தனக்குத் தானே ரிவர்ஸ் கியர்

ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒரு சமயம் நிருபர் ஒருவர்,

“காந்தியைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு ஜேகே சொன்ன பதில் கொஞ்சம் முரண்பாடானது.

“காந்தியைப் பற்றி எனக்கு ஏன் அபிப்பிராயம் இருக்க வேண்டும்? முட்டாள்கள்தான் பிறரைப் பற்றி அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். எனக்கு அவரைப் பற்றி எந்த அபிப்ராயமும் கிடையாது” என்பதே அவர் சொன்ன பதில்.

இதை முதன் முதலில் படிக்கிறவர்கள் ஜேகே ஒரு திமிர் பிடித்தவர் என்றோ, கிறுக்கு என்றோ, பரபரப்புக்காக முரண்பாடாகப் பேசுகிறவர் என்றோ பலவாறாக நினைக்கக் கூடும்.

‘ஒரு கிண்ணம் காலியாக இருக்கும் போதுதான் அதைப் பயன்படுத்த முடியும்’ என்றும் அவர் சொல்லியிருப்பதை அறிந்தவர்கள் இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒருத்தரைப் பற்றி அபிப்ராயம் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டோம் என்றால், அவரது சொற்களையும் செய்கைகளையும் அந்த அபிப்ராயத்தின் வழியே பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த அபிப்ராயம் என்பது ஒரு வடிகட்டி மாதிரி. அபிப்ராயத்துக்கு தொடர்பில்லாத விஷயங்களை நிராகரித்து விட்டு, தொடர்புள்ளவைகளைத் தேடித் தேடி எடுத்துக் கொள்ளும். தொடர்பில்லாதவைகளை தொடர்புப் படுத்திப் பார்க்கும்.

ஆக ஒருவரைப் பற்றி ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றால், அதுவாகவேதான் அவர் தெரிவார். அவரது நிஜப் பரிமாணம் நம் அபிப்ராயத்தை விட உயர்ததாகவோ, தாழ்ந்ததாகவோ, தொடர்பே இல்லாததாகவோ இருந்தாலும் நமக்கு அது தெரிய வராது.

அதனால்தான் யாரைப் பற்றியும் அபிப்ராயம் இருக்கக் கூடாது என்று ஜேகே சொன்னார்.

ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம்.

ஜேகேயின் உண்மையான பரிமாணம் தெரியாதவர்கள் அவரது மேற்சொன்ன ஸ்டேட்மென்ட்டைப் படித்தால் அதன் நிஜ அர்த்தம் புரியுமோ? அது புரியவே ஜேகே பற்றிய ஒரு பர்செப்ஷன் தேவையிருக்கிறது!

அப்போ ஜேகே சொன்னது தப்பா?

15 comments

 1. 🙂

  நல்ல லாக்!

  ஜேகேவைப் பத்தி தெரியாதவங்களுக்கு அவர் காந்தியைப் பத்தி என்ன சொன்னார்ன்னு கவலைப்படப் போறதில்லை.

  —————-

  அபிப்ராய பேதம் அப்படிங்கறதைப் பத்தி எழுதுங்க…

  1. என்ன சுவாமி, ரத்தினச் சுருக்கமான இந்த பின்னூட்டத்துக்கு அர்த்தம் புரியலையே! ஓஹோ, அப்படியா சங்கதி, வெச்சிக்கறேன் உன்னைங்கிற மாதிரி இருக்கு!

 2. //ஜேகேயின் உண்மையான பரிமாணம் தெரியாதவர்கள் அவரது மேற்சொன்ன ஸ்டேட்மென்ட்டைப் படித்தால் அதன் நிஜ அர்த்தம் புரியுமோ?//

  அவரின் உண்மையான பரிமாணம் எனக்குத் தெரியாது. அவரைத் தெரிந்துகொள்ள நான் முயற்சி செய்ததில்லை. எனவே எனக்குத் தெரியாததற்கு நானே காரணம் ஆவேன்.

  //அது புரியவே ஜேகே பற்றிய ஒரு பர்செப்ஷன் தேவையிருக்கிறது!//

  சரி.

  //அப்போ ஜேகே சொன்னது தப்பா?//

  தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்வேன்.

 3. எனக்கு தெரிந்து ஜெ.கே.ஒரு தத்துவ ஞானி என்று சிலரால் வர்ணிக்கப்பட்டவர். ஆனால் அவருடைய தத்துவங்கள் எளிதில் புரியாத,புரிந்து கொள்ள முடியாத hi-fi ஆங்கிலத்தில் -இதுவரை யாரையும் சென்று சேர்ந்ததாக தெரியவில்லை. புரிந்தவர்கள் பின்பற்றுகிறார்களா என்றும் தெரியவில்லை. மேற்கோள்களுக்கு மட்டுமே பயன்படுகின்றன. சிந்தனை சிற்பி பற்றிய என் மனச்சிலை முழுமை அடையவில்லை.
  இவ்வாறு என்னுடைய கோப்பை பாதி நிரம்பி உள்ளது. அதை காலி பண்ணிவிட்டு மேற்கொண்டு நிரப்ப வேண்டும்.
  “விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளுடன் தான்” (நன்றி -மு.மேத்தா)

 4. //ஆக ஒருவரைப் பற்றி ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றால், அதுவாகவேதான் அவர் தெரிவார். அவரது நிஜப் பரிமாணம் நம் அபிப்ராயத்தை விட உயர்ததாகவோ, தாழ்ந்ததாகவோ, தொடர்பே இல்லாததாகவோ இருந்தாலும் நமக்கு அது தெரிய வராது.

  அதனால்தான் யாரைப் பற்றியும் அபிப்ராயம் இருக்கக் கூடாது என்று ஜேகே சொன்னார்//

  ஜெ.கே. சொல்வது நான்கு குருடர்கள் யானையை பார்த்தது போன்றது. அடிப்படையில் நாம் எல்லோரும் குருடர்கள், அல்லது குருடர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன். இதுவும் ஒரு விதத்தில், மற்றவர்களைப்பற்றி அவருடைய பெர்செப்ஷன் (அபிப்பிராயம் ) என கொள்ளலாமா?

 5. //“காந்தியைப் பற்றி எனக்கு ஏன் அபிப்பிராயம் இருக்க வேண்டும்? முட்டாள்கள்தான் பிறரைப் பற்றி அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். எனக்கு அவரைப் பற்றி எந்த அபிப்ராயமும் கிடையாது”//

  எனக்கு ஜேகே பற்றி தெரியாது.

  அதனால் இந்த பதிலை MGR, Sivaji, Nambiar, Kamal, Sathyaraj, delhi ganesh, vijayakumar
  என்று பலர் தொனியில் கற்பனை செய்தேன். எந்த தொனியில் கற்பனை செய்தாலும் பதிலில் “அவமதிக்கும்” தொனியே மிஞ்சி நின்றது.

  வாக்கியங்களை தனித்தனியே கவனித்தால்….என் கற்பனைக்கு வலு சேர்த்தது.

  //காந்தியைப் பற்றி எனக்கு ஏன் அபிப்பிராயம் இருக்க வேண்டும்? //
  பதிலில், எதிர் கேள்வி கேட்பது _ is a general indication of frustration, irritation, uneasiness???.
  E.g. “நான் ஏன் சாமி கும்பிடணும்?, நான் ஏன் புருஷனை மதிக்கணும்?”

  //முட்டாள்கள்தான் பிறரைப் பற்றி அபிப்பிராயம் வைத்திருப்பார்கள்.//
  நபர்களை குறிக்கும் நற்சொல்லற்ற‌ ஒன்றினை கொண்டு வாக்கியம் ஆரம்பிப்பது கேட்பவரை அதிகம் அவமதிக்கும்.
  E.g. “அசிங்கமா இருக்குன்னு தான் சொல்லுவேன்”, என்பதற்க்கும் “அழகா இருக்குன்னு சொல்ல முடியாது”, என்பதற்க்கும் கிடைக்கும் “தாக்கம்” (மனைவியிடமிருந்து) வேறு வேறு தானே.

  மேலும், பதிலில் புத்திசாலித்தனம் குறைவாகவே தோன்ற காரணம்,…
  //எனக்கு அவரைப் பற்றி எந்த அபிப்ராயமும் கிடையாது//
  அப்ப மத்தவங்கள பத்தி அபிப்பிராயம் உண்டெனில், தன் பதிலில் முன் சொன்ன வாக்கியத்தினால் தானும் முட்டாள்கள் பட்டியலில் இடம் பெறுவதை அறியாது, பதில் அளிப்பது.
  //முட்டாள்கள்தான் பிறரைப் பற்றி அபிப்பிராயம் வைத்திருப்பார்கள்.//
  மேலும், முட்டாள்களை பற்றி அபிப்பிராயம் கொண்டது.

  என்னை பொருத்த வரை,
  இந்த பதில் appears more of an outburst of “Don’t ask me to speak about people who are of no benefit to me or more popular than me and get out of here” attitude.
  மற்றபடி இதில் கருத்தை தேடி ஆன‌ந்திக்கும் மனம் ‍ is more of a slavery mind.

  Tailpiece:
  ஜேகே பதிலில் உள்ள மூன்று வாக்கியங்களில் உள்ள முதல் வார்த்தைகளை சேர்த்தால் என்ன வருது…?????

  ஐய்ஐய்யோ, என்ன இன்னைக்கு இப்படி கிளம்பிட்டேன்…..

  Sorry, Jawahar & visitors.

  //அது புரியவே ஜேகே பற்றிய ஒரு பர்செப்ஷன் தேவையிருக்கிறது!

  அப்போ ஜேகே சொன்னது தப்பா? //

  அருமையான finishing.

 6. As human beings we cannot avoid having perceptions as long as we understand that perceptions can change with time and should give way to better understandings when necessary and are not the kind of perceptions influenced by our own prejudices and judgment of a person’s character but rather based on their positive qualities. By the way, a cup cannot be empty all the time.

   1. ஒப்புக்கொள்கிறேன். கோப்பை நிறைந்திருக்கவும் வேண்டும் சில வேளைகளில் காலியாகவும் இருக்கவேண்டும். நிறைந்தே இருந்தால் கொன்ஸ்டிபேஷனுக்கு ஆளாக நேரிடும் 🙂 ‘பெர்செப்ஷன்’ எனும் ஆங்கில வார்த்தைக்கு குறிப்பான தமிழ் வார்த்தை அல்லது compound வார்த்தை உண்டா? நன்றி

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s