பிரதிவாதி பற்றி காளமேகப்புலவர்…

இந்தப் பிரதிவாதி சமாச்சாரம் நமக்கும் புரியவில்லை.

காளமேகப்புலவருக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தேன். உடனே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். மேல் லோகத்துக்கு ஒன்லி இன்கமிங். நோ அவுட் கோயிங். அவர் எழுதியிருந்தது இதுதான் :

வாதியின் கணவர் முகம் பூரா புதர் மாதிரி தாடியும் மீசையும் வளர்த்துக் கொண்டிருப்பவர். வாய் எங்கே என்றே தெரியாமல் ஒரு இச்சா கூட தர முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தார்.

ஒருநாள் ஒரு பல் வைத்தியர் புலம்பிக் கொண்டிருந்ததைக் கேட்டார்.

“வர்றவன் பூரா தாடியும் மீசையுமா வர்றான். வாய் எங்கே இருக்குன்னே தெரியாம எங்கேருந்து பல் வைத்தியம் பாக்கறது!”

இந்தப் பெண்மணிக்கு சட்டென்று ஐடியா.

“எனக்கும் இதே கஷ்டம்தான் டாக்டர். அவரை அழைச்சிகிட்டு வர்றேன். ஏதாவது ஐடியா பண்ணி கண்டு பிடிச்சிடுவோம். ஆனா ஒண்ணு, லாபம் உங்களுக்குத்தான். அதனாலே பீஸ் நீங்கதான் எனக்குத் தரணும்”

டாக்டர் ஒப்புக் கொண்டார்.

அவர் முயற்சியை தொடங்குமுன், தாடிக்காரர் “சிக்கன் சாப்டுட்டு வந்திருக்கேன். வாயை கொப்பளிச்சிடறேன். அப்புறமா உங்க ரிசர்ச்சை வெச்சிக்கலாம்” என்றார்.

தாடிக்காரர் வாய் கொப்பளிக்கும் போது மின்னல் மாதிரி அந்த ஐடியா வந்தது டாக்டருக்கு. கொப்பளித்துத் துப்புகிற தண்ணீர் ஜெட்டை அப்படியே பாலோ செய்து கொண்டு போய் சப்பக் என்று ஆள் காட்டி விரலை அவர் வாயில் நுழைத்து விட்டு,

“ஆஹா கண்டு பிடிச்சிட்டேன்” என்று ஆர்க்கிமெடிஸ் போல அலறினார்.

ஆனால் காசு கொடுக்கும் போது “உனக்கும்தானே பெனிபிட்” என்று பாதி காசு கொடுத்து ஏமாற்றி விட்டார்.

என்று முடித்தார் காளமேகம்.

“எப்படி புலவரே இதெல்லாம்….” என்று என் வாயிலிருந்த பீடி நழுவ,

“இதுதானய்யா லேடரல் திங்கிங். சமாளிக்க முடியாத டிராப்பில் நம்மளை நாமே மாட்டி விட்டுக்கணும். அதுலேர்ந்து வெளியே வந்துதான் ஆகணும், இல்லைன்னா உயிர் போச்சு, மானம் போச்சுன்னு சிச்சுவேஷன் இருக்கணும். அப்போ உன் மூளையோட நிஜமான பரிமாணத்தை நீ பார்க்கலாம்.”

“லேடரல் திங்கிங்கோட தியரியெல்லாம் எனக்கும் தெரியும். இந்த ஐடியா எப்படி கிடைச்சுதுன்னு கேட்டேன்”

“அதுவா… ஸ்டிச் இன் டைம் படம் நானும் பார்த்திருக்கேன்”

Advertisements

One comment

  1. காளமேகப்புலவரும் பிரதிவாதியும் எப்படியோ சமாளிச்சு அங்கிருந்து தப்பிச்சிருக்கலாம்; ஆனால் கமலா மேடம் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!!!!!!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s