சபாஷ் பிரணாப் முகர்ஜீ!

ஒரு வருஷ தங்கும் வாடகை ரூ.7 கோடி!

மத்திய அமைச்சர்கள் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் திரு.சசி தரூர் இருவரும் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வாடகைக்கு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததை கண்டித்து அவர்களைக் காலி செய்யச் சொல்லி இருக்கிறார் நிதியமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜீ. இந்த ஏழு கோடியில் புதுசாக மந்திரிகளுக்கு கஸ்ட் ஹவுசே கட்டியிருக்கலாம்!

மாசா மாசம் டாராகக் கிழிந்து வாங்குகிற சம்பளத்தில் வருமான வரி என்று நம்மிடம் 30% ஐ சப்பிக் கொண்டு விடுகிறார்கள். அரசுக்கு வருமானம் போதவில்லை என்று அத்தியாவசியப் பொருட்கள் விலையையும், வரிகளையும் ஏற்றுகிறார்கள். பிச்சைக் காசு வருஷம் ஐந்தாயிரத்துக்கு மேல் வட்டி வருமானம் இருந்தால் அதற்கு வரியாம்!

எஞ்சின் திருடர்களை விட்டு விட்டு கரி பொறுக்குகிறவர்களை தண்டிக்கிற மாதிரி செயல்பாடுகள் இருக்கிறது.

வரி ஏற்றமும் கண்துடைப்பு திட்டங்களும் கொண்டு வரவே நிதியமைச்சர் என்பதை மாற்றி ஓட்டை அடைப்பது பிரதானம் என்பதை உணர்ந்த ஒரு நிதியமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பாராட்ட வேண்டியது நம் கடமை.

சபாஷ் பிரணாப் முகர்ஜீ அவர்களே!

7 comments

  1. ///வரி ஏற்றமும் கண்துடைப்பு திட்டங்களும் கொண்டு வரவே நிதியமைச்சர் என்பதை மாற்றி ஓட்டை அடைப்பது பிரதானம் என்பதை உணர்ந்த ஒரு நிதியமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.///

    தவறு நண்பரே… இந்த செய்தி ஊடகங்களில் பெரிய அளவில் வெடித்த உடன் அவர் எடுத்த சமாளிபிக்கேஷன் நடவடிக்கை தான் இது.

    இத்தனை நாள் அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்று அரசுக்கு தெரியாதா?

    இப்படி மீடியா வெளிச்சம் போட்டு காட்டினால் தான் இவர்கள் நடவடிக்கைகள் எடுப்பார்களா?

    அறிமுக எம்.பி./அமைச்சர் சசி தாருர் ஒரு அக்கவுண்டபிளிட்டி வேண்டாம்?

    இதில் எந்த வகையிலும் முகர்ஜி பாரட்டுகுறியவர் இல்லை.

    1. சாய் கணேஷ்… இருக்கலாம். ஒரு நல்ல விஷயத்தைத் தாமதமாகச் செய்தார் என்பதால் குறை சொல்வதற்குப் பதில், பாராட்டி வைப்போம். இது மாதிரி செயல்களுக்கு பாராட்டுக் கிடைக்கிறது என்பதே ஒரு டானிக்காக இருக்கட்டுமே!

    1. ஆஹா…சாய் கணேஷ், கொஞ்சமும் எதிர்பாராமே என்னை ட்ராப் பிலே மாட்டிட்டீங்க. ஆனா அதுலே ஒரு உண்மையும் இருக்கு. ப்ரோடக்டிவிட்டியோடு சம்பந்தப்பட்ட மக்கள் தொகை குறைந்த விகிதாச்சாரத்திலே இருக்கு. மறுபடி எய்ட்டி ட்வெண்ட்டி ரூல்தான்….

Jawahar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி