பாப்பா போட்ட தாப்பா!

ithayam-130909

கேமல் என்கிற புனைப் பெயரில் நமக்கு இந்த தலைப்பை இன்ஸ்பயர் செய்த வாசகர், ‘ஏற்கனவே பேக்கோலம், அதுலயும் கொஞ்சம் அலங்கோலம்’ என்று ஆகி விட்டதற்கு நிச்சயம் வருந்துவார்.

உட்புறம் தாளிடப்பட்ட அந்த அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

கதவை இடி இடியென்று இடித்து ‘யாரு உள்ளே?’ என்று கேட்டு எல்லாரும் அலுத்துப் போனார்கள். தலைகளை எண்ணிப்பார்த்த சுகுமார்,

“ரமாவைத்தான் காணும். அவளாத்தான் இருக்கும். நாளைக்கு அவளுக்குக் கல்யாணம். இப்பப் போய் உள்ளே கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு திறக்கவும் திறக்காம, பதிலும் சொல்லாம இருந்தா டென்ஷனா இருக்கே…” என்றான்.

ராணுவத்தில் பணி புரிந்து தன்னிச்சை ஒய்வு வாங்கிக் கொண்ட சுந்தரம் சாதனைக்கு முன் வந்தார்.

பாயப் போகிற புலி மாதிரி பதினைந்து அடி பின்னால் போனார். ஓஓஒடி வந்து தோள் பட்டையால் கதவை இடித்தார். மடேரென்று கதவு திறந்து கொண்டு உள்ளே போய் இசகு பிசகாக விழுந்து வாரினார். விளக்கில்லாத அந்த அறையில் அவர் எங்கே விழுந்தார் என்று தெரியாமல், அவரைத் தொடர்ந்து போனவர்கள் எகிடு தகிடாக அவரை மிதித்து அவர் லபோ திபோவேன்று அலறினார்.

“எங்கே ரமா?” என்று மாறி மாறி எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்க,

பின்னாலிருந்து “நான் இங்கே இருக்கேன்” என்று அமைதியாகக் குரல் கேட்டது.

ரமா!

“கைலே மருதாணி வெச்சிருந்ததாலே கதவை திறக்க முடியல்லே. அந்த ரூமுக்கு இன்னொரு கதவு இருக்கு. அது ஸ்டோர் ரூம் பக்கமா இருக்கு. அது திறந்தேதானே இருந்தது?”

(எங்கள் குடும்பத்துக் கல்யாணம் ஒன்றின் போது நடந்த உண்மைச் சம்பவம் இது. சம்பந்த்தப் பட்டவர்கள் டென்ஷன் ஆகக் கூடாது என்று சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்)

Advertisements

17 comments

  1. அந்த photo வில் இருக்கிறது யாருங்க… David boon மீசை ‘மாதிரியே’ வச்சு இருக்கின்றவர்…(David boon மீசை வச்சு இருகின்றவர்னு சொன்ன நீங்க என்ன சொல்லிருப்பீங்கன்னு தெரியும்…நல்ல வேலை கொஞ்சம் alert ஆயிட்டேன்)…

  2. நான் என்னோட மீசை தான் வச்சுருக்கேன்…அவரோடது இல்ல இது என்று உங்கள் பதில் இருந்திருக்கும் என்று எதிர் பார்த்து தான் alert ஆனதாக சொன்னேன்…(பணிவுடன் ஒரு வேண்டுகோள் …சார் என்று அழைக்கவேண்டாம்…நான் சின்ன பையன் தான்)

  3. கமல்ஜி “trespassers prostituted” ஜோக் ஐ தப்பா புரிஞ்சிகிட்டார் போல.
    அவருடைய பின்னூட்டங்கள் மற்றவர்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s