோ, நழுவிய இண்டர்வ்யூக்கள் எத்தனையோ……..

Advertisements

7 comments

  1. விமானிகள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தது தவறாக தோன்ற வில்லை. உரிமைப் பறிக்கப்படும் பொழுதுதான் அதனை பெற இந்தமாதிரியான வழிமுறைகள் பற்றி யோசிக்க தோன்றும். தவறு ஊழியர்கள் மீதல்ல. நிறுவனத்தின் மீது தான்.

  2. எல்லாதுறைகளிலும் நிர்வாகங்களும், ஊழியர்களும் அவரவர்கள் சங்கங்கள் அமைத்திருப்பது அவர்களின் சில,பல,கோரிக்கைகள் நிறைவேற்றிக்கொள்ள, மற்றும் உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள. இதில் விமான தொழிலாளர்கள் (ஊழியர்கள்) மட்டும் விதி விலக்கா? சட்டத்துக்கு புறம்பானதாக தெரியவில்லை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s