அஹிம்சை என்றால் என்ன?

காந்தியிடம் போற்றத் தகுந்த குணங்கள் எதையாவது பார்க்கிறீர்களா?

என்று கோபால் கோட்சேயிடம் (காந்தி கொலை வழக்கிற்காக பல்லாண்டுகள் சிறையில் இருந்து வெளி வந்தவர். நாதுராம் கோட்சேயின் சகோதரர்) டைம் பத்திரிகை நிருபர் கேட்ட போது, அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் :

ஒன்று மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை தான் காட்டுகிற வழியில் போக வைத்தது. மற்றொன்று சிறைச்சாலை மேல் மக்களுக்கிருந்த அச்சத்தைப் போக்கியது.

கொலை வெறி கொண்டவராலேயே இரண்டு நல்ல விஷயங்களைப் பார்க்க முடிகிறது என்றால், இதை விட ஒரு மனிதரின் சிறப்புக்கு வேறு சான்று தேவையில்லை.

காந்தியின் கொள்கைகள் எல்லாமே இந்த நாட்டின் விடுதலையை நோக்கமாகக் கொண்டவை என்பதால், அவற்றை விமரிசிக்கிற துணிவு யாருக்கும் இருந்ததில்லை. ஒரு வேளை காந்தி இந்தத் தலைமுறை மனிதராக இருந்தால், மீடியா இசகு பிசகாகக் கேள்வி கேட்டு அவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துமோ என்னவோ…

எனக்கு அஹிம்சை பற்றி ஒரு நிரடல் உண்டு.

என்னை ஒருத்தன் அடிக்கும் போது பொறுத்துக் கொண்டால் அது அஹிம்சை. அவனே உங்களை அடிக்கும் போது பொறுத்துக் கொள்ளச் சொல்லி போதிப்பது ஹிம்சை இல்லையோ?

என்னுடைய, மேற்சொன்ன வாதம் தப்பு என்று எனக்குப் புரிகிற மாதிரி யாராவது சொன்னால் சந்தோஷப் படுவேன்.

Advertisements

15 comments

 1. //என்னுடைய, மேற்சொன்ன வாதம் தப்பு என்று எனக்குப் புரிகிற மாதிரி யாராவது சொன்னால் சந்தோஷப் படுவேன்.//

  தப்புத் தப்பா சொல்லிகொடுக்க நமக்குத் தெரியாதுங்க.

  அதனால், பின்னூட்டத்த போட்டு ஆரம்பிச்சுவைக்கிறேன் :)))

 2. ஒரு தலைவனுக்கு அழகு “Practice what you preach” அதைத்தான் தன் வாழ்நாளில் கடைபிடித்தவர் காந்தி. ஹமுராபி சட்டம் இருந்த காலகட்டத்தில் அஹிம்சை என்ற “ஆயுதத்தை” கையில் எடுத்தவர் அவர். இயேசு கூட “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்றார்… அவர் போதனைகளை யாரிடமும் திணிக்கவில்லை. மாறாக, விரும்பி ஏற்று கொண்டவர்கள் அவர் வழி நடந்தார்கள்.

  அப்டி பார்த்தா காந்தி கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை அது மாதிரி நெறைய நல்ல விஷயங்களையும் மக்களுக்கு எடுத்து உரைத்தார். யார் தான் கடை பிடிக்கறாங்க??? மதுபான கடையே “காந்தி மதுபான கடை” என்று நெறைய இடத்தில் பார்த்து இருக்கோம் 🙂

  1. அபர்ணாஜி, அதாவது, அஹிம்சையை காந்தி யாருக்கும் போதிக்கவில்லை, மக்கள் தாமாகவே ஏற்றுக் கொண்டார்கள் என்கிறீர்கள். சரியா? தம் கொள்கை மற்றவர்களை ஹிம்சைக்கு உள்ளாக்குவதை காந்தி எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்?

 3. Rightly said Aparna. Whatever a man brays, who would listen to him unless it appeals to the other man’s emotions? This is not a forced induction, rather it is a live-by- example.
  As far your reply Mr. Jawahar, as we very well know Every action has a consequence, short term or long term. If we drink too much alcohol or smoke too much, we feel good shortly but we are bound to get a liver failure or a Cancer or atleast a coughing fit later.
  Everyman looks only for an immediate relief or gratification. No one dreams about a long term gratification. Gandhiji aimed at long term gratification. If they follow non-violence, they are bound to get freedom though they are getting hit. தொலை நோக்கு பார்வை. அது இம்சை அல்ல, தியானம். கசப்பு மருந்து

 4. ஜவகார் சார், அப்படி பார்த்தா நீங்க பண்றது உங்க அப்பா, அம்மா , நண்பர்கள், வாத்தியார், சமுதாயம் சொல்லி கொடுத்தது தான். Whatever the Society has indoctrinated/Conditioned into you. யார் சொன்னா என்ன ? மதங்கள் என்றால் என்ன? இயேசு அவர்கள் சொன்ன சக்தி வாய்ந்த போதனைகள் ஒரு மதத்தையே உண்டாக்கவில்லையா?
  காந்தியும் கடவுளாக்கப் பட்டிருப்பார் “ஹே ராம்” என்று அவர் சொல்லி இருக்கா விட்டால்.
  எனென்றால் அவர் வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. He was the Common man’s Socialism, and Every man’s Idealism.
  அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்றும் சிலர் நடந்து கொள்கின்றனர். அவருக்கு அது தெரிந்திருக்குமா? அவர் காட்டியது பாதை. நடப்பதும் நடக்காததும் அவரவர் Discretion.

  1. அருண்ஜி, நம்முடைய விவாதப் பொருள் அஹிம்சையை நான் புரிந்து கொண்டிருப்பது சரியா என்பதே. காந்தி உயர்ந்தவர் என்பதிலோ, அவருக்கு போதிக்கிற தகுதி உண்டா என்பதிலோ எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

 5. உங்களுக்கு புரியற மாதிரியே வாதம் பண்றேன். 🙂
  //என்னை ஒருத்தன் அடிக்கும் போது பொறுத்துக் கொண்டால் அது அஹிம்சை. அவனே உங்களை அடிக்கும் போது பொறுத்துக் கொள்ளச் சொல்லி போதிப்பது ஹிம்சை இல்லையோ?//
  ஒருவர் கூறும் ஒரு வாக்கியத்தை புரிந்து நமக்கு கொள்ள இரண்டு விடையங்கள் தேவை.
  கூறுபவர் மேல் துளி அளவு மரியாதை, அவர் கூறும் கருத்தில் நமக்கு ஏற்கனவே தெரிந்து, நாம் மதிக்கும் கருத்தோடு ஒற்றுமை.

  மருத்துவர் நமக்கு கசப்பு மருந்து கொடுத்தால் நீ குடிச்சா தான் குடிப்பேன் ன்னு மல்லுக்கு நிக்க முடியுமா?

  மரியாதையுடனும், பக்தியுடனும் காந்தி கொடுத்த Advice படி நடந்து கொண்டு சுதந்திரம் வாங்கியது தான் நம்மவர்களுக்கு வெற்றி. அதனால் மருத்துவர் கசப்பு மருந்து கொடுத்தது சரியா என்ற வாதமே தப்பு.

  சுமாரா புரியிதா இல்லை ஒத்துக்கொள்ள மனசு ஒத்து கொள்ள வில்லையா?

  1. நல்லாப் புரியுது. ஆனா இன்னும் என் கேள்விக்கு பதில் வரவில்லை. அஹிம்சை, தன்னிலையில் மட்டுமே அஹிம்சை. படற்கையில் அது ஹிம்சையாக மாறிவிடுகிறது என்பதே நான் சொன்னது. அது நல்லதா கெட்டதா, மருந்தா இல்லையா தரலாமா கூடாதா என்றெல்லாம் இல்லை கேள்வி.

 6. காந்திட்ட பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தி, அதுக்காக தன்னை வருத்தி கொள்ளவும் துணிந்தவர், அடுத்தவங்களையும் ரொம்பவே வருத்திருக்கார். சின்ன குழந்தைக்கு எதாவது வாங்கி தரலைன்னா நான் சாப்பிட மாட்டேனு அடம் பிடிச்சு சாதிக்குமே, கிட்ட தட்ட அதே மாதிரி. கோட்சே சொன்ன மாதிரி , அவருகிட்ட பிடிச்ச விஷயம் , அவ்வளவு பேரையும் தன் பக்கம் இழுத்தது. ( ஜவஹரையே இழுத்துடாரே!! லால சொன்னேன் ).

  இந்தியா விடுதலை அடைந்தது மகாத்மா காந்தியினால் என்று கூறினால் அது நேதாஜி, பகத் சிங் போன்றோரின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது போன்றதுனு கோட்சே சுயசரிதைல ஒரு வரி இருக்கும். உண்மை தான?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s