அந்த சக்தியின் பெயர் என்ன?

பூமி என்ன வேகத்தில் சுற்றுகிறது?

1 rpd. அதாவது 1 Revolution per Day.

900, 1400, 2900 rpm இல் சுற்றும் மோட்டார்களைப் பார்த்தவர்கள் பூ.. இவ்வளவுதானா என்று நினைப்போம். மணிக்கு 1750 கிலோமீட்டர் என்று சொன்னால்….

“டிரைவர் கொஞ்சம் மெல்லப் போப்பா என்று சொல்லத் தோன்றுகிறதா?”

மெல்லப் போனால் என்ன ஆகும்?

பூமி நசுங்கி கிரஷ் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், பூமி சுற்றுவதால் ஒரு centrifugal force உண்டாகிறதல்லவா, அந்த centrifugal force ஆல் நாம் தூக்கி எறியப்படாமல் இருப்பதற்குக் காரணம் புவி ஈர்ப்பு. புவி ஈர்ப்பின் அளவை மாற்றாமல் centrifugal force இன் அளவை மட்டும் குறைத்தால்….(புவி ஈர்ப்பை centripetal force என்று கொண்டால் இந்த வாதம் அடிபட்டுப் போகும்)

ஆனால் மேற்சொன்ன விஷயம் நடப்பதற்கு முன்னால் இன்னொன்று நடக்கும். சூரியனின் வெப்பத்தால் பூமியில் ஏறும் உஷ்ண நிலையின் அளவு அதிகமாகி, அதனால் நிறைய அழிவுகள் ஏற்படும். அப்பளம் சுடும் போது படக் படக் என்று திருப்பிப் போடுகிறோமே அப்படிச் செய்யாமல் மெதுவாகத் திருப்பிப் போட்டால் என்ன ஆகும்!

aging என்கிற வயதாகும் Process க்கு, ஏனைய காரணங்களுடன், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரவும் பகலும் மாறி மாற்றி வருகிற fatigue உம் ஒரு காரணம். இரவு பகல் மாறுகிற frequency குறைந்தால், குறிப்பிடத் தகுந்த அளவு முதுமையும் ஒத்திப் போடப்படும்.

கமலும், ரஜினியும் இன்னும் சில காலம் டூயட் பாடும் ஹீரோ வேஷங்களை தொடரலாம்.

பூமியின் சுழலும் வேகத்தையும், அது சூரியனிலிருந்து எத்தனை தூரத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்திருப்பது ஒரு திறமையான வடிவமைப்பு தகுதியைக் காட்டவில்லை?

இதே வியப்பு ஐசக் ந்யூட்டனுக்கு வந்த போது அவர் சொன்னது :

“The most beautiful system of the sun, planets, and comets, could only proceed from the counsel and dominion on an intelligent and powerful Being.”

வியப்போடு நிறுத்திக் கொள்ளாமல் ‘Newton’s Law of universal gravitation’ ஐயும் சொன்னார். கோள்களுக்கு இடையிலான தூரங்களுக்கு அவற்றின் ஈர்ப்பு விசை எந்த வகையில் பொறுப்பாக இருக்கிறது என்பதற்கு ஒரு சமன்பாடு கூட தந்திருக்கிறார். இது கிட்டத்தட்ட காந்த துருவங்களுக்கு இடையிலான ஈர்ப்பையும், அவற்றுக்கிடையே உள்ள தூரத்தையும் சம்பந்தப் படுத்துகிற சமன்பாடு போலவே இருக்கிறது.

இதை எனக்கு நினைவூட்டிய அப்பாதுரை அவர்கள் வெறும் அப்பாதுரை இல்லை. ‘அடேங்கப்பாதுரை!’

Advertisements

17 comments

 1. aging என்கிற வயதாகும் Process க்கு, ஏனைய காரணங்களுடன், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரவும் பகலும் மாறி மாற்றி வருகிற fatigue உம் ஒரு காரணம். இரவு பகல் மாறுகிற frequency குறைந்தால், குறிப்பிடத் தகுந்த அளவு முதுமையும் ஒத்திப் போடப்படும்.//

  போகிற போக்கில் சாத்தி விட்டீர்கள் போலிருக்கிறதே?
  அப்படின்னா வடதுருவ ஏரியாக்களில் 6 மாதம் தொடர் பகல்/ராவு. உமது கணக்குப்படி அங்கு வசிப்போர் வாழ்நாள் 3650 வருசமா சார்?

  1. நந்தவனத்தில் இருப்பதால் ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக யோசிக்கிறீர்கள். குறிப்பிடத் தகுந்த அளவு என்பது நூறு மடங்கு நீடிப்பு அல்ல. அடுத்தது, முதுமை ஒத்திப் போடப்படும் என்று நான் குறிப்பிட்டது வயதை அல்ல. physical youth ஐ.

 2. //நந்தவனத்தில் இருப்பதால் ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக யோசிக்கிறீர்கள். //

  🙂

  நீங்கள் சொன்னது senescence-ஐ, வாழ்நாளை அல்ல என்கிறீர்கள். ஆனால் பூமியின் சுழற்சி aging ஐ பாதிக்கும் என எப்படி முடிவுக்கு வந்தீர் என புரியல சார்! senescence-ஐ நிர்ணயிப்பது DNA போனற பயோகெமிக்கல் சமாச்சாரங்கள்தானே… இதனை இரவும் பகலும் எப்படி பாதிக்கும் ?
  ஒரு வேளை நைட்டில் ஓவராக தண்ணி போடுவது போன்ற விளையாட்டுக்களால் வேண்டுமானால் aging பாதிக்கபடலாம்! அதாவது அதிக நைட்; அதிக தண்ணி!

 3. //1 rpd. அதாவது 1 Revolution per Day.
  1 rpd. அதாவது 1 Rotation per Day. ??

  /* பூமி நசுங்கி கிரஷ் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், பூமி சுற்றுவதால் ஒரு centrifugal force உண்டாகிறதல்லவா, அந்த centrifugal force ஆல் நாம் தூக்கி எறியப்படாமல் இருப்பதற்குக் காரணம் புவி ஈர்ப்பு. புவி ஈர்ப்பின் அளவை மாற்றாமல் centrifugal force இன் அளவை மட்டும் குறைத்தால்…. */

  அதற்கு வாய்பில்லை என்று நினைக்கிறன் .. mercury mass = 0.055 Earths , Equatorial rotation velocity = 10.892 km/h ; pluto mass = 0.0021 Earths , Equatorial rotation velocity 47.18 km/h
  அதாவது ப்ளூட்டோவை விட மெர்குரி பெரிதாக இருந்தாலும் வேகம் குறைவாகவே சுற்றுகிறது … ஆனால் நீங்கள் சொல்வது போல எதுவும் நடக்கவில்லை

  //குறிப்பிடத் தகுந்த அளவு முதுமையும் ஒத்திப் போடப்படும்.

  நந்தவந்தார் சொல்வது சரியென்று நினைக்கிறன்.. வயது, முதுமை .. இவையாவும் DNA சமாச்சாரம்… அப்படி இல்லையென்றால் நம்மூர் விஞ்ஞானிகள் மைகேல் மதன காமராஜனில் பீம்பாய் கால்வைத்து வண்டி நிறுத்தினால் போல் பூமியை நிறுத்தி இருப்பார்கள் 😀

  1. நன்றி ragha இரவு பகலால் வரும் fatigue இன் பங்கு ஓரளவு இருக்கிறது என்று நம்புகிறேன். அதுவே முழுசும் அல்ல. மெர்குரி, ப்லுடோ சமாச்சாரங்களில் அந்த கிரகங்களின் கிராவிட்டி ஐயும் கணக்கில் எடுக்க வேண்டும். அங்கேயெல்லாம் கிராவிடியும் குறைவு.

 4. //ஏனைய காரணங்களுடன், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரவும் பகலும் மாறி மாற்றி வருகிற fatigue உம் ஒரு காரணம். இரவு பகல் மாறுகிற frequency குறைந்தால், குறிப்பிடத் தகுந்த அளவு முதுமையும் ஒத்திப் போடப்படும்.//
  இந்த துறையில் ஆராய்ச்சி செய்பவன் என்ற வகையில் இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. Ageing (aging அல்ல) என்பது நந்தவனத்தான் அவர்கள் குறிப்பிட்டது போல senescence என்னும் process-னால் மட்டுமல்லாது stem cells என்னும் அனுக்களின் குறைவு,DNA damage, ROS accumulation என இந்த பட்டியல் தொடரும்.மேலும் விளக்கத்திற்கு இங்கு செல்லவும்.
  (http://www.senescence.info/causes.html)
  ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணம் எங்கு/எந்த ஆராய்ச்சியில் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை! தெரியப்படுத்தினால் தெரிந்துகொள்வேன்! சொல்ல முடியுமா??

  1. நன்றி பத்மஹரி, இவையெல்லாம் என்னுடைய கற்பனைகள்தான். நீங்கள் இன்னும் விவரமாகச் சொன்னால் நானும், நம் வாசகர்களும் பயன் பெறலாம். உங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

 5. இப்படி தான் சார் பள்ளிக்கூடத்தில படிக்கும் போது நானும் ஆராய்ச்சி பண்ணேன் , centrifugal force’a பத்தி படிச்சு , ஆர்வக் கோளாருல ceiling பேன்ல ஒரு சொட்டு தண்ணிய விட்டு , fan’a சுத்த விட்டு ஆரஞ்சதுல fan ரிப்பேர் ஆகி அடி வாங்குனதுதான் மிச்சம்.
  இல்லேன்னா நானும் தியரி எழுதிருப்பேன்.

 6. ஐயா Padmahari,

  இத்துறை ஆராயச்சி செய்கிறீரா, வாழ்த்துக்கள்!

  நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில் …. Ageing & aging இரண்டுமே சரிதான் Ageing= British English Aging=American English. ஏதாவது அமெரிக்க ஜர்னலில் உம்ம ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பிக்கும் போது உதவும் பாருங்கள்!

 7. மிக்க நன்றி ஜவஹர் அய்யா.
  //Ageing & aging இரண்டுமே சரிதான்//
  சுட்டிக்காட்டியமைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நந்தவனத்தான் அவர்களே! மறுமொழியினைப் பதித்த பிறகே கவனித்தேன் அந்த ஆங்கில மாற்ற(இம்சை)ங்களை!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s