பேசினால்…ஓயுமா…அன்பே..

அடுத்தவர்கள் பேசும்போது கவனிப்பது ரொம்பக் கஷ்டமான விஷயம்.

இந்தக் கஷ்டத்துக்கு கேட்பவர்களை மட்டும் குறை சொல்வது தவறு. பேசுகிறவர்கள் பக்கமும் குறைகள் இருக்கின்றன. பேசுகிறவர்கள் பலவிதத்திலும் நம் பொறுமையை சோதிப்பார்கள்.

மின்சார வாரியத்திலிருந்து சான்றிதழ் வாங்கிவரச்சொல்லி அவரை அனுப்பியிருந்தார் அவரது பாஸ். போய்த் திரும்பி வந்த அவர் பாஸிடம் ரிபோர்ட் செய்கிறார் :

“நான் சரிய்யா பதினோரு மணிக்கு அங்கே போயிட்டேன். போனா அந்த நடராஜன் இன்னைக்கு லீவுன்னு சொல்லிட்டாங்க. சரிதான் மறுபடி திங்கட் கிழமை பார்த்துக்கலாம்ன்னு கிளம்பிட்டேன். வாசல் வரைக்கும் வந்துட்டேன். நடராஜனோட அசிச்டன்ட் ஒருத்தர் இருக்கார், சிவஞானம்ன்னு பேரு. அவர் என்னைப் பார்த்துட்டு

‘என்ன ஜெயராமன் சார், என்ன இந்தப்பக்கம்’ன்னு விசாரிச்சார்.

‘ஒண்ணுமில்லை, ஒரு வேலை விஷயமா உங்க பாசை பாக்க வந்தேன். அவர்தான் இன்னைக்கு லீவு போலிருக்கே’ ன்னேன்.

‘என்ன விஷயம்ன்னாரு’

‘இது மாதிரி அடிஷனல் லோடுக்கு பர்மிஷன் கேட்டிருந்தோம். இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சி போச்சு. சர்டிபிகேட் வரல்லை.. அதை வாங்கிட்டுப் போலாம்ன்னு வந்தேன்’ ன்னேன்.

அவர் உடனே, ‘எதோ சர்டிபிகேட் டேபிள்லே வச்சிருக்கேன்னு நடராஜன் போன் பண்ணாரு. அவர் டேபிள் சாவி என்கிட்டதான் இருக்கு’ ன்னார்.

இது இத்தோடு முடியும் என்று நினைக்காதீர்கள். அது அந்த டேபிளில் இருக்காது. அவர் திரும்ப போன் செய்வார்… என்று மெகா சீரியல் மாதிரி போய்க்கொண்டே இருக்கும்.

நீங்கள் பாசாக இருந்தால் இவ்வளவையும் கேட்டுக்கொண்டு இருப்பீர்களா?

“நிறுத்துய்யா, சர்டிபிகேட் கிடைச்சுதா இல்லையா?” என்று வெட்டுவீர்கள்.

இது மாதிரி ஆசாமிகள் “நேத்து கிருஷ்ணகிரி போயிருந்தேன்..” என்று ஆரம்பிக்கிற போதே

“அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்” என்று கழன்று கொண்டு விடுவது உடம்புக்கு நல்லது.

Advertisements

10 comments

 1. “எந்த மாட்டர் ஆனாலும் மணிக்கணக்கில் பேசுவார் என் அப்பா”-என்றான் ஒரு சிறுவன். பெருமையாக.
  “மாட்டரே இல்லாம நாள் கணக்கில் பேசுவார் என் அப்பா” என்றான் ஒரு அரசியல் வாதியின் மகன்.

 2. எளிதாய் எஸ்கேப் ஆக சில யோசனைகள்:
  அலை பேசி ஐ திடீரென்று காதில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்கலாம்.(கேட்டால் சைலன்சர் மோட் என்று சமாளித்துக்கொள்ளலம்.);
  வேறு எங்காவது பார்வைகளை அலைய விடலாம்;
  கைகள் இரண்டையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு அவரையே உன்னிப்பாக பார்க்கலாம்;
  அடிக்கடி வாட்சை சரி செய்வது போல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்;
  வீட்டுலே ஏதாவது ரிப்பேர் வேலை நடப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகலாம்;
  தூரத்தில் எங்காவது சைகை செய்து சைகையில் இதோ வரேன் என்று சொல்வது போல் பேசலாம்;
  …ஹலோ..எங்கே போறீங்க? இன்னும் கைவசம் குறிப்புகள் வெச்சிருக்கேன் ………

 3. \\கைகள் இரண்டையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு அவரையே உன்னிப்பாக பார்க்கலாம்;//

  எது ஒர்க் அவுட் ஆகுதோ இல்லையோ இது கண்டிபா ஆகும். இது மேத்தேடு யூஸ் பண்ணி பல முறை தப்பி இருக்கேன் நான்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s