குட் மார்னிங்ன்னா கும்புடறேன் சாமியா?

“குட் மார்னிங்” என்று சொன்ன என்னை ஆச்சரியமாகப் பார்த்தான் தொழிற் சங்க செயலாளர் தேவராஜ்.

“என்ன அப்படிப் பார்க்கறே?”

“இல்லே, இப்படியெல்லாம் பண்ணீங்கன்னா நாளைலேர்ந்து நான் குட் மார்னிங் சொல்வேன்னு நினைச்சீங்களா?”

எனக்கு சிரிப்பு வந்தது.

“ஏன், சொன்னா உன் சுய கௌரவம் பாதிக்கப்ப்படும்ன்னு நினைக்கிறியா?”

“அதெல்லாம் கிடையாது சார். என் வேலை எனக்கு, உங்க வேலை உங்களுக்கு. ரெண்டு பேருக்கும் சம்பளம் தர்றது யாரோ. எதுக்காக உங்களைப் பார்த்ததும் ‘கும்புடறேன் எசமான்’ ங்கிற மாதிரி குட் மார்னிங் போடணும்?”

தேவராஜின் படிப்புக்கும், அனுபவத்துக்கும் அவன் இந்த மாதிரி நினைப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தவர்கள் – நிறையப் படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட இது மாதிரி நம்புகிறார்கள்.

“தேவராஜ், குட் மார்னிங்கோட பின்னணியிலே கொஞ்சம் சரித்திரம், பூகோளம் எல்லாம் இருக்கு. அது தெரிஞ்சா உன்னோட ஐடியாவை மாத்திக்குவேன்னு நினைக்கிறேன்”

“ம்ம்ம்… இன்னைக்கு குட் மார்னிங் பத்தி கிளாஸ் எடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க. வேணாம்ன்னா விடப்போறீங்களா… சொல்லுங்க”

“இங்கிலாந்திலே எப்பவுமே மப்பு, மந்தாரம், மழை. அவங்க சூரியனைப் பார்க்கிறதே அபூர்வம். ரெயின்,ரெயின் கோ அவே ன்னு பாட்டெல்லாம் அவங்க பாடினதுக்கு காரணம் கூட இதுதான். என்னைக்காவது காலையிலே சூரிய வெளிச்சம் பார்த்துட்டாங்கன்னா அவங்களுக்கு உற்சாகம் ஆயிடும். பெரியவங்க சின்னவங்கன்னு வித்யாசம் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ‘குட் மார்னிங்’ ன்னு சந்தோசத்தைப் பகிர்ந்துப்பாங்க.

அவங்க இந்தியாவுக்கு வந்தும் அந்தப் பழக்கத்தை விட முடியல்லே.

ஆனா இங்கே அனுதினமும் சூரியோதயக் காலைதான். அதனாலே தினமும் காலையிலே பார்க்கிறப்ப ‘குட் மார்னிங்’ சொல்ற பழக்கம் வந்திடுச்சு.”

“குட் மார்னிங் சார்”

Advertisements

5 comments

  1. குட் மார்னிங் என்றால் கும்பிடுறேன் சாமி. நம்ம சாமி கும்பிடுறதை தான் அவங்க வழக்கப்படி சொல்லி இருக்காங்க. இது கூழை கும்பிடு அல்ல. சாமி கும்பிடு.சூரிய நமஸ்காரம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s