அந்த இளம் விதவையிடம்…

“என்னடா, திருட்டு முழி முழிக்கறே? யார் கிட்டேர்ந்து லெட்டர்?”

“வக்கீல்”

“வக்கீலா.. . யாரோட வக்கீல்?”

“சரோஜாவோட வக்கீல்”

“எந்த சரோஜா?”

“சிக்கல். நாகப்பட்டினம் பக்கத்திலே சிக்கல்…”

“சி…சிக்கல்லேர்ந்து வக்கீல் நோட்டீசா…பேரென்ன சொன்னே?”

“சாம்பசிவம்”

“கிளையன்ட் பேரு..”

“சரோஜா”

“என்னவாம்?”

“செத்துட்டாளாம்”

“என்ன!”

“ஏன் பதர்றே? உனக்குத் தெரியுமா?”

“இ…இல்லே… எனக்கெப்படித் தெரியும்..”

“போன மாசம் என் கிட்டே காரை இரவல் வாங்கிட்டுப் போனியே, எங்கே போனே?”

“வைதீஸ்வரன் கோயில்”

“வேறே?”

“வேறே எங்கயும் போகல்லையே?”

“சிக்கல் போகல்லே?”

“இல்லையே?”

“சிக்கல் கோயில்லே காரை பார்க் பண்ணின ரசீது இருக்கே?”

“செத்தே போய்ட்டாளா? நான் ஒண்ணுமே பண்ணல்லையே?”

“சோ நீ சிக்கல் போயிருக்கே”

“அ… ஆமாம்…”

“அந்த சரோஜா வீட்டிலே தங்கியிருக்கே”

“ஆமாம்”

“தனியா இருந்த அந்த இளம் விதவை கிட்டே தப்பா நடந்திருக்கே”

“இல்லே… நடந்த எல்லாமே அவ சம்மதத்தோடதான் நடந்தது”

“ஏன் பின்னே பொய் சொன்னே அவ கிட்டே?”

“பொய்யா… எந்தப் பொய்யும் சொல்லல்லியே?”

“உன் பேரை மாத்தி சொல்லி என்னோட விசிட்டிங் கார்டைத்தானே குடுத்தே?”

“………………………………………”

“நல்லா திறமையாத்தான் பண்ணியிருக்கே. என்காரை எடுத்திக்கிட்டுப் போய், பார்கிங்க்லே ரசீது வாங்கி ஆதாரம் உண்டாக்கி, கார்லே இருந்த என் விசிட்டிங் கார்டை கொடுத்து….”

“சாரிடா, இதெல்லாம் நான் திட்டம் போட்டு செய்யல்லே. சும்மா தப்பிக்கறதுக்காக பண்ணிட்டேன். இப்ப என்ன ஆகும்? நீ மாட்டிக்குவியா?”

“உனக்கு அலிபி இருக்கா?”

“இல்லையே?”

“கவலைப்படாதே. கிரியேட் பண்ணிடலாம். ஒரே ஒரு வேலை மட்டும் பண்ணு. எனக்கு எதுவும் தெரியாது, இது எல்லாத்துக்கும் முழுப் பொறுப்பு என் நண்பந்தான்னு என் பேரை எழுதி கொடுத்துடு. இந்தா பான்ட் பேப்பர். ரெண்டு விட்னஸ் கிட்டே நான் கையெழுத்து வாங்கிக்கறேன். ரிஜிச்டரும் பண்ணிடறேன்”

“பயமா இருக்கு. இந்தாடா… நீ சொன்ன மாதிரியே எழுதிட்டேன். நீ எப்படி தப்பிக்கப் போறே?”

“நான் ஏன் தப்பிக்கறேன். நாந்தான்னு நீ எழுதியிருக்கே, நானும் அதை ஒத்துக்குவேன்”

“ஐயய்யோ, அப்புறம்?”

“செத்துப்போன இளம் விதவைக்கு ரத்த புற்று நோயாம். சொந்தக்காரங்களே கிடையாதாம். நூத்தி இருபது ஏக்கர் நிலமும், நாலு வீடும் இருக்குதாம். நடந்தது தப்போ சரியோ அந்த ராத்திரி நான், அதாவது என் பேர்லே போன நீ சொந்தமாயிட்டேனாம். மொத்த சொத்தையும் என் பேர்லே எழுதி வெச்சிருக்கா. அதைத்தான் வக்கீல் எழுதி இருக்காரு”

23 comments

  1. ///இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.///

    பின்னூட்டமெல்லாம் போடமுடியாது ஒய்!

    1. ம்ம் ஹூம் அப்டி சொல்லக் கூடாது, ஒரே ஒரு பின்னூட்டம் போடுங்க ப்ளீஸ்!(அது ப்ளாக் அட்மின்காரங்களோட கை வரிசை. என் வாசகம் அல்ல!)

    1. டாக்டர் சார், இது மாதிரி அதிர்ஷ்டங்களை எங்க ஊர்லே, கொழக்கட்டை தின்ன நாய்க்கு குறுணி மோர் தட்சிணை ன்னு சொல்வாங்க. இந்தக் கேசிலே கொழக்கட்டை தின்ன நாய் கொஞ்சம் துரதிஷ்ட நாய்!

  2. //ம்ம் ஹூம் அப்டி சொல்லக் கூடாது, ஒரே ஒரு பின்னூட்டம் போடுங்க ப்ளீஸ்!///

    அதெல்லாம் முடியாது ஒய்! எவ்வளவு சுவாரசியமாய் எழுதினாலும் பின்னூட்டம் மட்டும் கிடையாது!!

    1. கமலா மேடம், இந்தக் கதைலே எந்த இடம் உங்களை ஆணாதிக்கம்ன்னு நினைக்க வெச்சதுன்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா திருத்திக்க சௌகர்யமா இருக்கும்.

  3. ஆணாதிக்கமா?உங்க பிளாக்கை எங்கெங்கு தொட்டாலும் (எனது ஆறாவது அறிவில்)உங்கள் ஆணாதிக்கம் தெரிகிறது.கம்ப்யுட்டர் பக்கத்திலேயெ உட்கார்ந்திருப்பீங்களோ?எப்ப பின்னூட்டம் போட்டாலும் இரனண்டு நிமிடத்துல acknowledge பண்ணுறீங்க?
    அன்புடன்
    கமலா

    1. கமலா மேடம், போதாது, செவிட்டிலே அறைஞ்ச மாதிரி இன்ன இடம், இந்த விஷயம்ன்னு சொல்லுங்க. என் ஆறாவது அறிவு உங்க அளவுக்கு ஷ்ரூட் இல்லை.

  4. 1. பாப்பா போட்ட தாப்பா……..
    2. அடியே இன்றேனும் வருவாயா?
    3.இளம் விதவையிடம்……
    4.பெண் குளிப்பது…..
    இதெல்லாம் பார்த்துதான் மனதில் உங்கள் ஆணாதிக்கம் பட்டது.
    எனக்கு அறையவெல்லாம் வராது சார்.
    அன்புடன்
    கமலா

    1. கமலா மேடம், நீங்க என்ன, டைட்டில்லே பெண் சம்பந்தம் இருந்தாலே ஆணாதிக்கம்ன்னு நினைச்சிட்டீங்களா? உங்களை மாதிரி பெரியவங்கதான் என்னை கைட் பண்ணனும்ன்னு நினைச்சேன். இப்ப ஆணாதிக்கம்ன்னா என்னன்னு என்னை கிளாஸ் எடுக்க வைக்கிறீங்க. பரவாயில்லை, இது குழந்தை பாடும் தாலாட்டு மாதிரி இருந்துட்டுப் போகட்டும்.

  5. எனக்குப் பாடம் எடுக்கிற‌த விட கொஞ்சம் (கவர்ச்சிகரமான )தலைப்பு கொடுக்க ரூட்ட மாத்தினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். ஆணாதிக்கம்னா (மனதளவிலும்)பெண்களைத் துன்புறுத்தும் சொற்களைச் சொல்வதும்தான்னு நினைக்கிறேன். உங்கள் தலைப்புகள் என்னை disturb செய்கின்றன‌. அதை நான் வெளிப்படுத்துகிறேன்.So simple !I hope u will understand!
    நன்றி
    கமலா

  6. உள்ளே இருக்கும் தகவலுக்கு இப்படி ஒரு கவர்ச்சியான தலைப்பை விட ஜவஹர் கொஞ்சம் யொசித்தால் நல்லா இதை விட காட்சிங்க்காக தலைப்பு எழுத முடியும். இது என் கருத்து.
    I am not restless. I want to enjoy jawahars write ups with fuullest scence!
    கமலா

kalyanakamala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி