பிரதிவாதி ஏன் தோற்றார்?

அமெரிக்க நீதிமன்றத்தில் வந்த ஒரு சுவாரஸ்யமான வழக்கு.

வாதியின் வழக்கறிஞர் சொன்னது.

“யுவர் ஹானர், என் கட்சிக்காரரான இந்தப் பெண் சொல்வது யாதெனில், இவரிடம் புதரடர்ந்த ஒரு தோட்டம் இருந்தது. அதை ரூ.250 க்கு பிரதிவாதிக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வாடகைக்குக் கொடுத்தார். வாடகைக்கு எடுத்த பிரதிவாதி திரும்பக் கொடுக்கும் போது பாதி வாடகையே கொடுத்தார். நீதிமன்றம் என் கட்சிக்காரருக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல வேண்டும்”

பிரதிவாதியின் வழக்கறிஞர் சொன்னார்,

“யுவர் ஹானர். வாதி சொல்வது சரிதான். ஆனால், அந்தத் தோட்டத்தில் ஒரு பாழும் கிணறு இருந்தது. அதன் ஓரத்தில் கல்லை வைத்து, அதில் குழாயை இறக்கி நீர் இறைக்கும் பம்ப்பை என் கட்சிக்காரர் போட்டார். இது, தராத பாதி வாடகைக்கு சரியாகப் போகிறது”

வாதியின் வழக்கறிஞர் சளைக்கவில்லை.

“யுவர் ஹானர். பிரதிவாதி தோட்டத்தை காலி செய்கிற போது அவர் குறிப்பிட்ட கற்கள்,குழாய்,பம்ப் எல்லாவற்றையும் எடுத்துப் போய் விட்டார்”

நீதிபதி எழுதின தீர்ப்பு :

“ஒன்று, பிரதிவாதி ஒப்புக்கொண்ட தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் கிணற்றில் பொருத்திய எந்திரங்களை வாதியிடம் ஒப்படைத்து விட்டுப் போக வேண்டும்”

பிரதிவாதி உடனே மீதி தொகைக்கு செக் எழுதினார்.

Advertisements

10 comments

  1. பிரதிவாதி ஏன் தோற்றார் என்று சொல்லவே இல்லையே? (அல்லது எனக்குத்தான் புரியலையா யுவர் ஆனர்?) இது straight and simple case மாதிரி தான் தோணுது

  2. வீட்டை காலி பண்ண சொல்லிவிட்டான் வீட்டுக்காரன். அந்த கணவனிடம் மனைவி சொல்லி அனுப்பினாள்: வெளிலே போயிட்டு வரும்போது மறக்காம இரண்டு எலி, நாலு கரப்பு, நாலு பல்லி வாங்கிட்டு வாங்க” என்று. “ஏனா, வீட்டுக்காரன் பழயமதிறியே இருக்கணும் னு கண்டிஷன் போட்டிருக்கான்” என்றாள்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s