தன் நடிப்பு பற்றி எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். ஒரு ஜாலியான நடிகர்.

தான் என்ன செய்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் எது பிடிக்காது என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்தார். ரசிகர்களின் நாடியை பிடித்துப் பார்த்து அவர்களை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்த முதல் நடிகர்.

உணச்சிப்ப் பிழம்பாக மாறுகிற ரிஸ்க்கை பொதுவாக அவர் எடுப்பதில்லை.

குழப்பமில்லாத திரைக்கதை, அழகான கதாநாயகி, நல்ல பாடல்கள், சண்டை….என்ஜாய்… என்பதே அவர் சூத்திரம்.

ஏ.வி.எம்மின் அன்பே வா படத்தில் நான் ரொம்ப ரசித்த காட்சி ஒன்று உண்டு.

சரோஜாதேவியை கரெக்ட் செய்வதற்காக தான் ரொம்ப ஏழை, சோத்துக்கே சிங்கி அடிக்கிறவன், தற்கொலைக்கு முயற்சி செய்தால் கூட சரியாக வரவில்லை என்று கண்ணீரும் கம்பலையுமாக புலம்புவார். சரோஜாதேவி அவர் மேல் பரிதாபப் பட்டு, ஆறுதல் சொல்லி “தப்பா நினைக்காதீங்க” என்று சொல்லி நூறு ரூபாய் தருவார்.

“ஐயோ, இதான் நூறு ரூபாயா…?” என்று ஆசையாக வாங்கிக் கொள்வார்.

அடுத்த நாள் வேலைக்காரராக நடிக்கும் நாகேஷ் “அந்தாளு சக்கையா உங்கள ஏமாத்தி இருக்கான். பர்ஸ் கிழியற அளவு பணம் வெச்சிருக்கிறவனுக்கு நூறு ரூபாயா?” என்று நக்கலடிப்பார்.

கோபத்தோடு வந்த சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர். இளித்தபடி சொல்கிற வசனம் :

“வாழ்க்கையிலே முதல் முறையா நடிச்சேன். அதுக்கு பரிசும் வாங்கிட்டேன்”

Advertisements

17 comments

 1. //ஆனால்,”திரைக்கு பின்னால் நடிக்க தெரியாதவர்.//

  தலை கீழா இருக்கே.

  திரையில் அவ்வளவு நடிக்க தெரியாவிட்டாலும் ,திரைக்கு பின்னால் அவர் தான் நடிகர் திலகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 2. ஏ வி எம் அன்பேவா போல, ஜெமினியின் ஒளிவிளக்கு, வாஹினியின் எங்க வீட்டுப்பிள்ளை.
  தயாரிப்பாளர்களுக்கு புத்துணர்ச்சி தந்த படங்கள்.
  சகாதேவன்

 3. ஒரு வலைபூ இருக்கு அப்படிங்கறத்துக்காக… உங்க இஷ்டத்துக்கு எழுதலாமா? //எம்.ஜி.ஆர். ஒரு ஜாலியான நடிகர்.// அவர் என்ன உங்க பக்கத்து வீட்டுகாரரா? வார்த்தல்கள்ல மதிப்பு கொடுக்க கத்துக்குங்க…
  //குழப்பமில்லாத திரைக்கதை, அழகான கதாநாயகி, நல்ல பாடல்கள், சண்டை….என்ஜாய்… என்பதே அவர் சூத்திரம்// என்னய்யா? மசால படமா எம்.ஜி.ஆர் எடுத்துக்கிட்டு இருந்தாரு…? அவரோட எத்தனையோ படங்கள்… புரட்சி பண்ணியிருக்கு… அதெல்லாம் உங்களுக்கு தெரியலயா? ஏதோ எழுதறண்ட்டு ஒரு நாட்டோட தலைவர பத்தி, சும்மா எழுதறது…? இது என்ன நியாயம்… சும்மா வலைபதிவுல… எழுதறத விட உங்களை மாதிரி ஆட்கள் சும்மா இருக்கலாம். தரகுறைவான இந்த பதிவ எடுத்துவிடுங்கள். நான் மதிக்கும் மிகபெரும் தலைவரை அவமாணபடுத்தாதீர்கள்….

  1. உணர்ச்சி வசப்படாதீங்க மு.இரா. சார். எனக்கு அவர் மேலே நிறைய மரியாதை உண்டு. எழுதியிருக்கிறது எல்லாம் அவரோட திறமையை வியந்துதான். பிரியம் அதிகமா இருக்கிற இடத்திலே மரியாதை இல்லாத மாதிரி தோணும். நிஜம் அதில்லே.

 4. //அவர் என்ன உங்க பக்கத்து வீட்டுகாரரா? வார்த்தல்கள்ல மதிப்பு கொடுக்க கத்துக்குங்க…//
  so, do you mean you have rights to disrespect your neighbour???
  //நான் மதிக்கும் மிகபெரும் தலைவரை…//
  then,.. you should consider having MGR’s picture in your profile than che.

  1. மு.இரா. சார், உங்க பதில்லேர்ந்து என்னை புரிஞ்சிகிட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்போ சொல்றேன், ஒரு மனிதரை இனிஷியல்ஸ் லே ரெபர் பண்றப்போ திரு, மிஸ்டர் எல்லாம் போட தேவையில்லை. இந்திய ஜனாதிபதியை ஹிண்டுவிலே ஆர்.வி. ன்னு ரெபர் பண்ணுவாங்க. அது மட்டுமில்லை, என் காலத்து குழந்தைகள் கூட எம்.ஜார், எம்.ஜார் ன்னு ரெபர் பண்ணுவாங்க. அதிலே அளவு கடந்த பிரியம் இருக்கும். அதுக்காக அது மரியாதைக் குறைவு இல்லை. உங்க பேரன் உங்களை மு.ரா., மு.ரா. ன்னு கூப்பிடுவான், அப்பா தேன் வந்து பாயும் உங்க காதிலே!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s