நீங்கள் பொஸ்ஸெஸ்ஸிவா?

7 Habits of highly Effective People புத்தகம் வாசித்த போது,

If you are possessive about something, you don’t actually possess it-என்கிற அர்த்தத்தில் Stephen Covey எழுதியிருக்கும் ஒரு அத்தியாயம் என்னைக் குழப்பியது. எனக்கு பதிலுக்கு யாரையாவது குழப்பும் ஆசை ரொம்ப நாளாகவே இருக்கிறது. எனக்குக் கிடைத்தது நீங்கள்தான். தயவு செய்து குழம்புங்கள்.

உலகத்தில் நடக்கிற எந்த நிகழ்வுமே, நேரடியாக நிகழ்வதில்லை.

அவை நிகழுமுன், சில நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கின்றன. அதை அறியாமல் நேரடியாக நிகழ்த்த முற்படுகிற போது, ஏமாற்றம், வருத்தம், கோபம், விரக்தி எல்லாம் ஏற்படுகின்றன. (பேராசிரியர் அறிவொளி பேசுவது போல இருக்கிறதா?) இதை விளக்குவதற்காக Stephen Covey எழுதியிருக்கும் உதாரணத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

உங்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள். உறவினர்களையும், அண்டை வீட்டுக் காரர்களையும் அழைத்திருக்கிறீர்கள். குழந்தைக்கு ஏகப்பட்ட அன்பளிப்புகள். பொம்மை, இனிப்புகள், ஆடைகள் இத்யாதி என்று.

இப்போது வேறொரு வீட்டுக் குழந்தை பரிசாக வந்த ஒரு பொம்மையை எடுக்கிறது. உங்கள் குழந்தை கவுண்டமணி செந்திலை உதைப்பது போல ஒரு உதை விட்டு அந்தக் குழந்தையை வீழ்த்தி விட்டு பொம்மையைப் பிடுங்கிக் கொள்கிறது. அந்தக் குழந்தை பஞ்சாயத்து யூனியன் சங்கு மாதிரி அலற ஆரம்பிக்கிறது. திரும்பவும் பிடுங்குகிறது. இப்போது உங்கள் குழந்தை சூப்பர் சானிக் ஜெட் மாதிரி அலறுகிறது.

“ரெண்டு பெரும் சண்டை போடாம விளையாடுங்கப்பா” என்கிறீர்கள்.

“முடியாது போ. என்னுது” என்கிறது உங்கள் குழந்தை.

உங்களுக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது.

“உன்னுதுதான், விளையாடிட்டு குடுத்துடும். குடும்மா”

“முடியாது”

“உனக்கு எக்லெர்ஸ் வாங்கித் தரேன், குடு”

“எக்லெர்ஸ் வேணாம்”

அத்தனை ஜனங்களுக்கு முன்னால் இப்போது ரொம்ப அவமானமாக உணர்கிறீர்கள். கிட்டே போய் பல்லைக் கடித்துக் கொண்டு,

“குடுக்கல்லைன்னா தொடைலே நிமிண்டிடுவேன்” என்கிறீர்கள்.

திரும்ப சூப்பர் சானிக் விமானம் டேக் ஆப்.

இதை எத்தனை நேரம் தொடர்ந்தாலும் உங்களால் ஜெயிக்க முடியாது. ஏனென்றால் குழந்தை இன்னும் மூன்றாவது ஸ்டேஜே வரவில்லை. நீங்கள் நான்காவதை எதிர்பார்த்து அதை டார்ச்சர் செய்கிறீர்கள்.

Receive
Accept
possess
Share

என்பவை அந்த நிலைகள்.

பல விஷயங்கள் இரண்டாம் நிலையிலேயே அடிபட்டுப் போய் விடும். குழந்தைக்குப் பிடிக்காத எதையாவது கொடுத்துப் பாருங்கள். விருட்டென்று வாழைப்பழத்தோல் மாதிரி விசிறி அடித்து விடும்.

குழந்தை இன்னும் possess செய்யவில்லை என்கிறார்  Stephen Covey . possess செய்த பின் share செய்யும் என்கிறார்.

கொஞ்சம் கஷ்டப்பட்டு இதைப் புரிந்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்கப்புறம் ஒரு கேள்வி வைத்திருக்கிறேன்.

கணவனை இன்னொரு பெண்ணோடு பகிர்ந்து கொள்ள சம்மதிக்காத பெண்கள் தங்கள் கணவர்களை possess செய்யவில்லையா? அல்லது vice versa.

Stephen Covey சொன்னது எனக்குப் புரியவில்லையா?

Advertisements

11 comments

  1. //கணவனை இன்னொரு பெண்ணோடு பகிர்ந்து கொள்ள சம்மதிக்காத பெண்கள் தங்கள் கணவர்களை possess செய்யவில்லையா? அல்லது vice versa.
    //

    அவ்வளவு broadmind எந்த பொண்ணூகிட்ட இருக்கு

  2. தப்ப நினைக்காதிங்க

    அது என்ன மனைவி மட்டும் விட்டுக்குடுகனும்.இதே மனைவிய விட்டு குடுக்க யோசிக்க முடியுதா. மத்தி யோசிச்ச பிரச்சினைதான்

    1. சரியாப் படிங்க நான் ரெண்டு பாசிபிளிட்டியையுமே சொல்லியிருக்கேன். அப்படி பண்ண முடியாதவங்க possess பண்ணல்லையா ன்னு கேட்கிறேன்!

  3. //அவ்வளவு broadmind எந்த பொண்ணூகிட்ட இருக்கு//
    Vice versa-வை பார்க்கலையா? அவ்வளவு broadmind ஆண் கிட்ட மட்டும் இருக்குமா?

    சமூகம் கட்டுக்கோப்புடன் வளர இந்த இடத்தில் ஆணும் சரி பெண்ணும் சரி ஷேர் செய்யலாகாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  4. ஓவரா போசெஸ் பன்றதாலதான், நாலாவது ஸ்டேஜ் ஒத்துக்கறதில்லை. கண்ணகியும் நளாயினியும் போசெஸ் பண்ணினவங்களா? accept பண்ணி possess பண்ணின பிறகு share பண்ணனும்னா ??? physical possess வேற, psychological possess வேற.

  5. neenga solliyirukura 4 stages-um material thingsuku mattumdhaan othupogumnu thonudhu….not for the relationship….even in relationship possessiveness-e insecuredness-aaladhaan varudhu…..material thingslayum real sharing eppa varumna oru saturation point vandhapuramdhaan….mathathellaam summa veli veshamdhaan…..
    This is my view…Geetha Ramkumar

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s