ஆணாதிக்கத்திலே அரை கிலோ போடுங்க..

chauvinism

Male chauvinist pig என்பது ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களைக் குறிக்க பெண்கள் அன்பாகப் பயன்படுத்துகிற குறியீடு.(அன்புதாங்க. என் கழுதைக் குட்டி, என் பன்னி குட்டி, திருட்டுப் பயலே, காலிப் பயலே ன்னு எல்லாம் குழந்தைகளை கொஞ்சறதில்லே?)

மற்ற ஆங்கிலப் பதங்கள் மாதிரி இது ரொம்பப் பழமையானது அல்ல.

chauvinist என்கிற சொல் ஆங்கில அகராதியில் ஏறக் காரணமானவர் நிக்கோலஸ் சாவின். (Nicolas chauvin). இவர் நெப்போலியன் போனப்பார்ட்டின் படை வீரர். நெப்போலியன் மீதும், பிரான்சு நாட்டின் மீதும் கண்மூடித்தனமான அபிமானம் வைத்திருந்தவர். 1800 களில் இது போன்ற கண்மூடித்தனமான உயர்வு மனப்பான்மை கொண்டவர்களை chauvinist என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

முதலில் கண்மூடித்தனமான தேசப் பற்றுக்குத்தான் சொன்னார்கள். அமெரிக்கன் சாவனிஸ்ட், பிரான்ஸ் சாவனிஸ்ட் என்கிற மாதிரி.

1960 கள்லே இதிலே ஒரு male ஐ சேர்த்து ஆண்கள் உயர்வானவர்கள் என்று நினைக்கிறவர்களை ரெபர் செய்ய ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு அதில் கொஞ்சம் தீவிரம் ஏற்பட்டு பின்னால் செல்லமாக ஒரு மிருகத்தை சேர்த்தார்கள்.

மூன்று விதமான ஈகோ ஸ்டேடஸ்கள் இருக்கின்றன. ஏற்கனவே வேறொரு பதிவில் உணர்வு அறிவு என்று இரண்டு வகை சொல்லியிருந்தோம். உணர்வை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று Parent Ego. இன்னொன்று Child Ego.(இதிலும் கிளைப் பிரிவுகள் உண்டு. அதை வாய்ப்பு வருகிற போது பார்க்கலாம்)

இதில் உயர்வு மனப்பான்மை-அல்லது Superiority Complex, Parent Ego விலிருந்து வருவது. Superiority Complex ஒன்றும் தப்பான விஷயமல்ல. அளவோடு இருந்தால் அதற்குப் பெயர் தன்னம்பிக்கை. அதிகமாகப் போனால் கர்வம்.

ஆரோக்யமான உயர்வு மனப்பான்மை பொறுப்பேற்கிற பண்பை உடையது.

அது என்ன செய்கிறது? அம்மா, உனக்கெதுக்கு இத்தனை சுமைகள்… நீ வீட்டைப் பாத்துக்கோ, நான் வெளியே பாத்துக்கறேன் என்று பொறுப்புக்களை ஏற்கிறது.

அவ்வளவே.

இதை வேறு விதமாயும் பார்க்கலாம்.

பெண்களை அமுக்கி வைத்து விட்டு, ஆண்கள் உயரப் பார்க்கிறார்கள் என்றும் பார்க்கலாம். ஒரு உதாரணம். ரொம்பப் பொதுவான உதாரணம்.

அரை டம்ளர் தண்ணீரை இரண்டு விதமாகக் குறிப்பிடலாம். அரை டம்ளர் காலி என்றும் சொல்வார்கள். அரை டம்ளர் நிரம்பியிருக்கு என்றும் சொல்வார்கள். காலி பண்ண நினைக்கிறவர்கள் காலி என்பார்கள். நிறைக்க நினைப்பவர்கள் நிரம்பி என்பார்கள்.

இதைத்தான் attitude வித்யாசம் என்பது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால், ஆதி காலத்தில் சம்பாத்யம் என்பது உடலுழைப்பை நம்பி இருந்தது. பெண்கள் weaker sex என்பதால், வெளி வேலைகளை ஆண்கள் எடுத்துக் கொண்டார்கள்.

எந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட ஆரம்பித்ததும், சம்பாத்யம் உடலுழைப்பை மட்டும் சார்ந்திருக்காமல் அறிவையும் சார ஆரம்பித்தது. அப்போது பெண்களும் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள்.

அதற்கப்புறம் நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்தது.

ஆணாதிக்கம் என்பதை, பலரும் பல்வேறு விதமாகவும் வரையறுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள். அவற்றில் முக்கியமானவை அறியாமையும், தோல்வியும்.

அது சரி, பொறுப்பேற்கிற குணம் பெண்களுக்கு இல்லையா என்று கேட்பீர்கள்.

இருக்கிறது, அப்படிப்பட்ட பெண்களின் கணவர்கள் ப்ளாக்கில் இது மாதிரி கட்டுரை எழுத ஏகப்பட்ட நேரத்தை விவரம் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.

Advertisements

44 comments

 1. //Male chauvinist pig என்பது ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களைக் குறிக்க பெண்கள் அன்பாகப் பயன்படுத்துகிற குறியீடு.// – பெண்ணாதிக்க மனோபாவம் கொண்ட பெண்களை குறிக்க ஏதாவது குறியீடு இருக்கிறதா?

  1. ம்ம்ம் ராபின் சார், அப்படி ஒண்ணு இருந்தா நல்லாத்தான் இருக்கும். நாமளே வேணா female chauvinist peacock ன்னு புதுசா ஒரு குறியீடு கொண்டு வரலாம். (peacock ஐ தேர்ந்தெடுத்ததுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு அவங்க பண்ண மாதிரி விவகாரமான மிருகத்தை நாமளும் தேர்ந்தெடுத்தா அவங்க சண்டைக்கு வர்றது மட்டுமில்லே, நமக்கும் அது பெருந்தன்மை இல்லே. ரெண்டாவது, தன்னம்பிக்கையா இருக்கிற பெண்களை proud like a peacock ன்னு சொல்வாங்க. நாமளாவது chauvinisam ஐ தன்னம்பிக்கையோட சம்பந்தப் படுத்துவோமே!)

 2. ஆணாதிக்கம் என்பது “அம்மா நீ வீட்டிலிரு நான் சாப்பாடு கொண்டு வாறன்” என்பது போன்ற எளிமையான விசயமல்ல.

  ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு கல்வியையும் சமூகத்துடனான தொடர்பையும் மறுத்தது.

  கணவன் செத்த சிதையில் மனைவியை வலுக்கட்டாயமாகத் தள்ளிக்கொன்றது.

  சீனத்தில் பெண்கள் நடக்க முடியாதபடி கால்களைக்குறுக்கி எலும்பை நொறுக்கி அட்டகாசம் செய்தது.

  மனித இனத்தின் பாதிப் பிரிவை வீட்டு அடிமைகள் நிலையில் வைத்திருந்து அவர்கள் உழைப்பை திருடியது.

  பெண்களுக்கு சுயமாக சிந்திப்பதற்கு, சுயமாக முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக மறுத்தது.

  ஆதியில் மனிதச்சமுதாயங்கள் பெண்தலைமைச் சமுதாயங்களே. இன்றைக்கும் பழங்குடித் தாய்வழிச்சமூக எச்சங்களை பார்க்கலாம். வேட்டைக்கு தலைமை தாங்கிப்போனதும் பெண்தான் என்று மானிடவியலாளர்கள் சொல்கிறார்கள். இதில் weaker sex என்பதெல்லாம் சுத்தப்பொய்.

  ஏங்கல்ஸ் போன்றோரின் ஆய்வின்வழி, தனிச்சொத்துடைமை தோன்றிய பின் கருப்பை மீதான அதிகாரமும், கருப்பைகளை தனிச்சொத்தாக வைத்திருக்கும் வேட்கையும் தந்தைவழிக்கு மாறிய சமுதாயங்களில் ஏற்படத்தொடங்கியது.

  ஆணாதிக்கத்தின் அடி நாதம் கருப்பை மீதான ஆதிக்கமே. அது தனிச்சொத்துடைமையின் வழி வந்தது.

  இன்றைக்கு அடக்குமுறை வேறு வடிவங்களை எடுத்திருக்கிறதே தவிர கருப்பை மீதான ஆதிக்கம் தளர்ந்தபாடில்லை.

  நீங்கள் சொன்ன ஒரு கருத்து முக்கியமானது. உற்பத்தி முறைகளில், பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாற்றம் பெண் விடுதலையை படிப்படியாக கொண்டுவருகிறது.

  தனிச்சொத்து என்கிற விசயத்தில் தளர்வு ஏற்படும்போது குடும்பம், கற்பு போன்ற அதிகாரங்கள் மெல்லதளர்ந்து எல்லா மனிதர்களும் சுய மரியாதையுடன் சமமாக வாழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

 3. //மனித இனத்தின் பாதிப் பிரிவை வீட்டு அடிமைகள் நிலையில் வைத்திருந்து அவர்கள் உழைப்பை திருடியது. // பெண்கள் வீட்டில் வேலை செய்தார்கள்; ஆண்கள் வெளியில் செய்தார்கள். இதில் யார் உழைப்பை யார் திருடியது?

  //இதில் weaker sex என்பதெல்லாம் சுத்தப்பொய். // முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்கள். பெரும்பாலான பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்கள் எனபது அப்பட்டமான உண்மை. விதி விலக்குகளை வைத்து பேசவேண்டாம்.

  //தனிச்சொத்து என்கிற விசயத்தில் தளர்வு ஏற்படும்போது குடும்பம், கற்பு போன்ற அதிகாரங்கள் மெல்லதளர்ந்து எல்லா மனிதர்களும் சுய மரியாதையுடன் சமமாக வாழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.// கற்புக்கும் அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?

 4. //பெண்கள் வீட்டில் வேலை செய்தார்கள்; ஆண்கள் வெளியில் செய்தார்கள். இதில் யார் உழைப்பை யார் திருடியது?//

  வெளியில் சென்று உழைக்க ஆண்களே அனுமதிக்கப்பட்டார்கள். வெளியில் உழைத்த ஆண்களுக்கு ஊதியம் கிடைத்தது. ஊதியம் பணம். பணம் அதிகாரத்தை வழங்குகிறது. பெண்கள் ஆண்களைத் தங்கிவாழ வேண்டிய நிர்ப்பந்ததைக் கொடுக்கிறது. வீட்டுழைப்பை முழு நாளும் செய்யும் பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. கையில் பணமில்லை. அதிகாரமும் இல்லை. விடுதலையும் இல்லை.

  //பெரும்பாலான பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்கள் எனபது அப்பட்டமான உண்மை//

  இல்லை. ஓர் ஈழத்தமிழனாக என்னால் ஆயிரம் சபைகளில் இதை அடித்துக்கூற முடியும். விடுதலைப்புலிகளின் பெண்கள் படைப்பிரிவு மிகவும் வீரியம் மிக்கதாக இயங்கியது. புலிகளின் ஆக வீரம் செறிந்த தாக்குதல்களிலெல்லாம் அதிகம் பங்கெடுத்தது பெண்களே. என்னை விடவும் பத்து வயது குறைந்த பெண்கள் என்னால் கனவிலும் தூக்க முடியாத பாரம் கொண்ட ஆயுதங்களை இலாவகமாக கையாள்வைக் கண்டு வியந்திருக்கிறேன்.

  பிள்ளை பெறுவதே அவர்கள் உடல்பலத்துக்கு மிகப்பெரிய சான்று.

  ஓர் ஆபிரிக்கப்பழங்குடிப்பெண் நகர்வாழ் ஆணைவிட எத்தனையோ மடங்கு பலசாலியாக இருப்பாள்.

  பலம் எல்லாம் பயிற்சியின் அடிப்படையில் வருவது. மற்றது இந்தக்காலத்தில் உடல் பலம் என்பதற்கு அர்த்தமும் கிடையாது.

  ஆதிக் குலக்குழுக்களில் பெண்தலைமை, வேட்டைக்குத் தலைமைதாங்கியது பெண் போன்ற தகவல்கள் மானிடவியல் ஆய்வாளர்கள் கண்டடைந்த உண்மைகள்.

  //கற்புக்கும் அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?/

  கற்பு என்ற எண்ணக்கருவே அதிகாரத்தின் திணிப்புத்தானே?

  கருப்பை மீது செலுத்தப்பட்ட அதிகாரமே கற்பு என்ற எண்ணக்கருவாக வந்தது. கற்பு பெண்ணுக்கு மட்டுமே என்ற நடைமுறை உண்மை இதைத்தானே சொல்கிறது? பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை ஒரேயடியாக நிராகரிப்பதற்கு ஆண் அதிகாரம் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் கற்பு எனும் எண்ணக்கருவின் திணிப்புத்தானே?

  1. மயூரன், உங்கள் கருத்துக்களை அனுபவங்கள் influence செய்திருப்பதை இந்த பின்னூட்டம் காட்டுகிறது. வெளியில் சென்று உழைக்க ஆண்களே அனுமதிக்கப் பட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஆண்கள் அதை உடற்பூர்வமாயும், மனப்பூர்வமாயும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே உண்மை.

 5. Female chauvinism is a less commonly used term used to describe the symmetrical attitude that women are superior to men.

  The term “female chauvinism” was adopted by critics of some types or aspects of feminism; leading second-wave feminist These critics argue, that in some gender feminist views, all men are considered irreconcilable rapists, wife-beating brutes, and useless as partners to women or as fathers to children.

 6. அபர்ணாவின் கருத்தை ஒட்டி,

  பெண்ணியப்பார்வை பல தளங்களில் பலவாறாக வைக்கப்படுகிறது. சில அடிப்படையற்ற வெறும் கூச்சலாகவும் அமைந்துவிடுகிறது. விவேகானந்தர் போன்றவர்களின் பெண்ணியப்பார்வை இந்துசமயத்துக்கு ஆள்பிடிக்கப்போதுமான அளவு பெண்ணை விடுதலையாக்க நின்றது.

  என்னைப்பொறுத்தவரை நான் பெரியாரிய, மார்க்சியப்பெண்ணியப்பார்வைகளின் பால் உடன்பாடு கொண்டவன்.

  எல்லா மனிதர்களும் சுரண்டல்கள் அற்ற உலகில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்கிற அடிப்படையில் சாதி அடக்கு முறை தொடக்கம் ஆணாதிக்க அடக்கு முறை வரை எதிர்த்துநிற்பவன்.

  மனுசி புருசனை அடித்தாள்தானே என்கிற வாதமெல்லாம் தனி நபர்கள் பற்றியது. பறையனும் பார்ப்பானை அடிக்கலாம். ஆனால் பார்ப்பனீய அடக்குமுறை இல்லை பறையர் அடக்குமுறைதான் உண்டென்று வாதிட முடியுமா?

  இந்த உலகமும் அதன் கருத்துக்களும் , மதங்களும், அரசியலும் பெண்ணை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் தன்மைகொண்டதாகவே பொதுவாக அமைகிறது.

  ஆணாதிக்கம் என்ற சொல்லை விட (அதில் எனக்கும் பெரிய உடன்பாடில்லை) தந்தை வழி ஆதிக்கம் என்பது இதனை நன்கு விளக்கும்.

  தனிச்சொத்துடைமை மீது கட்டப்பட்ட தந்தை வழி ஆதிக்க மனப்பாங்கும், கட்டுமானமும் மனிதர் எல்லோரையும் சுய மரியாதையுடன் வாழ்வதிலிருந்து தடுக்கிறது.

  பெண் தன்னுடைய வாழ்வினை, தலைவிதியை, விருப்பங்களை, தெரிவுகளை தானே தீர்மானிப்பதற்கு தடைகளற்ற ஓர் உலகமே மிகச்சிறந்த உலகம்.

  இதன் நீட்சியாக, எந்த மனிதரும் தமது தலைவிதியை எந்த அடக்குமுறைக்கும் கட்டுப்படாமல் தாமே தீர்மானிக்கும் உலகம்.

  இதுதான் பால்நிலை விடுதலையாக அமைய முடியும்.

  ஆண் அதிகாரத்தை ஒழித்து அந்த இடத்தில் பெண்ணை இருத்துவதல்ல.

 7. //ஆண்கள் அதை உடற்பூர்வமாயும், மனப்பூர்வமாயும் ஏற்றுக் கொண்டார்கள்//

  இங்கே வேலைப்பிரிவினை பற்றிய பிரச்சினை எழுகிறது.

  வங்கியில் உட்கார்ந்து கணக்கெழுதுவதைக்காட்டிலும் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளும் வேலை கடினமானது, கூடிய உடல் உழைப்பினை கோருவது.

  எந்த வேலை இல்லாமலும் சீவிக்கக்கூடிய மனித இனம் சமையல் வேலை இல்லாது சீவிக்காது. இந்த சமையல் வேலையை பெரும்பாலும் பொறுப்பெடுத்துச்செய்வது பெண்கள்.

  பெண்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு ஊதியம் வழங்காது விட்டது யார்? அந்த உழைப்பை கணக்கெடுக்காது ஆண்கள் செய்யும் வேலையை மட்டுமே “வேலை” என்று ஆக்கியது எது?

  கிராமங்களுக்குச்சென்று பாருங்கள், விவசாயம் தொடக்கம் குடிசைக்கைத்தொழில்கள வரை பெண்களின் பங்கு மிக அதிகமானது. அங்கே ஆண் பெண் வேலைப்பிரிவினை அவ்வளவு ஆழமனாதல்ல.

  உடல் உழைப்பை பெண்கள் செய்ய முடியாதென்பது பச்சைப்பொய். அவர்கள்தான் உண்மையாகவே உடலுழைப்பைச்செய்கிறார்கள்.

  ஆண் பலமானவன் அதுதான் ஆண் அதிகாரத்தில் இருக்க வேண்டியிருக்கிறதென்பது அடிப்படை அற்ற வாதம்.

  என்னை விட என் அம்மா பலமடங்கு பலமானவர். என்னால் மரத்தில் ஏற முடியாது. அம்மா மரமேறக்கூடியவர்.

  ஆண்களை விட பெண்கள் பலமாக இருக்கும் நிலையும் உண்டு ஆண்கள் பலமாயிருக்கும் நிலையும் உண்டு. இங்கே ஒட்டுமொத்த முடிவொன்றுக்கு வர முடியாது.

  பிரச்சினை என்ன என்றால், பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போனமையும் ஆண்களின் உழைப்பு அங்கீகாரம் பெற்றமையுமே ஆகும்.

  உழைப்பு எங்கே எந்த வடிவில் உற்பத்திக்கு உதவினாலும் அது மதிப்பான உழைப்புத்தான்.

  இப்பொழுது பெண்களால் செய்யமுடியாத வேலையே இல்லை என்று ஆகிவிட்டது.

  ஆண்கள்தான் வேலை செய்கிறார்கள், ஆண்கள்தான் பலமானவர்கள் என்றெல்லாம் எங்கெங்கேயோ அடிப்படையற்றுச்சுற்றும் உங்கள் வாதம், பெண்ணை, கருப்பைகளை ஆண் சொத்துப்போல் சேர்த்து வைக்க உதவும் இந்த சமூக கட்டமைப்பைப்பற்றி சிந்திக்கவே இல்லை.

  அடிப்படை அங்கேதான் இருக்கிறது

  உலகின் மிக ஆதாரமான உற்பத்திக்கருவியான கருப்பையை ஆண் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலைதான் நிஅத் தந்தை வழி ஆதிக்க நிலை. கருப்பை எனும் உற்பத்திக்கருவியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அதனைக்கொண்டிருக்கும் பெண் குலத்தையே தனது கட்டுப்பாட்டின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கட்டுமானமே தந்தைவழி ஆதிக்ககட்டுமானம்.

  கருப்பை மீதான அதிகாரம் பெண்ணின் கைக்கு மறுபடி வந்து சேருமானால் தந்தை ஆதிக்கம் உருவாக்கிய இந்தக் கலாசார, அதிகாரக் கட்டுமானமே உடைந்து நொறுங்கி சமதுவமான உலகம் பிறக்கும்.

  இதைவிட்டுவிட்டு ஆண் வேலைக்கு போகிறான் பெண் வீட்டில் படுத்துக்கிடக்கிறாள் என்றெல்லாம் காரணம் சொல்வது உண்மையை மறைக்கும் முயற்சிகளே ஆகும்.

  1. நாம் விரும்பும் விஷயங்களை நம்மால் முடியா விட்டாலும் சந்தோஷமாகச் செய்வோம். அதனால்தான் ஒரு தாய் குழந்தையை பராமரிப்பதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு செய்கிறாள்

 8. //What we are looking for is points to agree and disagree with whether the way male chauvinism is understood in the right way//

  இந்தக்கேள்விக்கு எனது பதில் கொஞ்சம் முதல் நான் சொன்ன பதிலொன்றில் இருக்கிறது.

  பெண்ணிலைப்பார்வைகள் வேறுபடுகிறது. அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அமைய.

  என்னுடைய பார்வையை விளங்கப்படுத்தியிருந்தேன்.
  ஒட்டுமொத்தமாக எல்லாப்பெண்ணியப்பார்வைகளும் ஒன்றையே சொல்கின்றன என்று எடுத்துக்கொள்ள முடியாது.

 9. அதில் எனக்கு கருத்து மாற்றம் இருக்கிறது.
  உணர்வை இரண்டு விதமாக பிரிப்பது மிகக் கடினம்.
  Ego என்பது ஒரு Identity (To know more refer to Sigmund Freud’s notes on Ego). Thought Process நமக்கு அளிக்கும் ஒரு பதவி/Portfolio.
  உணர்வு என்பது Ego வினால் மாற்றம் பெரும். The mind as an Apparatus takes Ego as a reference to respond to things.
  Male Chauvinism என்பது சிறு வயது முதலே ஒருவனுடைய ஈகோவுக்கு போடப்படும் தீனியின் விளைவு. தந்தை, நண்பர்கள், சமுதாயம் ஆகியவை பெண்களை அடக்கி ஆள்வதைப் பார்த்தால், அல்லது பெண்களை தன்னுடைய சுய லாபத்துக்கு பயன்படுத்தும் மனிதர்களைப் பார்த்தால் இவனுடைய “ID” – இப்படி செய்தால் என்ன என்று நினைக்கும். அதை Super Ego என்பது தடுக்கப் பார்க்கும். “ID” க்கு inputs அதிகமானால் அது Super Ego பேச்சைக் கேட்காது.
  சில வயதான பெண்கள், முரட்டுத் தனமான காவல் துறைப் பெண்கள், அதிகமான படிப் பறிவில்லா நடுத்தர வயது தாய்மார்கள் “நீ பொண்ணு தானே ம்மா.” “பொண்ணு தானே டீ நீ ” “ஏமமா ஒரு பொண்ணா இருந்துகிட்டு…” என்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி பெண்களைச் Stereotype செய்ய முயல்வதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

  The evils of the society stem from the fact that victims in most cases do not know that they are victimized. They look at it as a way of life.

  1. அருண் சார், //உணர்வு என்பது Ego வினால் மாற்றம் பெரும்.//

   நீங்கள் உணர்வு என்று குறிப்பிட்டிருப்பது வெளிப்பாட்டை என்று கருதுகிறேன். ஈகோ என்பது உணர்வுதான். அது வெளிப்படும் விதங்கள்தான் பலவாறாக இருக்கின்றன. தந்தை அல்லது தாய்த்தனமாக இருக்கிறோமா அல்லது குழந்தைத்தனமாக இருக்கிறோமா என்பதைத்தான் ஈகோ குறிக்கிறது. ஈகோ வை காஸ் ஆகவும், வெளிப்பாட்டை effect ஆகவும் கொள்ளலாம்.

 10. மன்னிக்கணும் ஜவகர் சார், ஈகோ என்பது உணர்வு அல்ல.
  ஈகோ என்பது உணர்வானால் Egoistic , Ego-Centric, Ego maniacal போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? Egoistic என்பது உணர்வுபூர்வமான ஒருவரைக் குறிக்காது.
  உணர்வு என்பதை நான் வெளிப்பாடு என்று சொல்லவில்லையே. உணர்வு வெளிப்பாட்டை Ego பாதிக்கும் என்று சொல்கிறேன்.
  Emotions play a key role in Response. Response is classified as a Fight or Flight Response.
  அது வேறு ஒரு Dimension.

 11. ஆண் ஆதிக்கம் பற்றி அதிகமான பின்னூட்டங்கள் அனுப்பி இருப்பது ஆண்கள் தான் !!

  எல்லாருடைய கருத்துகள் எதுவானாலும் என்னோட கருத்து இதுதான் – “chauvinism, be it male or female, comes only when one derives a SADISTIC PLEASURE out of their act”

  இதுதான் உண்மையான psychology 🙂

  1. இது ஒரு நல்ல கருத்துதான் அபர்ணாஜி, ஆனால் chauvinism என்கிற சொல் உயர்வு மனப்பான்மையிலிருந்து வருவது என்கிற என் perception ஐ பதிவு செய்யவே இந்தப் பதிவு. காலப்போக்கில் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியான செயல்களையே chauvinism ஆக ஆக்கிவிட்டார்கள் என்பது என் வருத்தம். நண்பர் மயூரன் குறிப்பிட்ட உடன்கட்டை உள்ளிட்ட விஷயங்கள் சில ஆண்களின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. அவற்றை chauvinism என்று சொல்வதில் எனக்கு உடன்பாடே இல்லை. அவையெல்லாம் atrocities. பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், பெண்களை exploit செய்தலையும், முரட்டுத்தனங்களையும் chauvinism ஆக சொன்னது காலத்தின் கோலம்.

  1. அருண், பின்னே, பெண்ணாதிக்க யுகத்திலே ஆணாதிக்கம் பத்தி விவாதம் நடந்தா ஓரமா உட்கார்ந்து சிரிப்பதைத்தானே பெண்கள் பண்ணுவாங்க!

 12. மற்றது உளவியல் அடிப்படைகளும் விருப்பங்களும் எண்ணங்களும் இப்படி சமூக கட்டுமானங்களை, தத்துவங்களை உருவாக்கி பாதுகாக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

  புறப்பொருட்களும், பவுதிகமான காரணிகளுமே எண்ணங்களையும் விருப்பங்களையும் தீர்மானிக்கின்றன.

  உரியவாறாக புற நிலைகளை மாற்றும்போது எல்லா மனிதர்களும் சுயமரியாதையோடு வாழும் நிலை ஏற்படக்கூட்ம்.

  இந்தப்பதிவு தொடர்பாயே பார்த்தாலும் கூட ஆரம்பகால நிலைமையிலிருந்து இன்று பெண்கள் ஓரளவுக்கேனும் விடுதலை அடைந்திருப்பதன் காரணங்கள் என்ன?

  உற்பத்தி முறைகளில் பொருளாதார உறவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம் தானே?

  இந்த மாற்றங்கள் மனங்களையும் மாற்றுகின்றன.

 13. நான் இரவு(இங்கு ஆஸ்திரேலியாவில் )தூங்கி எழுந்திருப்பதற்குள் ஒரு யுத்தமே நடத்தியிருக்கிறீர்கள். ஜவஹர்,மயூரன்,மற்றும் அருண், அபர்னா மிக்க நன்றி . உங்கள் ஆரோக்கியமான விவாதத்தில் பல விஷயங்கள் வெளி வருகின்றன.
  இந்த பின்னூட்டத்தை நான் அனுப்பும்போது இங்கு காலை ஏழு மணி முப்பது நிமிடம்.ஆண் பெண் குழந்தைகள் எல்லொரும் வீட்டை விட்டு அவுட்.உழைக்கத்தான்!
  தொடரட்டு,
  கமலா

 14. மற்றவர்களை உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தி தன் ஆளுமையை வெளிப்படுத்துதல்;
  exploitation மூலம் மற்றவர்களை நிலை குலைய செய்து தன் ஆளுமையை வெளிப்படுத்துதல்;
  சட்டம்,நீதி,நேர்மைகளை தானே வகுத்துக்கொண்டு அதன் மூலம் மற்றவர்களை துச்சமாக மதித்து தன் ஆளுமையை வெளிப்படுத்துதல்;
  –இவைகளே chauvinism என்று குறிக்க சரியான அடையாளங்கள். இவை பெரும்பாலும் உறவு முறைகளில் வெளிப்பாடு அதிகம்.எங்கு உரிமை அதிகம் இருக்கிறதோ அங்கு இந்த அடையாளங்கள் வெளிப்படும்.
  மற்றவை ego, or superiority complex எல்லாம் அடுத்தவர்களை dominate செய்வதன் மூலம் வெளிப்பட்டுவிடும். (வீட்டுல மதுரையா….சிதம்பரமா …ன்னு கேக்கறமாதிரி)

  1. என்சி : இல்லை, நான் ஒத்துக்கொள்ளவில்லை. தேசப்பற்று மாதிரி உயர்ந்த விஷயத்தைக் குறிக்க பயன்பட்ட சொல் chauvinism. அதைக்கொண்டு கொடுமைகளையும், குற்றங்களையும் குறிப்பது தப்பு. வேறே என்ன பேர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

 15. //அது என்ன செய்கிறது? அம்மா, உனக்கெதுக்கு இத்தனை சுமைகள்… நீ வீட்டைப் பாத்துக்கோ, நான் வெளியே பாத்துக்கறேன் என்று பொறுப்புக்களை ஏற்கிறது//
  //இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால், ஆதி காலத்தில் சம்பாத்யம் என்பது உடலுழைப்பை நம்பி இருந்தது. பெண்கள் weaker sex என்பதால், வெளி வேலைகளை ஆண்கள் எடுத்துக் கொண்டார்கள்.//ஆஹா என்ன மாதிரி சூழ்னிலை எடுத்துக்காட்டுக்கள்?ஜ‌வஹர் எந்த யுகத்தில் இருக்கீங்க?இப்படி முழுப்பூசணிக்காயை (இதுதான் நம்ம ஆண்கள் ரொம்ப நாளகச் செய்கின்ற செய்த பெரிய மழுப்பல்)சோற்றில் மறைக்க முடியும் என்று நீங்கள் எப்படி எண்ணினிர்கள்?
  அதெல்லாம் தாண்டி இப்ப நாங்க எங்கேயோ இருக்கோம்னு நம்ம நண்பர்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க நண்பரே!
  அன்புடன்
  கமலா

 16. chauvinism அல்லது எல்லா சாவனிஸ்ட் அடிப்படையில் மிக மிக selfish ஆக இருப்பவர்கள். (இதையும் அரை கிலோ போட்டுக்கலாம்) தான், தனக்கு, தன்னுடைய, என்று எப்பொழுதும் தேவைகளை முதலில் பூர்த்தி செய்துகொள்ள அவர்களிடம் உள்ள ஆயுதம் இந்த chauvinism. இது இரு பாலார்க்கும் பொருந்தும்.

  1. சிம்வா : நான் ஒப்புக்க மாட்டேன். நீங்க சொல்றது chauvinist களா நினைக்கப்படறவங்களை. பாசிட்டிவ் ஆட்டிட்யூட் சென்ஸில் சொல்லப்பட்ட chauvinist கள் சுயநலக்காரர்கள் அல்ல.

 17. ஜவஹர் சார் , மெட்ராஸ்’ல அரை கிளாஸ் தண்ணி கெடைக்காம ரொம்ப பேரு இருக்காங்க,
  இந்த நேரத்தில நீங்க என்னமோ அரை கிளாஸ் லாஜிக் சொல்றிங்க!!

  ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ அப்படின்னு சொல்றவுங்கள கூட சைக்காலஜிக்காரவுக ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டவுங்கனு சொல்றாங்களாமே !! காந்தி, விவேகானந்தர், பாரதி போன்றவர்கள் கூட தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களோ ?
  ( அப்பாடா நம்மளால முடிஞ்சது !! விடு ஜூட் )

  1. விவேக், தமாஷா சொன்னாலும் நீங்க சொன்னதிலே ஒரு பாயின்ட் இருக்கு. அடிப்படைலே கோபம் என்பது இயலாமை. இயலாமை நிச்சயமா தாழ்வு மனப்பான்மைதான். ஆனா சிறுமை கண்டு பொங்குவாய் என்கிறதிலே கோபத்தோட நிறுத்தச் சொல்லல்லே. தைரியமா எதிர்த்து நில்லுன்னு சொல்றாங்க. காந்தி, பாரதியார் எல்லாம் கூட தாழ்வு மனப்பான்மையை வெளியிட்டாங்களோ என்னவோ தெரியாது. விவேகானந்தரின் பேச்சிலே ஒரு சந்தர்ப்பத்திலே கூட அது மாதிரி இருந்ததில்லை. தன்னம்பிக்கைக்கு மறு பெயர் விவேகானந்தர்.

 18. Olympics 2008
  Sprint:
  100 meters – men: 9.74 sec. women: 10.78 sec
  200 meters – men: 19.67 sec women: 22.02 sec
  marathon – men: 2:06:32 women: 2:26:44

  ஏன் இதுவரை எந்த ஒலிம்பிக் போட்டியிலும் பெண்களால் ஆண்களுக்கு நிகராக வர முடியவில்லை?

  1. ஸ்ரீனி, மேலுக்கு பீமேல் மேலானா, பீமேலுக்கு யாரு மேல்? மேலாப் பாக்கிற போது பீமேலெல்லாம் மேலே இல்லாம போய்டுவாங்களா? அல்லது மேலெல்லாம் பீமேல்லில்லாம போய்டுவாங்களா?

 19. பெண்களின் ஆட்சியில் அடிமைகள் போல் வாழும் நிலை ஆண்கள் அவசியம் எதிர்கொள்ள வேண்டும். பெண்களின் காலடியில் சொர்கத்தை காண்பார்கள். அடிமையாய் இருப்பதை தவிர எந்தவொரு உரிமையும் கிடையாது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s