ஆகாசவாணியின் சாகாத நினைவுகள்

என் ஆரம்பப் பள்ளி நாட்களில் ரேடியோவுக்கு மிஞ்சின என்டர்டைன்மென்ட் எதுவும் கிடையாது.

அப்போதெல்லாம் வால்வு ரேடியோக்கள்தான். இரண்டடி நீளமும், ஒன்றரை அடி உயரமும் மர கேபிநெட்டுமாக அப்பர் மிடில் கிளாஸ் வீடுகளில் கம்பீரமாக வீற்றிருக்கும். மஞ்சள் துணியால் உறை போட்டிருப்பார்கள். ஆன் செய்தால் வால்வு சூடாகி பாட்டு வருவதற்குள் மூச்சா போய் வந்து விடலாம். முழு வால்யூம் வைத்தால் அடுத்த வீட்டுத் திண்ணையில் தூங்கும் பாட்டிகள் அதிர்வில் நகர்ந்து சாக்கடையில் விழும் அபாயம் உண்டு.

பெரும்பாலான வீடுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அப்துல் ஹமீது அல்லது கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியில் மதியம் செய்தி வாசிக்கிற ஒருத்தர் பெயர் ‘ராஜகுரு சேனாதிபதி கனக ரத்தினம்’.

அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை ஒலிச்சித்திரம் வைப்பார்கள். அதைக் கேட்க தெருவே வீட்டில் கூடி விடும். மறக்க முடியுமா ஒலிச்சித்திரம் கேட்டு விக்கி விக்கி அழுவார்கள். சரஸ்வதி சபதம் ஒலிச்சித்திரம் கேட்டு பக்தியில் மெய் சிலிர்ப்பார்கள்.

திருச்சி வானொலியில் சூரிய காந்தி கதம்ப நிகழ்ச்சியில் டி.வி.கிருஷ்ணமூர்த்தியின் நாடகங்கள் அம்மாவின் பேவரிட்.

“கல்யாணத்துக்கு எனக்கென்னம்மா அவசரம்?” என்று வசனம் பேசும் டி.எம்.கமலாவின் குரலுக்கு ஈசியாக நாற்பது வயசிருக்கும்.

பாப்பா மலரில் வரும் விடுகதைகளுக்கு பதில் எழுதிப்போட்டு விட்டு சரியான விடை எழுதியவர்கள் பெயர் வாசிக்கப்படும் போது ரேடியோவுக்கு அருகில் போய் நின்று கொள்வேன். நூறு பெயர்களுக்கு மத்தியில் ‘நாகப்பட்டினம் கே.ஜி.ஜவஹர்’ என்று இரண்டு வினாடிகளுக்கு வருவது தேசிய விருது வாங்கின சந்தோஷத்தைத் தரும்.

இவை என்று இல்லை.

விவசாயிகளுக்கான நிகழ்ச்சியில் கோழி வளர்ப்பு, கிராம சமுதாயத்தில் லாவணியில் எரிந்த கட்சி-எரியாத கட்சி என்று எல்லாவற்றையும் கேட்போம்.

செய்தி வாசிக்கும் விஜயம் இன் குரலுக்கும் அறிவிப்பாளர் ஜெயங்கொண்டானின் குரலுக்கும் நாங்கள் ரசிகர்கள். பிற்காலத்தில் திரைப்படங்களில் நடித்த பீலி சிவமும், எ.கே.வீராச்சாமியும்(அய்யா எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும்) எங்களுக்கு ஆகாசவாணியிலேயே பரிச்சயம்.

அகில பாரத இசை நிகழ்ச்சியில் யார் என்ன சங்கீதம் பாடினாலும் வைத்து விட்டு அதை சூப்பர் இம்போஸ் செய்கிற வால்யூமில் குறட்டை விட்டு அப்பா தூங்குவார்.

“என்ன இழவு சங்கீதம் இது? சில சமயம் குளிர்லே நடுங்கறாப்பல இருக்கு, சில சமயம் கல்லடி பட்ட நாய் மாதிரி இருக்கு, சில சமயம் வாயுத் தொல்லைலே ஏப்பம் வர்ற மாதிரி இருக்கு இதை எப்படிடா உங்கப்பா கேக்கறார்…” என்று அம்மா வியப்பது நினைவில் இருக்கிறது.

விவித பாரதி ஆரம்பித்ததும் வைத்த முதல் விளம்பரம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. லிப்டன் லாவொஜி தேயிலை!

தொலைக்காட்சி வந்த பிறகும் ரேடியோவில் நான் ரசித்துக் கேட்ட நிகழ்ச்சி தென்கச்சியின் இன்று ஒரு தகவல்.

Advertisements

20 comments

 1. 1951 – ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் வானொலிப் பெட்டி வாங்கினார்கள். நீங்கள் சொன்ன மாதிரிதான். (//அப்போதெல்லாம் வால்வு ரேடியோக்கள்தான். இரண்டடி நீளமும், ஒன்றரை அடி உயரமும் மர கேபிநெட்டுமாக அப்பர் மிடில் கிளாஸ் வீடுகளில் கம்பீரமாக வீற்றிருக்கும்.//)

  ஏறத்தாழ இரண்டு செங்கல் அளவிருக்கும் மின்கலம் (பாட்டரி).

  மலாயா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை அந்த வானொலிப் பெட்டியில் அப்போது நான் கேட்ட அனுபவத்தை உங்கள் கட்டுரையில் மீண்டும் பார்க்கிறேன்.

  என் பழைய நினைவுகளைக் கட்டுரையில் கொண்டுவந்து விட்டீர்கள். எழுத்து மிக நன்று.

 2. வானொலி அண்ணா, சுகி சுப்ரமணியன், திரு.பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரையும் விட்டு விட்டீர்களே!! பதிவின் தாக்கத்திலிருந்து மீள சில நாட்களாகும் என்று நினைக்கிறேன். அருமை.

 3. விவித பாரதியில் முதல் தமிழ் விளம்பரம் – அமுல் மில்க் பவுடர் என்று ஞாபகம் – “அடப் பாவி முந்தி பாலிலே நீர் கலந்தது மாதிரி இருக்கும் – இப்போ தண்ணியிலே பால் கலந்தது மாதிரி இருக்குதே!” – “எதுக்கு கமலா தினந்தோறும் இந்த பிரச்னை – பேசாம அமுல் மில்க் பவுடர் வாங்கிடேன் – அது இருந்தால் வீட்டில் ஒரு பால் கடையே இருப்பது மாதிரி …..”

 4. எனக்கு சென்னை வானொலி நிலையத்தின் காலைமலரும், சிவகாமியின் சபதம் நாடகமும் ஃபேவரிட். அதிலும் நாகனந்தி அடிகளின் குரல்… பாம்பு தான்…

 5. சென்னையின் மரீனா பீச் “ரேடியோ” பீச் என்று அழைக்கப்பட்டது. பெற்றோர்கள் கடலை வெறித்தபடி, கடலை கொறித்தபடி, கடலை போட்டபடி, வானொலி கேட்க, சிறுவர்கள் நாங்கள் மண்ணில் ஒரு பொருளை ஒளிய வைத்து, கைகளால் பொத்தி கண்டுபிடிக்கும் விளையாட்டில் சுவாரஸ்யமாக ஈடு பட்டிருந்தது – மலரும் நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள்.

 6. “இன்று ஒரு தகவல்” புகழ் மறைந்த மாமனிதர் திரு தென்கச்சி சுவாமிநாதன் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் மறைவு ஒரு பேரிழப்பு தான்.

 7. ரேடியோ சிலோனை ரெகுலாராக பாவித்ததற்காக, உங்களுக்கு ப்ரீச்செம் லிமிடெட் ஒரு கொத்தல் ப்ரில்கிரீமை பரிசாக அனுப்பியிருப்பார்களே…?

  1. கருத்துக்களை வயதோடு தொடர்பு படுத்துவது எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் ஐ க்யூ என்று ஒன்று வந்தது. அறிவின் வயதுக்கும் நிஜ வயதுக்கும் இருக்கும் விகிதாச்சாரமே ஐ க்யூ.

 8. ஐயா, நான் திரு ர அய்யாசாமி (வானொலி அண்ணா) அவர்கள், 1960 களில் முத்துக்குவியல், பாப்பா மலர் போன்ற குழந்தைகளுக்கான நிகழ்சிகளில் எழுதிய, பால ராமாயணம் பாடல்கள் (ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே – என ஆரம்பிக்கும்) மற்றும் பிற பாடல் தொகுப்புகள் பனை மரமே பனை மரமே ஏன் பிறந்தாய் பனை மரமே, என்னும் கருத்து நிறைந்த பாட்டு – முதலியவற்றை ஆடியோ தொகுப்பில் கேட்க விரும்புகிறேன். தயை கூர்ந்து உதவுங்கள்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s