உ போ ஒ படத்தில் விஞ்ஞானப் பிழை?

“இப்படி மையமா சொல்லாதே. முடியும், முடியாதுன்னு பைனரியா சொல்லு” என்று மோகன்லால் சொல்வது மாதிரி ஒரு வசனம் வருகிறது உன்னை போல் ஒருவன் படத்தில்.

அதாவது பைனரி என்றாலே ஆம் அல்லது இல்லை என்கிற அர்த்தம் வருகிற மாதிரி.

வசனங்களில் விஞ்ஞானத்தை புகுத்தி புதுமை முயன்றிருப்பது பாராட்டத் தகுந்தது. ஆனால்,

என் அறிவுக்கு எட்டிய வரை இது தவறு என்றே தோன்றுகிறது.

ஏனென்றால், பைனரி என்பதன் பொதுப்படையான அர்த்தம் இரண்டு விஷயங்களால் ஆனது என்பதே. அவை ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பைனரி ந்யூமரிக் சிஸ்டம் என்பது இரண்டின் பவர்களாக சீரோவையும், ஒன்றையும் பயன்படுத்தி கிடைக்கும் பல்வேறு எண்களை உபயோகிக்கிற சிஸ்டம். இதில் ஒன்றிலிருந்து அனந்தம் வரை எந்த மதிப்பையும் குறியிட்டுக் காட்டலாம்.

ஆகவே பைனரி என்றாலே சீரோ அல்லது ஒன்று என்று பொருளல்ல. சீரோவையும் ஒன்றையும் பயன்படுத்திப் பல்வேறு மதிப்புக்கள் என்று பொருள்.

ஒரு வேளை டிஜிட்டல் என்று சொல்ல நினைத்து இப்படிச் சொல்லி விட்டார்களோ என்று யோசித்தேன்.

ஏனெனில் டிஜிட்டல் முறை தொடர்ச்சியில்லாத அதாவது discrete மதிப்புகளை பயன் படுத்துகிறது. இது, இதை விட்டால் இது. இடையே ஏதுமில்லை என்கிற மாதிரி. ஆனால் இதிலும் இரண்டே மதிப்புக்கள் அல்ல. நிறைய இருக்கலாம். ஒன்றிலிருந்து ஐந்து வரை வேகம் குறித்துள்ள மின்விசிறி ரெகுலேடர் டிஜிட்டல் சுவிட்ச்தான்.

இது குறித்த விமர்சனங்கள் நம் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

Advertisements

26 comments

 1. ‘பௌனரியில் சொல்லு’ என்பதன் மூலம் அவர் என்ன கேட்கிறார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா ? ஆமென்றால் ,அதற்கு இவ்வளவு ஏன் ஆராய்ச்சி?

  ஏதோ சினிமாவில் வரும் அத்தனை வார்த்தைகளும் ஆராய்ந்து தான் பயன்படுத்தப்படுவது போல ..

  ‘பைனரி’ சொல்லுக்கு அறிவியல் அர்த்தம் என்னவாகவும் இருக்கட்டும் ..ஆனால் காவல் துறையில் உண்டு ,இல்லை என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே கேள்வி .. அப்படி யாரும் உபயோகப்படுத்துவதில்லை என்றால் வசனகர்த்தாவை குறை சொல்லலாம்.

  1. ஜோ : பொதுவாக காவல்துறையினர் இவ்விதம் பேசுவதில்லை என்றே நினைக்கிறேன். அந்தக் குறிப்பிட்ட அதிகாரி வித்யாசமாகச் சிந்திப்பவர் என்பதைக் காட்டவே அந்த வசனம்.

 2. சீரியஸாக : மோகன்லால் கமலின் விஞ்ஞான அறிவை சோதிக்கும் நோக்கத்தில் இப்படி கேட்டிருக்கலாம். ஒரு வேளை கமல் தடுமாறியிருந்தால் ,இவன் உம்மனாக்கண்டிக்கு லுல்லுலாய் பண்றான்னு நினைச்சுருக்கலாம்.

  மிக மிக சீரியஸாக : இடது வலது பேதம் பார்க்காமல் இரண்டு பக்கம தாடி வளர்த்து , பெளத்தானாகவோ ,கிறிஸ்டியனா இருக்கும் கூடாது என்று secure(larism)ராக வசனம் பேசினாலும் ஜெயின் சமூகத்தை விட்ட நு.க.பி.நி, உங்கள் கண்ணில் படாதது ஏனோ?

  மிக மிக சீரியஸாக : பொட்டிய பெரிசா ஆக்காம இருந்தா இப்படி தான் கமெண்டு வரும்.

 3. In critical theory, a binary opposition (also binary system) is a pair of theoretical opposites… Thinking in terms of Binary(also known as Binary Thinking) refers to polar opposites, often ignoring the middle ground.

  Communication is commonly defined as exchange of thoughts.

  So, in this context what Mohanlal says does make sense 🙂

 4. உன்னைப் போல் ஒருவன் படம் “a wednesday” என்கிற இந்தி படத்தைத் தழுவி
  எடுக்கப்பட்டது என்றோ அல்லது மூலக்கதையை எழுதியது யார் என்றோ கமல் படத்தில் எங்கேயும் காட்டவில்லையே – கவனித்தீர்களா ?
  சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் இருப்பவர்கள் எத்தனை பேருக்கு இது ரீமேக் படம் என்று தெரியும் ?
  ஒரிஜினல் மூளைக்கு போய்ச் சேர வேண்டிய பாராட்டுக்களையும் தானே பெற கமல் நினைப்பது நேர்மையா ?

 5. They speak about decision making. Decision making requires an input and an output. When input is a question which may be a set of 1s and 0s (which is again binary), the output also can be a binary number that is any digits long.

  Terminal nodes are 1 and 0, not the decision nodes which are variables and depend on conditions. So As mentioned in the TOPIC, binary ஆ பதில் சொல்லு makes no sense. His answer may very well be 0001001000110100. 🙂

  “Inverter maadhiri badhil sollu, NOT Gate maadhiri badhil sollu” – Only these Questions give you an output of just 1 or 0.
  (Or)
  (Yes or No) Flag set panna maadhiri badhil sollu would have made the right sense..but padu mokkai aa irundhirukkum

 6. @Arun

  “According to a new study, Binary system were also among the first star of the universe” என்று நாசாவில் சில நாட்களுக்கு முன்னால் கண்டுபிடிதிர்கார்களாம் …

  இதற்கான அர்த்தம் என்னவென்றால் –

  The universe’s first stars were formed not only individually, but sometimes also as binary (dwarf and normal) ones.

  “Binary” இங்கு உபயோகிகர்துனால அது கமல், மோகன்லால் போன்ற பிரபல நட்சத்திரங்களுக்கு பொருந்தும். அதை விடுங்க 🙂

  இப்போ என் கேள்வி — நீங்க சொல்ற பைனரியா stars(found in sky) உருவாக முடியுமா ???

 7. வைரஸை பைனாக்குலர் வைச்சி பாக்குற ஆளுக (தசாவதாரம்) கிட்ட இப்படியெல்லாம் கேட்ட எப்பூடி?

  பிகு; வைரஸை எந்த சூப்பர் மைக்ராஸ்கோப் வைத்தும் கண்களால் நேரடியாக பாக்க இயலாது.

 8. i cant say about binary. i would go with jawahar.
  but
  //வைரஸை பைனாக்குலர் வைச்சி பாக்குற ஆளுக (தசாவதாரம்)//@ நந்தவனத்தான்
  i dont remember that dasa claims virus could be seen by binoculars or microscope.
  i faintly remember viruses can be seen by electron microscope.
  viruses are now popularly propogated not in animals but in cell lines. and (binocular model) microscopes used to observe the status.
  ஆனால்
  தசாவதாரத்ல
  இதுவல்லாது பல technical error
  உண்டு.

 9. i faintly remember viruses can be seen by electron microscope.//

  நான் சொன்னதை நல்ல கவனியும் ஐயா…
  //கண்களால் நேரடியாக பாக்க இயலாது்//

  ஒளியின் அலைநீளம் (wavelenth) வைரஸின் சைஸை விட சின்னது. அதனால்தான் எலக்ரான் மைக்ராஸ்கோப் . வைரஸை தாண்டி வரும் எலக்ரான்களை போட்டோகிராபிக் ஷீட்/மானிட்டரில் பிடித்துதான் பார்க்கலாம் . எலக்ரான்களை நேரடியாக பார்க்கும் பவர் நம் கண்ணுக்கு இல்லை.

  //i dont remember that dasa claims virus could be seen by binoculars or microscope.//

  microscope -ல் பொருட்களை அருகில் வைத்துதான் பார்க்க இயலும். binoculars தூரமாய் இருந்து.

  தசாவதாரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பார்கள்!

 10. நந்தவனத்தான் you have your point valid –
  கண்களால் “நேரடியாக” பாக்க இயலாது்.

  However, it is not due to “ஒளியின் அலைநீளம் (wavelenth) வைரஸின் சைஸை விட சின்னது. அதனால்தான் எலக்ரான் மைக்ராஸ்கோப் .” – as you have claimed.

  if your claim is true then, you cant see yourself “நேரடியாக” . as the wavelength of visible light is ( 400 – 700 nanometers ) smaller than your size (you can pretty well calculate your size in nanometers, if needed).

  Most studied viruses range from 10-300 nm in size. And We depend on electron microscopes to view viruses, becoz the limit of resolution of light microscope is only about 300 nm.

  If you have a valid point you may continue. I welcome fascinating discussions.
  thanks jawahar for permitting some interesting discussions.
  .

  1. ஆஹா… சௌந்தர், நந்தவனத்தான், இரண்டு அறிவியலாளர்களின் ஆரோக்யமான விவாதத்துக்கு நான் மேடையாக அமைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் ஆரோக்யமான விவாதம் எனக்கும், நம் வாசகர்களுக்கும் நல்ல செய்திகளைத் தருகிறது. முக்கியமாக, விவாதங்களில் உணர்வு கலக்கக் கூடாது என்கிற செய்தியை நீங்கள் இருவரும் நிரூபித்து வருகிறீர்கள்.

   ஹாட்ஸ் ஆப் டு போத் ஆப் யு!!

  1. ragha,சாப்ட்வேர் எஞ்சினியர்ங்கிறதினாலே பிழைன்னு சொல்றீங்களா, அவருக்கு விஷயம் தெரிஞ்சிதான் எழுதியிருப்பார் கவலையை விடுன்னு சொல்றீங்களா?

 11. அதாவது ஆம்,இல்லை என்று சொல்லாமல் , ஆஅமாந்தான்…..ஆனா…என்று இழுத்து பதில் சொல்றோம் இல்லையா, அன்த மாதிரி இல்லாமல் ‘உண்டு, இல்லைன்னு சொல்’ என்பதைதான் பைனரியா பதில் சொல்லுன்னு……….இதுக்கு போயி இந்த இழுவை யா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s