இந்துமதம் ஏன் விமர்சனத்துக்கு உள்ளாகிறது?

இந்து மதக் கொள்கைகளும், ஆன்மீகவாதிகளும் நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு விமர்சிப்பவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

தனக்கே தெளிவில்லாத பலர் போதிக்க வந்து விடுகிற அவலம் இந்து மதத்தில் இருக்கிறது. அவர்களைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிற மூடத்தனம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

ஒருத்தர் தன்னைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டால் நம்புகிறோம். அதை நம்ப சில செப்பிடு வித்தைகள் நமக்குப் போதுமானதாக இருக்கிறது. கையை ஒரு சுழற்றுச் சுழற்றி சங்கிலி வரவழைத்தாலோ, லிங்கத்தை வாந்தியாக எடுத்தாலோ அதைக் கண்டு மெய் சிலிர்த்து ஹர ஹர என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள நம்மிடையே ஆட்கள் இருக்கிறார்கள்.

அவர் கடவுளாக இருந்தால் இது மாதிரி அற்ப செயல்களைச் செய்து நம்மை நம்ப வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏன் வர வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை.

இன்னொரு ரகம் இருக்கிறார்கள்.

இது கொஞ்சம் படித்த ரகம். என்ன கேள்வி கேட்டாலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல் பேசுவது. பிரபலமானவர்களை அழைத்து ஷோ நடத்தி விளம்பரம் தேடிக் கொள்வது. நினைத்தால் தாடி, முண்டாசு, காவித் துணியோடும், நினைத்தால் ஜீன்ஸ், குர்தா போட்டுக் கொண்டு புல்லட் ஓட்டுவதுமாக மசாலா ஆன்மிகம் இவர்களுடையது. இவர்கள் யோகாவை பிராண்ட் எல்லாம் வைத்து விற்பவர்கள். நன்றாக மார்கெட்டிங் செய்யத் தெரிந்தவர்கள். ஜாதி விஷயத்தில் அரசியல்வாதிகள் போடும் எல்லா கபட வேஷமும் போடத் தெரிந்தவர்கள்.

இன்னொரு ரகம் பரிதாபமானது.

விவரம் தெரியாத வயசில் நிர்பந்தமாக துறவறம் தரப்பட்டவர்கள்.

விவரம் தெரிந்த போது தாங்கள் மனப்பூர்வமாகத் துறக்கவில்லை என்பதை உணர்ந்தவர்கள். அடையவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்து தெளிவை இழந்தவர்கள். அப்படித் தெளிவை இழந்ததில் ஆன்மீகத்துக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தவர்கள். பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசியவர்கள். அப்படிப் பேசியதால் ‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ என்று பழிக்கு ஆளானவர்கள்.

துறவறத்தை, விவரம் தெரிந்த பருவத்தில், தானே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே குருக்களாக விளங்க முடியும் என்பதை இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கப்புறம் கிரிமினல் ரகம் ஒன்று இருக்கிறது.

அதை நான் சொல்லத் தேவையில்லை. பெண்களுக்கு ஆன்மீகத்தில் இருக்கும் பற்றை எக்ஸ்ப்ளாயிட் செய்து தங்கள் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் இந்த ரகத்தினர் அவ்வப்போது போலீசில் சிக்கி வருகிறார்கள். இது ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் விரவி இருக்கிறது என்பது பத்திரிகைச் செய்திகள் பார்க்கிற போது தெரிகிறது.

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்.

தாங்கள் ஞானிகள் அல்ல முட்டாள்கள் என்பதை தாங்களே அறியாத சில வெகுளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் முட்டாள்தனத்தை தங்களால் இயன்ற அளவுக்கு அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்து மதத்தில் பல விஷயங்கள் வெறும் நம்பிக்கை அடிப்படையிலானவை.

வெறும் நம்பிக்கையாக இருப்பவைகளை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான வழிமுறைகளை சொல்லித்தர முடிந்தவரே உண்மையான குரு.

அந்த வழிகாட்டுதல் வெள்ளிக் கிழமை தோறும் கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் சகல சௌபாக்யங்களும் உண்டாகும் என்கிற ரீதியில் இல்லாமல், ராஜயோகாவில் இருக்கிற மாதிரி யோகாவின் எட்டு அங்கங்களுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் இருப்பது மாதிரி இருக்க வேண்டும்.

அதற்கு விவேகானந்தர் மறுபடி பிறக்க வேண்டும்

Advertisements

30 comments

 1. நீங்கள் சொல்பவை சமுதாயத்தின் நோய்கள்.

  `நோய்நாடி நோய்முதல் நாடி’ என்பது திருக்குறள்.

  நோய்களின் முதல் நாடி மெய்யாசிரியர் திருமூலர் கூறுகிறார்:

  குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
  குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
  குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
  குருடுங் குருடும் குழிவிழு மாறே.

  நோய்களுக்குக் காரணம் சமய அறிவின்மையே ஆகும்.

  நேரம் இருப்பின் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

  `இடுப்பொடிந்த கோழிக்கு உரல்குழியே கைலாசம்!’

  http://nanavuhal.wordpress.com/2009/09/15/samaya-arivu/

 2. எந்த மதத்துக்கும் இல்லாத சிறப்பு
  இந்து மதத்துக்கு உண்டு
  இந்து மதத்தை விமரிசிக்க விமரிசிக்க
  வளர்ந்துகொண்டு இருக்கிது, என்பது உண்மை.

 3. எல்லா மதத்திலும் இம்மாதிரியான ஃப்ராடு வேலைகளும் நடக்கும்!

  இஸ்லாமியர்கள் கூட எங்கள் மார்க்கத்தில் கயிறு கட்டுதலோ, மந்திரித்தலோ இல்லை என்கிறார்கள்!, ஆனால் இந்துகளே பள்ளிவாசல் போய் மந்திரித்து வருகிறார்கள்!

  கிருஸ்தவர்கள் கூத்தும் சொல்ல வேண்டியதில்லை!

  மதம் என்பது கேளிகூத்து தான்!,

  மதம் என்பது வெங்கட் சொல்வது போல் விமர்சிப்பதால் வளர்வதில்லை, வத வதவென்று பெத்து போடுவதால் வளருகிறது!

 4. மக்கள் “எதை தின்றால் பித்தம் தெளியும்” என்று அலைகிறார்கள். எளிதில் பணக்காரர்களாக, உடல் உழைப்பு இன்றி வாழ்க்கையில் உயர் நிலை அடைய; பிறரால் பெரிதும் மதிக்கப்பட; – இப்படி அலைவதால் தங்கள் எண்ண ஓட்டங்களுக்கு இணையாக யாரால் ஓரளவாவது ஒத்துப்போகிறதோ, அவர்களை மதத்தின் பெயாரால் நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.
  அர்த்தமுள்ள இந்து மதம் தான். ஆனால் அனர்தம்மாக்கப்படுகிறது.
  அனாவசிய சாஸ்திர சம்பிரதாயங்கள், கட்டுபாடுகள்,கடவுள் பெயரால் –
  புரியாத முரண்பாடுகள் சமய கோட்பாடுகளில்;
  அனாவசியமான “hero worship”

 5. நீங்க யார் யாரை சொல்லறீங்கனு விவரிக்கும் பொழுதே தெரியுது 🙂

  அவா எல்லாம் என்னோட பழக்கத்துல இருக்கா… 🙂 இருங்கோ சொல்லித்தறேன்.

  எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். இந்துமதம்னு ஒன்னு இருக்கா?

 6. வணக்கம்…
  //கையை ஒரு சுழற்றுச் சுழற்றி சங்கிலி வரவழைத்தாலோ, லிங்கத்தை வாந்தியாக எடுத்தாலோ//

  இது ஒரு ஏமாற்று வேலை என்பதை விளக்க you tube ல் நிறைய video உள்ளது…
  படித்த மேதாவிகளும் இதை நம்புகின்றனர் என்பது தான் என் வேதனை…

 7. கடையில் வெண்டைக்காய் வாங்கப்போனால் கூட, சொத்தை, முற்றலைத் தள்ளி விட்டு, இளசாகப் பொறுக்கத் தெரிந்துக் கொள்கிறோம் ! எப்படி ?

  வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆன்மிக விஷயங்களில் ஒரு தேடல் இருந்தாலன்றி தெளிவு பெற முடியாது. ந்மக்கு வேண்டியது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்வது அவசியம். அது தெரிந்த பிறகு
  அது எங்கு கிடைக்கும் – எப்படி கிடைக்கும் – யாரிடம் சென்றால் கிடைக்கும் என்று ஆராய வேண்டும். உண்மைக்கும் – போலிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ள சிறிது மெனக்கெட வேண்டும் –

  குறைந்த பட்சம் புரிந்துக் கொள்ள முயற்சியாவது செய்ய வேண்டும். பல்பொடி விற்பவர்களிடம் ஆன்மிகத்தைத் தேடிப்போனால் ஏமாற்றமே மிஞ்சும் !

  ஏமாற்றுபவர்களும், ஏமாளிகளும் எல்லா மதங்களிலும் இருக்கவே செய்கிறார்கள் !

  உண்மையான வேட்கையோடு தேடுபவர்களுக்கு சரியான வழி நிச்சயம் தென்படும்.

  தேடுங்கள் கொடுக்கப்படும் – தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற வாசகம் எல்லா மதத்திற்கும் பொருந்தும் !

  உண்மையில் எந்த மதமும், மத ஸ்தாபகர்களும் தீயதை போதிக்கவில்லை ! எல்லாரும் நல்ல வழியைக் காட்டவே அவரவர் முறையில் முயற்சித்தார்கள் !

  வழியைக் காட்ட இன்னொரு
  விவேகானந்தர் பிறந்து வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை !

  ஏற்கெனவே வந்த விவேகானந்தர், சிந்தித்த, கூறிய, அத்தனை கருத்துக்களும், விளக்கங்களும், எழுத்து வடிவில் நிரந்தரமாக உருப்பெற்று இருக்கின்றன. அவற்றைத் தேடிப் படிக்க சிறிது ஆர்வமும் முயற்சியும் தான் தேவை.

  விவேகானந்தரின் உரைகள் அனைத்தும் தமிழிலும் வந்திருக்கின்றன. பணம் செலவழித்து புத்தகம் வாங்கும் நிலையில் இல்லாதவர்கள் – அருகில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றால் நூலகங்களில் இலவசமாகவே படிக்கப் பெறலாம். அங்குள்ள துறவிகள் மிக மகிழ்ச்சியுடன் இதற்கு உதவுவார்கள் !

  இந்த கருத்துக்களைக் கூற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் ஜவகர் அவர்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் – GK

  http://gkpage.wordpress.com

  1. நன்றி ஜி.கே. சார், வழக்கப்படி, விளக்கமான, தெளிவான, சுவாரஸ்யமான, நிறைய தகவல்கள் அடங்கிய பின்னூட்டம். உங்கள் ஆதரவு தொடரட்டும்.

 8. ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கேள்வியை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்!……மிகுந்த அர்த்தம் மிக்க கேள்வியாகவே எனக்குப் படுகிறது!…

  1. எம்.ஜி.ஆர். சுவாமி ஓம்கார் சொன்னதில் அர்த்தம் இல்லை என்று நான் எப்போது சொன்னேன்? அதொண்ணும் எனக்குத் தெரியாதது இல்லை. இந்து மதம் ஒரு மதமே அல்ல, அது ஒரு வாழ்க்கை நெறி bla..bla.. என்று சொல்பவர்கள் நிறையப் பேர் உண்டு. அது எதுவாக இருந்தாலும் ஏன் விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதைத்தான் நாம் விவாதித்திருக்கிறோம்.

 9. ///இது கொஞ்சம் படித்த ரகம். என்ன கேள்வி கேட்டாலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல் பேசுவது. ///

  எனக்கும் இதே வருத்தம் அந்த நிகழ்ச்சியிலிருந்து.

  ஒரு வேளை எனக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லையோ என்று கூட நினைத்தது உண்டு.

  “அன்பே சிவம்”

 10. Why is Hindu religion subject to criticism?

  Criticism here implies only negative criticism.

  This is the overwhelming question posed by you.

  Your answer is that it is due to the distortion of the religion and exploitation of the gullibility of the people in the name of religion by fake gurus and superstitions disguised as belief.

  You have not at all taken sight of one type of critics who have nothing to do with the causes you have mentioned. They concentrate on the theology of the religion and how the theology is out of joints with the present world.

  Such critics of the theology are mostly from other religions who have their own personal axes to grind, namely to denigrate or malign the religion.

  However, there are critics who are different, who are just religious scholars or any scholars. We must read them. For e.g Amartya Sen has found logic in Arjuna’s arguments not in Krishna’s in Bhagwat Gita. According to him, Krishna’s arguments are unethical.

  There are critics – this class is stronger in number – who have found the social philosophy advocated by Hindu religion, completely out of joints with present times. For e.g the Varnashradharma. As you are well aware, this is one of the fundamental bases of the religion, without which Hindu religion does not exist in theory.

  Although this system is obsolete and is not practised, yet Hindu religious leaders insist that the system was and is good. Only because of its collapse, society has decayed, they affirm. The critics suspect that the insistence to keep the system valid is to encourage the Brahmins to live as before.

  This is just one e.g of those things in the religion which is subject to fair criticism.

  Lets not go to other religions. All of them were founded eons ago; and all of them have such irksome and disjointed things in their theology. They are also subject to criticism by such fair-minded scholars, for e.g. the principle of Jihad in Islam and the virgin birth of Jesus and his miracles etc.

  Hindu religion is always reformatory no doubt. But its core theology remains unchanged. All reformations are in the periphery only.

  Please address yourself to the fair criticisms of those scholars or people who have no axes to grind.

  Maybe, in another blog post.

 11. //லிங்கத்தை வாந்தியாக எடுத்தாலோ அதைக் கண்டு மெய் சிலிர்த்து ஹர ஹர என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள நம்மிடையே ஆட்கள் இருக்கிறார்கள்.//

  தானே வாந்தி எடுத்து லிங்கம் வந்தால் அவர் சாமி.

  அடுத்தவர்களை ரத்தவாந்தி எடுக்க வைத்தால் மந்திரவாதி

 12. எல்லா சமயத்திலும், பல ரூபங்களில் போலிகள் இருக்கத் தான் செய்வார்கள்.
  “இந்துமதம் ஏன் விமர்சனத்துக்கு உள்ளாகிறது?”

  1.”எவ்வளவு அடிச்சாலும், தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு” விமர்சனம் செய்கிறவர்களின் நினைப்பு.

  2.சகிப்புத் தன்மை என்கிற பெயரில் ஏமாந்த ராசாக்கள் நிறைய பேர் இருக்குற சமயம் என்பதால் தான்.

  3. இதில், நன்கு தெளிந்து ஞானம் பெற்ற ஆன்மீக குருக்கள், இந்த விமர்சனங்களை கண்டுகொள்வதே இல்லை. அனைத்தையும் துறந்த குருவிற்கு, விமர்சனங்களே அறியாமையாக தெரியும் போலும். : )

  4.தம்முடைய சமயத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருத்தல்.

 13. நண்பர்களே தங்களின் ஆதங்கத்திற்க்கும் கோபத்திற்க்கும் தேடுதலுக்கும் மிக சரியான தீர்வு இஸ்லாம். ஏன்னென்றால் அது மதம் அல்ல மார்க்கம். துரதிஸ்ட்டம் இஸ்லாமியர்கள் 99% இஸ்லாத்தின் படி வாழுவதில்லை.காரணம் அவர்கள் இஸ்லாத்தை அறிந்தவர்கள் அல்ல இஸ்லாமியர்களுக்கு பிறந்தவர்கள்.
  சிந்திப்பவர்களுக்கு இது நேர்வழிக்காட்டும் ‍‍ ‍‍_அல்குர்ஆன்

  1. மிஸ்டர் பரக்கத், என் ஆதங்கம் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் போதிக்க வந்து விடுகிறார்கள் என்பதே. அப்படிப் புரிந்து கொள்ளாதவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. எல்லா மதங்களுமே வாழும் வழிகள்தான். திருக் குர் ஆன் மட்டுமில்லை, பைபிள், ஆதிக்கிரந்தம், கீதை, வேதங்கள், ஜென் கதைகள், விவேகானந்தர், ராமானுஜர், ஆதிசங்கரர் போதனைகள் எல்லாவற்றிலும் சிந்திக்கக் கூடிய செய்திகள் உண்டு. எந்த ஒன்றை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு வாழ்ந்தாலும் மனிதன் கரை சேர்ந்து விடலாம்.

   ஆன்மிகத் தத்துவங்களைப் புரிந்து கொள்கிற அறிவும், புரியாதவனை அடையாளம் கண்டு கொள்கிற திறனும் நமக்கு வேண்டும்.

   லட்சுமி விலாசில் இட்டிலி நன்றாக இல்லை, நாளையிலிருந்து சங்கரய்யர் கடையில்தான் சாப்பிடுவேன் என்கிற மாதிரி மனப்பாங்குகள் ஆன்மிகத்தில் அவசியமில்லை.

 14. //நண்பர்களே தங்களின் ஆதங்கத்திற்க்கும் கோபத்திற்க்கும் தேடுதலுக்கும் மிக சரியான தீர்வு இஸ்லாம். ஏன்னென்றால் அது மதம் அல்ல மார்க்கம். துரதிஸ்ட்டம் இஸ்லாமியர்கள் 99% இஸ்லாத்தின் படி வாழுவதில்லை.காரணம் அவர்கள் இஸ்லாத்தை அறிந்தவர்கள் அல்ல இஸ்லாமியர்களுக்கு பிறந்தவர்கள்.
  சிந்திப்பவர்களுக்கு இது நேர்வழிக்காட்டும் //

  இந்து மதம் விமர்சனம் ஆவதற்கு காரணம் நண்பரே சுதந்திரம். சுதந்திரம் மட்டும் தாம்.

 15. ஜவஹர்,

  என்னுடைய பின்னூட்டத்தை எடிட் செய்ததில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.

  இதுதான் ஒரு இந்து மனநிலை.

  இங்கே காந்தியடிகளின் ஒரு கொட்டேஷன: “Muslims are bullies and Hindus cowards”

  நீங்கள் மீண்டும் ஒரு முறை நிரூப்பித்துவிட்டீர்கள்.

  காந்தி சொன்னது சுமார் 60/70 வருடங்களுக்கு முன்னால். நாம் இன்னும் வளரவில்லை 😦

  ஆனால் நண்பரே உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்கிறது.

  1. பெருந்தன்மைக்கு நன்றி சிவா. நாம் சொல்ல விரும்புவதை எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்கிற மாதிரி சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

 16. ஜவஹர்,

  அனைவருக்கும் ஏற்றார்போல் என் மறுமொழி. இதை நீங்கள் வெளியிடவிட்டால்கூட நான் வருந்த மட்டேன்.
  ————————————————————
  இங்கே இந்துமதம் ஏன் விமர்சனத்திற்க்குள்ளாகிறது எனபதே கேள்வி.

  சிறந்த மதம் இந்துத்வமா அல்லது முகமதிஸிசமாக என்பது கேள்வி அல்ல.

  கிடைத்த கேப்பில் சைக்கிள் ஓட்டுகிறார் திரு பரக்கத்.

  மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்பது இந்து மதத்தின் மையகருத்து.

  காலத்திற்க்கு தகுந்தாற்போல் பற்பல மாற்றங்களிக்காக அமைதியான முறையில் வாழும் இந்துக்களிடையே அவ்வப்போது சுயபரிசோதனைகள் நடக்கும்.

  எங்கள் வாழ்க்கையில் ஒற்றைப் பரிமாணமும், ஒரு வழி பாதையும், மாறத கடைசி வார்த்தைகளும் இல்லை.

  இதுவே கட்டற்ற சுதந்திரத்தையும் இந்த ப்ரபஞ்சமே நாம் என்ற உணர்வையும், படைத்தவனும் படைப்பும் வேறு வேறல்ல என்ற உணர்வையும் எங்களுக்கு அளிக்கிறது.

  இதையெல்லாம் விட்டுவிட்டு இனியமார்க்கம் என சொல்லும் தேன் தடவிய வார்த்தைகளில் எங்கள் மனங்கள் இடம் கொடா.

  முன்பே என் பதிவுகளில் சொல்லியதை இங்கே நினைவு கூறுகிறேன்.

  நான் தான் டாப்பு என்று சொல்லுவதில் தவறில்லை மீதியெல்லாம் டூப்பு என்பது மிக மிக மிக மிக தவறு

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s